Home Uncategorized Create your free eCommerce store today

Create your free eCommerce store today

33
0

இன்று இணையம் இருக்கும் நிலையில் ஒரு கடைக்காரர் தனக்கான இணையதளத்தை தானே கிரியேட் செய்துகொள்வது மிகவும் எளிமையானது. ஒரு டுமைன் மட்டும் வாங்கிகொண்டு, shared hosting யில் ஒரு வருடத்துக்கோ அல்லது 2 வருடத்துக்கோ சப்ஸ்கிரைஸ் செய்தால் அவர்களுக்கான இணையத்தளம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அது ஒரு ஓரத்தில் இருக்கும்.

நாம் ஒரு கடையை அனுகி, அவர்களுக்கு pricefinder.in/store என்று கொடுத்தால் அவர்கள் அதனை எப்படி பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது அவர்களுக்கு தங்களுடைய வாடிக்கையாளர்கள் வழக்கமான ஆர்டரை கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதேபோல, Pricefinder ஒரு கடையில் இருக்கிறது என்றால், கஸ்டமர்களுக்கு அந்த கடையில் என்னன்ன பொருட்கள் என்ன விலையில் கிடைக்கிறது என்பதையும், தேவையான பொருட்களை செலக்ட் செய்து ஆர்டர் கொடுத்து ஸ்டோர் பிக்கப் செய்வதற்கும், இத்தனை மணிக்கு வந்து வாங்கி கொள்கிறேன் என்பதற்கும் Pricefinde உபயோகமாக இருக்கும்.

ஒவ்வொரு வென்டாரும் அவர்களுக்கான விலைப்பட்டியலை தயார் செய்து கொடுத்தால் அதனை ஏற்றி தருகிறோம். மாறிக்கொண்டே இருக்கும் விலைப்பட்டியலை அவர்கள் மிகவும் எளிதாக மாற்றி கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

வெண்டார்களுக்கு வரும் ஆர்டர்கள் அவர்களின் டேஷ்போர்டில் காணக்கிடைக்கும். அத்துடன் அனைத்து ஆர்டர்களையும் டிராக் செய்கிறோம். முடிந்தால் வாட்சப் மூலமாக வெண்டார்களுக்கு notification அனுப்புவோம். அதனால் எந்த ஆர்டரும் கவனிக்க முடியாமல் போக வாய்ப்பு இல்லை.

டெலிவரி செய்யும் அளவுக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை அதனால்தான் நாங்கள் நேரடியாக கடைக்காரர்களே அந்தந்த ஆர்டரை டெலிவரி செய்யும் விதமாக அமைத்திருக்கிறோம். ஹைப்பர் லோக்கலில் அந்தந்த பகுதியில் ஆர்டர்களை டெலிவிரி செய்வது கடைகாரர்களுக்கு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் இப்பொழுதெல்லாம் கடைகாரர்கள் கடைக்கு 2 டெலிவரி ஆட்களை பணிக்கு வைத்திருகிறார்கள்.

இதில் சேருவதற்கு எந்த வெண்டாருக்கும் எந்த தடையும் இல்லை. அதேபோல் அவர்கள் வழங்கும் விலைப்பட்டியல் மற்ற கடைகாரர்களின் விலைப்பட்டியோலோடு கம்பேர் செய்து பார்க்கும் விதமாக இந்த தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படை தன்மை என்பது Pricefinder யின் அடிப்படை கொள்கை. இதில் எந்த சமரசமும் இல்லை.

அதேபோல, Service provider களின் தொலைப்பேசி எண்கள் வெளியில் தெரியும், அதனை கொண்டு பயனார்கள் நேடியாக அவர்களை அணுகலாம். அல்லது எங்கள் மூலமாக அவர்களை அணுகலாம். ஆனால் எந்த யூசரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்களின் முடிவு அவர்களின் சுதந்திரம்.

பிரபல மெடிக்கல் ஷாப்பில் ஒரு பெண்மனி தயங்கி தயங்கி கடைக்காரரிடம் கேட்டார், நீங்கள் பொருளை கொடுத்து பிறகு பணம் வாங்கி கொள்வீர்களா? இல்லை மேடம், நாங்கள் அன்றன்று பணத்தை கட்டிவிடவேண்டும் என்றார் கடைக்காரர். அப்படியென்றால் கடன் கொடுக்கமாட்டீர்களா என்று ஏக்கத்தோடு கேட்டார்.  பல ஆயிரங்களுக்கு நாங்கள் வாங்குகிறோம் ஆனால் ஒரு ஆயிரம் கூட கடனாக கொடுப்பதில்லை இவர்கள் என்று என்னிடம் சொன்னார். மேடம், ஏன் ஆயிரம் என்கிறீர்கள், 100 ரூபாய் பொருளை வாங்கிகொண்டு நாளை தருகிறேன் என்று கேளுங்கள், கொடுக்கிறார்களா என்று பார்ப்போம் என்றேன்.

இந்த விஷயத்தை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், கஸ்டர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் இதுபோன்ற விஷயங்களை யாராவது செய்து தரமாட்டார்களா என்று ஏக்கம் எல்லா மக்களிடமும் இருக்கிறது. கேஷ்பேக் பெரிய விஷயம் இல்லை. கேஷே இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்பது என்னுடைய கேள்வி.

ஒரு ரூபாய் கூட கடன் கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஏன் ஒருவரிடமே வாங்கவேண்டும் என்ற அவநம்பிக்கை எல்லாருக்கும் வந்துவிடுகிறது. இந்த தளம் மூலமாக அந்த பிரச்சனையை சரிசெய்யவேண்டும் என்பது எனக்கு முன்பு உள்ள சவால்.

வெண்டார்களுக்கு இந்த தளம் நல்லது செய்யும் அதேவேளையில் அவர்களின் விலைப்பட்டியலை அடுத்த கடைகாரர்களுடன் கம்பேர் செய்து விலை அதிகமாக குறைவா என்பதையும் காட்டிகொடுத்துவிடும். சரியான விலை, தரமான பொருள் நீங்கள் கொடுக்க முன்வரும்போது, சிறிய அளவிலான விலை ஏற்ற இறக்கங்களை மக்கள் பெரிதாக கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

இங்கே இன்னொரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். வெண்டார் பிரைஸ் கேட்டலாக் என்பது வெண்டார்களின் டைரக்டரில் இருக்கும். இதுவே நீங்கள் அந்த பொருளை கிளிக் செய்து Product single page க்கு போனால் அங்கே வேறு ஒரு விலை தெரியும். குழம்ப வேண்டாம். அது ஒரு பொருளின் பொதுவான விலை. அதாவது மார்கெட்டில் காணக்கிடைக்கும் பொதுவான விலை. அந்த பொருளை நீங்கள் Add to cart செய்தால் நாங்கள் Pricefinder தான் செலிவரி செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் partner shop களில் இருந்த அந்த பொருட்களை வாங்கி டெலிவரி செய்வோம்.

எனக்கு தெரிந்து இதுதான் நான் சொல்லநினைத்த விஷயம். மேலும் பேசுவோம். இப்பொழுது வெண்டார்களுக்கு இலவச Trial அக்கொண்டுகளை கொடுக்கிறோம். இது எத்தனை மாதங்களுக்கு இலவசமாக இருக்கும் என்பது சொல்லமுடியாது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மார்கெட்டில் உங்கள் பொருட்களை விளம்பரம் செய்யுங்கள் மற்றும் அதிகமான விற்பனைக்கு அடிகோலுங்கள்.

இணைய விருப்பம் உள்ளவர்கள் hello@pricefinder.in க்கு தொடர்பு கொள்ளவும்.