கியூவில் நின்று பீட்சா மற்றும் சிக்கன் ப்ரை வாங்குவதற்குள் டென்ஷன் ஏறிவிடுகிறது. இதில் முன்னால் நின்ற ஒருவர் கூப்பன் கோடோ ஏதோ ஒன்று கொடுத்து அதை கவுண்டரில் உள்ளவர் feed செய்வதற்கு அநேகமாக 10 to 15 நிமிடங்கள் ஆனது. போங்கடா நீங்களும் உங்க சிக்கனும் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.
சரி வேறு ஏதேனும் வாங்கலாம் என்று பல நிமிடங்கள் காத்திருந்து நின்ற கியூவை விட்டு நகர்ந்து வேறு கடைக்கு சென்றால் அங்கே எந்த வகை பீட்சா ஆர்டர் செய்வது என்பதை ஒருவர் கவுண்டரில் பொறுமையாக விசாரித்து கொண்டிருந்தார், அவர்களும் பொறுமையாக பதில் அளித்து கொண்டிருந்தார்கள்.
மொத்தமாக அரைமணி நேரம் மேலாக நிற்கிறேன் ஆனால் இன்னும் ஆர்டர் கொடுக்கமுடியவில்லை. நான் தனியாக வந்திருந்தாலும் பரவாயில்லை. ச்சை, இது வேலைக்கு ஆகாது என்று கொஞ்சமாக சத்தமாக மேடம், பெப்பி பன்னீர் பீட்சா ஒன்று என்றேன். என்னை பார்த்துவிட்டு, இதை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.
பரவாயில்லை டோக்கன் போட்டாகிவிட்டது என்று இரண்டாவது ஆளாக நின்றிருந்தால், Excuse me என்று ஒருவர் மெனு கார்டின் விலைப்பட்டியிலில் ஒரு விரல் வைத்துகொண்டு கவுண்டரில் உள்ள பெண்மணியிடம் ஆர்டர் கொடுக்க என்னை முந்தி சென்றார். ஓகே, இது வேலைக்கு ஆகாது என்று அவநம்பிக்கையில் நின்றேன்.
அடுத்தது, என்று என்று என்னை முந்தி சென்ற அந்த இளைஞனிடம் கேட்டவர், ஒரு நிமிடம் என்னை பார்த்தார், பிறகு சார் சொல்லுங்க என்று தூரத்தில் இருந்தே கேட்டார். மேடம் அந்த பெப்பி பன்னீரை மட்டும் கொடுங்கள் மேடம் என்று சொல்லி அர்டரை கொடுத்து முடித்தேன்.
ஒரு பீட்சாவும், சிக்கனும் ப்ரையும் ஆர்டர் செய்வதற்கே அரைமணி நேரத்திற்கும் மேலாக நிற்க வேண்டி இருக்கிறது, பிறகு அந்த பீட்சா வருவதற்கு 20 நிமிடம் மற்றும் சிக்கன் வருவதற்கு 15 நிமிடம் என 1 மணி நேரம் ஒருவர் சாப்பிட காத்திருப்பதால் என்ன பயன்?
எந்த நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து இந்த உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கையில் எல்லாரிடமும் மொபைல் ஆப் இருக்கிறது. இல்லையா ?பிரவுசர் இருக்கிறது. ஆர்டர் செய்து பில் அமொண்ட்டை ஆன்லைனிலேயே கட்டி ஏன் அந்த ஸ்டோரில் பிக்கப் செய்யமுடியாதா என்ன?
அது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா? மிகவும் வேதனையாக இருக்கிறது இதை எல்லாம் பார்ப்பதற்கு. பெரிய மால்கள் முதலில் இந்த விஷயங்களை செய்யமுன்வரவேண்டும் ஏனெனில் அவர்களால்தான் இதனை முன்னெடுக்கமுடியும். ஏதோ எங்களால் ஆன ஒரு சிறு விஷயத்தை இந்த Pricefinder மூலம் நாங்கள் தீர்க்கிறோம்.
எங்களிடம் store pickup என்பது முதன்மையானது. ஆர்டர் செய்யுங்கள், காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. கியூ இல்லை. தாமதம் இல்லை.