Stranger Things – Review

0.000
Last Modified
Detailed Information

Spoiler alert: இன்னும் இந்த சீரிஸை பார்க்கவில்லை எனில் இதை படிக்காதீர்கள் ஏனெனில் முழு கதையையே சொல்லி இருப்பேன். பிறகு உங்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.

இந்த சீரிஸ் நண்பர் ஒருவரால் அறிமுகமானது. ஒரு ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக இருக்கும். முதல் சீசனில் முதல் இரண்டு எபிசோட் பார்த்துவிட்டு, தூக்கிபோட்டுவிட்டேன். எனக்கு என்னவோஅவ்வளவு சுவாரசிமாக இருக்கவில்லை. மீண்டும் ஒரு முறை அதே நண்பரை சந்தித்தபோது பார்த்துவிட்டீர்களா என்று கேட்டார். அட போங்க அது அவ்வளவு நல்லாயில்லை அதனால் நிறுத்திட்டேன் என்று சொன்னேன். இல்லையே நல்லா இருக்குமே என்று சொன்னார்.

பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். அதே இரண்டு எபிசோடுடன் முடித்துவிட்டேன். அட போங்கய்யா இது வேலைக்கு ஆகாது என்று விட்டுவிட்டேன். Netflix யின் பிரபலமான ஒரு தொடர் ஏன் என்னால் இரண்டு எபிசோடுக்கு மேல் பார்க்கமுடியவில்லை என்று யோசித்தேன். சரி ஆனது ஆகட்டும், எப்படியாவது இந்த முறை ஒரு நான்கு எபிசோடாவது பார்க்கவேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்னார் ஆரம்பித்த தொடர் இதோ இன்றோடு முடிவடைந்தது. 4 சீசனும் பார்த்துவிட்டேன். எனக்கே பிரமிப்பு. எப்படி இது சாத்தியம்.

புளு சட்டை மாறன் அடிக்கடி சொல்வது போல், படம் ஆரம்பித்த 20 நிமிடத்திற்குள் கதை எதை நோக்கி நகர்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு புரிந்துவிடவேண்டும் இல்லையென்றால் கதையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும் என்பது உண்மைதான். Stranger Things எதை நோக்கி நகர்கிறது என்பதே பல எபிசோடுகளுக்கு நமக்கு தெரியாது. நான் லீனியர் அடிப்படையில் நகரும் கதையில் நாம் யாரை follow செய்வது என்பதே புரியாமல் இருந்தது. கதையின் ஹீரோயின் Eleven தனக்கு நடந்த எல்லாவற்றையும் மறந்த ஒருவராக அன்றுதான் தனது வாழ்க்கையை ஆரம்பிப்பதுபோல் காட்டுகிறார்கள். இந்த கதையை இத்தனை சீரிஸ் எடுப்பதற்கு அவருக்கு நேர்ந்த அந்த ஞாபக மறதிதான் முதன்மையான காரணம். ஒவ்வொரு சீசனிலும் அவர் தன் கடந்துபோன அல்லது நடந்துபோன சம்பவங்களை திரும்ப பெருகிறார். அதன்வழியே இயக்குனர்கள் நமக்கு கதையை சொல்கிறார்கள்.

D&D கேம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் படம் முழுவதும் அதுதான் முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு முக்கிய காரணி. சிறுவர்கள் ஆடும் கேமுக்கும், நடக்கும் சம்பவங்களுக்கும் நெருக்கமான தொடர்பை உருவாக்கி, அந்த சிறுவர்கள் அந்த சம்பவங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதுதான் கதை.

இந்த மெஸ்மரிசம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா? பார்வை மூலமாகவே ஒரு object ஐ நகர்த்துவது, பறக்கவிடுவது என்பது மாதிரியான விஷயங்களை செய்வது என கேள்விபட்டு இருக்கிறேன். நம் மூளைக்கு அப்படி ஒரு பவர் உண்மையிலேயே இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் நாள்பட்ட ப்ராக்டிஸ் மூலமாக சிறு குழந்தை முதலே அப்படிபட்ட பிராக்டிஸ் கொடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் 1, 2, 3, ..11 என கையில் முத்திரை குத்தி ஒரு அமைப்பு ரகசியமாக இந்த வேலை செய்கிறது.

3 சீசன்கள் வரை வேறு உலகத்தில் இருந்த வந்த ஒரு மான்ஸ்டரை காட்டி இதுதான் Strager thing என காட்டி கொண்டிருந்த இயக்குனர், நான்காவது சீசனில்தான் அந்த மான்ஸ்டரை உருவாக்கிய அந்த முக்கிய வில்லனை களத்தில் இறக்குவார். ஆனால் எனக்கு பிடிபடாதது வேறு உலகத்தில் சிக்கிகொண்ட ஒரு வில்லன் தான் கற்றுகொண்ட அத்தனை வித்தையையும் இறக்கி இந்த உலகை ஆளநினைக்கிறான் அது சரி ஆனால் அந்த Upside down உலகை யார்தான் ஆளுகிறார்கள். ஒரு shadow particles ஐ காட்டுகிறார்கள். அதைபற்றி எனக்கு புரியவில்லை.

இன்னொரு விஷயம், மெஸ்மரிசம் போன்று ஒன்றை செய்துவரும் வில்லன் யார் மூளையையும் ஊடுருவும் சக்தி பெறுபவனாக காட்டுகிறார்கள். Hawkins ஐ புரட்டி போட்டால் ஒரு உலகம் இருக்கிறது. அந்த நகரம் அப்படியே Hawkins போலவே இருக்கிறது ஆனால் முழுவதும் சிதிலமடைந்து இருக்கிறது. இது physical நகரமா அல்லது 001 உருவாக்கிய virtual நகரமாக என தெரியவில்லை.

தன்னுடைய நினைவுகளை கொண்டு தான் உருவாக்கிய தன் வீட்டில் இருந்துகொண்டு தன்னை வெளிகொணருவதற்கு நான்கு சம்பவங்களை செய்யும் வில்லன், தன்னுடைய வழியை(கேட்டை) இறுதியாக ஓப்பன் செய்கிறான்.

இந்த சீரிஸ் சிக்கலான விஷயங்களை உள்ளடக்கியது. கற்பனைக்கு எட்டாத விஷயங்கள். கனவில் இருப்பதை காட்டுவதற்கு ஒரு தனி உலகை காட்டுவார்கள் அங்கே பாதம் நனைக்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கும், background எல்லாமே கருப்பாக இருக்கும். இதனை முதன்முதலில் அவென்ஜெர்ஸ் இன்பினிட்டி வாரில் டானுஷ் கமோராவை சந்திப்பதுபோல காட்டுவார்கள். நன்றாக இருந்தது. இந்த சீரிஸ் அவன்ஜெர்ஸ் முன்னாடி வந்ததோ அல்லது பின்னாடி வந்ததோ ஆனால் இந்த காட்சி அமைப்பு நன்றாக இருந்தது. Eleven தன் கனவுகளில் வேறு உலகயோ அல்லது இந்த உலகின் ஆட்களையோ உளவு பார்க்கும்போது எல்லாம் இந்த காட்சி வடிவமைப்பைதான் சீரிஸ் முழுவதும் காண்பித்து இருப்பார்கள்.

படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கடைசி கிளைமேக்சை டாப்பாக வைத்து இருந்தால் நம்முடைய நினைவானது அந்த கடைசி கிளைமேக்ஸை அசைபோட்டுவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிடும். இந்த சீரிஸ் மொத்தம் 4 சீசன்கள். மூன்றாம் சீசன் வரை Demogorgon மற்றும் Upside down உலகை பார்த்துவிட்டு, மூன்றாம் சீசன் இறுதியில் Upside down கேட்டை மூடிவிட்டு, இருக்கும் அத்தனை demogorgon களையும் ஒழிக்கும்போது, எனக்கு பிடித்த காட்சிகளாக இருந்த எழுத நினைத்த அனைத்தும், எப்பொழுது 001 ஐ நான்காம் சீசனில் காட்டினோர்களோ எல்லாமே அடிபட்டுவிட்டது என்றே சொல்வேன். அப்படி என்றால் முன்று சீசன்கள் மனதில் பதியவில்லையா? அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா என கேட்பீர்கள். அதாவது பரபர என ஆரம்பித்து அதே வேகத்தில் முடியும் சீசன்களாக அவை இருந்தன. பரபரப்புக்கு பஞ்சமில்லை ஆனால் அந்த Upside down கேட் ஏன் ஓப்பன் செய்யப்பட்டது என்பதற்கான விடை தெரியாததால் ஏதோ ஒரு குறை இருந்ததாகவே தெரிந்தது.

வில்லன் கேரக்டர் வடிவமைப்பு என்பது மிகவும் ஸ்டாங்காக இருந்தது. அதனால் முன்பு ரசித்த, அசைபோட்ட காட்சிகள் அனைத்தும் ஒரு நொடியில் களைந்துவிட்டது. மிகப்பெரிய வில்லனை சந்திப்பதற்கு முன்னால் அவனுடைய படை வீரர்களையும் அவனுடைய தளபதிகளையும் வீழ்த்தவேண்டும், அப்படி உயிரோடு இருந்தால் அந்த வில்லனை சந்திக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

வில்லனை ஒழிப்பதில் இருக்கும் பிரச்சனையே, நீங்கள் பார்ப்பது எல்லாம் அவனுடைய shadow தான் அதாவது உங்கள் கனவில் அவன் நடமாடுவான் உங்களை வெல்லுவான். அவன் physical ஆக இருக்கும் இடம் என்பதை Upside down என்று சொன்னாலும் அங்கு அவனுக்கு தீயிட்டு கொளுத்தி பிறகும் அவன் சாதாரணமாக தப்பித்து ஓடுகிறான் என்றால் அந்த Upside down ஒரு கனவின் நீட்சி. Nancy Upside down யிலிருந்து கேட் வழியே நிஜ உலகுக்கு வரும்போது, அவர் விழுவது நிஜ உலகமாக இருக்காது அது Upside down யின் ஒரு பகுதியாகவே இருக்கும் ஆக அந்த கற்பனை உலகம் வில்லன் உருவாக்கிய கனவு உலகம். அவன் நினைத்தால் நீங்கள் வெளியே வரலாம் அல்லது சுழலில் மாட்டுவீர்கள்.

முடிவில்லா கனவுலகில் சஞ்சரிக்கும் இருவேறு சூப்பர் ஹீரோக்கள் தங்களின் பலத்தை காட்டுவதற்கு இரு தரப்பிலும் இருந்து மோதிகொள்கிறார்கள். யாருக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல என முடிகிறது கதை. ஆனால் ஜெயித்தது என்னவோ வில்லன்தான் என நினைக்கிறேன். சீசன் 5 வருகிறது. சீசன் 4யின் இறுதியில் upside down gate ஆனது ஓப்பன் செய்யப்பட்டு நம் உலகிற்கு வில்லன் வருகிறான் நேரடியாக. இனி கனவுலகம் கிடையாது டைரக்டாக நிஜ உலகம்தான்.

Joyce மற்றும் அவரது குடும்பம்தான் முதல் இரண்டு சீசனில் முக்கியமானவர்கள். தன் மகனை காப்பாற்ற அவர் போராடும் அந்த போர்குணம் எனக்கு KGF யின் அந்த தாயை நினைவுபடுத்தியது. பிடிவாதமாக தன் மகனை அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து அவர் காக்கும் காட்சிகள் எல்லாம் அருமையானது.

இந்த சீரிஸ் முழுவதும் நான் மிகவும் ரசித்தது அந்த சிறுவன் Dustin உடைய நடிப்பைதான். ஒரு Geek ஆக படம் முழுவதும் அந்த சிறுவன் செய்வது எல்லாம்தான் அந்த படத்தின் முக்கியமான எதிரியை அடையாளம் காண பயன்படுகிறது. அந்த சிறுவன்தான் படத்தின் ஹீரோ எனலாம்.

Sci-Fi படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இந்த சீரிஸ் பிடித்தது. சீசன் 5 யில் சந்திப்போம்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories