ஜூலை 1 முதல் UA analtyics ஆனது காலாவதி ஆகிவிடும் அதற்கு பதிலாக GA4 analtyics ஆனது செயல்பட தொடங்கும். அநேகமாக கூகுள் பல மாதங்கள் டைம் கொடுத்திருந்தது இந்த மாற்றத்திற்காக, அதனால் நிறைய பேர் முன்பே மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மாற்றாதவர்கள் உடனே மாற்றி கொள்ளுங்கள்.
GA4 யில் recommened events ஐ கூகுள் டேட்டா லேயர் கொண்டு நாம் குறிப்பிட்ட events களை டிராக் செய்யமுடியும். purchase, view_cart, view_item, view_item_list, begin_checkout, add_to_cart என 15 event களுக்கு அவர்களே டேட்டா லேயரை கொடுத்துவிடுகிறார்கள். இது ஆன்லைன் ஸ்டோர்ஸ்க்கு மட்டுமான டேட்டா லேயர். மற்றபடி பொதுவான டேட்டா லேயரும் இருக்கிறது.
Shopify ஆனது இதில் ஆட்டோமேடிக்காக சில events களை டிராக் செய்துவிடுகிறது. உதராணத்திற்கு purchase, page_view, search, view_item, add_to_cart, begin_checkout, add_payment_info என்ற 7 events களை Shopify ஆனது அதுவே டிராக் செய்துவிடுகிறது. மேற்கொண்டு உங்களுக்கு events களை டிராக் செய்ய டேட்டா லேயரோ அல்லது custom functionality மூலம் நாம் GA4 யில் டிராக் செய்யமுடியும்.
Shopify ஆனது detailed ஆன ரிப்போர்ட் கொடுத்தாலும், உங்களின் பிஸினஸ்க்கு GA4 முக்கியமான ஒன்று. உங்களுக்கு இது தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.