மடிப்பாக்கம் வீட்டின் பக்கத்தில் காலி மனை உள்ளது. அது இப்பொழுது திறந்தவெளி குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. அதில் யார் குப்பை கொட்டுகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை என நான் சொன்னாலும் குப்பை கொட்டுபவர்கள் யாராக இருக்ககூடும்? அந்த தெருவில் இருப்பவர்களாகத்தான் இருக்ககூடும். இதில் என்ன ஒரு சுவாரசியம் என்றால் இங்கு குப்பை போடுவதற்காகவே ஒரு சிலர் வேறு தெருவில் இருந்து வருகிறார்கள், போகிற போக்கில் தூக்கி எறிகிறார்கள்.
எனது வீட்டிற்கு வந்த உறவினர் திறந்த வெளி குப்பையாக காட்சி அளிக்கும் காலி மனையை பார்த்து இது நோய்களை நாமே வரவழைப்பதற்கு சமம் அதனால் நீ ஜாக்கிரதையாக இரு என எச்சரித்துவிட்டு போனார்.
கடந்த ஒரு மாதமாக நான் வீட்டிற்கு பார்சல் கட்டி வரும் உணவு பொட்டலங்களின் மீதத்தை சென்னை கார்பரேஷன் வைத்துள்ள குப்பை தொட்டிகளில் போட்டுவிட்டு ஆபிஸ் செல்கிறேன். ஒரு நாள் கூட திடலில் தூக்கி எரிந்ததில்லை ஏனெனல் என் வீடு பக்கத்தில் இருக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு நான் சொல்லி கொள்வதெல்லாம் ஒன்றுதான், யார் இதுபோல திறந்தவெளியில் குப்பை போடுகிறார்களோ அவர்களின் வீட்டின் முன்பு குப்பை சேகரிக்கும் தொட்டிகளை வைக்கவும். அந்த தெருவில் இருக்கும் அனைவரையும் அந்த தொட்டியில் குப்பைகளை போட சொல்லவும். அப்பொழுதுதான் இதுபோன்ற ஆட்கள் திருந்துவார்கள்.
தினமும் வரும் குப்பை சேகரிக்கும் வண்டியில் குப்பை போடுவதற்கு சோம்பேறிதனம், ஆங்காங்கே வைத்து இருக்கும் குப்பை தொட்டிகளில் போடுவதற்கு அலட்சியம் என இவர்களுக்கு இருக்கும் சோம்பேரிதனத்தால் யார் அவதிப்படுவது.? தண்டனைகளை தீவிரப்படுத்தினால்தான் குற்றங்கள் குறையும்.