ஹோட்டல் ஒன்றில் ஒருவரே டேபிளை துடைத்து பின்பு துடைத்த அந்த துணியை வாஷ்பேசினில் துவைத்து தனது கையையும் வாஷ் செய்துவிட்டு இலையை போடுகிறார், தண்ணீரை ஊற்றுகிறார் பின்பு சூடான இட்லியை தன் கையால் இலையில் வைக்கிறார். இட்லியை வைத்தவரே சட்னி சாம்பார், காரச்சட்னி வாளிகளை தூக்கிகொண்டு வந்து அதனையும் பரிமாறுகிறார். சாப்பிட்டு நாம் இலையை எடுத்த பிறகு மீண்டும் கிளினிங், வாஷிங், உணவு பரிமாறுதல்.
அவர் எத்தனை முறை பரிமாறுகிறார் என்பதை தாண்டி அவர் எத்தனை முறை தண்ணீரில் தன் கையை வாஷ் செய்கிறார் என்று யோசித்து பார்க்கிறேன். ஒரு டேபிளுக்கு அதிகபட்சமாக இரண்டு முறை என்றால் மூன்று டேபிளுக்கு 6 முறை. குறைந்த பட்சம் 10 தடவை இது நடக்கிறது என்றால் அவர் 60 முறை கையை கழுவியிருக்கவேண்டும். இது ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு. அடுத்த முறை உணவு பரிமாறும்போது அவர் கையை பார்க்கவேண்டும் என தீர்மாணித்திருக்கிறேன்.