இந்த mohamedkamil.com யின் நோக்கமே இங்கு கிடைக்கும் பொருட்கள் மற்றும் சர்வீஸ்களின் சந்தை மதிப்பை வெளிக்கொணருவது என்பதுதான். சில சர்வீஸ் பிஸினஸ்களை நாங்கள் இங்கே பதிவிட்டிருக்கிறோம்அவை நாங்கள் நடத்தும் பிஸினஸ் என்பதால் எங்களுக்கு இதனுடைய pricing நன்றாக தெரியும் அதனால் பதிவிட்டோம். மற்ற சர்வீஸ்கள் எல்லாம் நாங்கள் கிடைக்கப்பெற்ற சர்வீஸ்கள் அதனால் அவர்களின் போன் நம்பரை பதிவிட்டிருக்கிறோம். இது சிலருக்கு தேவைப்படலாம்.
நிற்க. நான் இங்கே சொல்ல நினைத்த விஷயம் ஒன்றுதான். அதாவது நாங்கள் இப்பொழுது Shopify எனும் platform யில் வேலை செய்து கொடுக்கிறோம். தற்சமயம் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை employees கிடைக்காதது. நல்ல அனுபவம் மிக்க ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்றால் அவர் கேட்கும் சம்பளம் எங்களால் கொடுக்க முடியாது. அதேபோல் கொரானாவிற்கு பிறகு அனைவரும் WFH Work From Home என்று வீட்டியிலிருந்தே வேலை செய்வதனால் யாரும் ஆபிஸ் வரவேண்டியதில்லை இதனால் ஊழியர்களுக்கு வாடகை செலவு, போக்குவரத்து செலவு மிச்சம்.
இதனால் சம்பளம் ஏதாவது குறைப்பார்களா என்றால் இப்பொழுதுதான் சம்பளம் மிக அதிகமாக கேட்கிறார்கள் ஆதலால் அனுபமிக்க வேலையாட்களை பணியமர்த்தும் திட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்.
இப்பொழுது எனக்கு முன்பு இருக்கும் ஒரே வாய்ப்பு. Fresher களை டிரெயினிங் கொடுத்து அதன்பின்பு அவர்களை எங்கள் ப்ளாட்பார்மில் வேலை கொடுப்பது. இதன்மூலம் எங்களுக்கு தேவையான ஊழியர்களை நாங்களே தயார் செய்துகொள்ள முடியும். இதனை நான் CMC வேலூர் மருத்துவமனையின் process உடன் ஒப்பிடுவேன். ஏனெனில் இங்கே வேலை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அவர்கள் நடத்தும் கல்லூரியில் படித்தவர்கள் அதனால்தான் அவர்களின் மருத்துவம் உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இதனை நாம் ஏன் நம்முடைய துறைக்கு பயன்படுத்தகூடாது என்று நினைத்தேன் அதனாலேயே இந்த பயிற்சி விஷயங்கள்..
கவனத்தில் கொள்ளுங்கள் Fresher கள் HTML/CSS/jQuery/PHP/Java என ஏதோ ஒன்றில் மூன்று மாதமோ ஆறு மாதமோ கோர்ஸ் படித்திருக்கவேண்டும். நான் முன்பே சொன்னதுபோல் எங்களிடம் டிரெயினிங் கொடுப்பதற்கு யாரும் கிடையாது. நாங்கள் உங்களை ஆன்லைன் மெட்டீரியல்ஸ் கொடுத்து தயார் படுத்துவோம். முதல் வாரம் மட்டும் உங்களுக்கு Shopify என்றால் என்ன? அதனை எப்படி பயன்படுத்துவது என்பதனை பற்றி விளக்கப்படும் பிறகு நீங்களே கற்றுகொள்ளலாம்.
இந்த டிரெயினிங் பயிற்ச்சியில் சேர்வதற்கு நீங்கள் எங்களுக்கோ நாங்கள் உங்களுக்கோ பணம் கொடுக்க மாட்டோம் இது இலவச பயிற்ச்சிதான். 1 அல்லது 2 மாதங்கள் நீங்கள் production யில் வேலை செய்வதற்கு தயார் என்றால் நாங்கள் உங்களை full time employee யாக எங்கள் கம்பெனியில் சேர்த்துகொள்வோம். வீட்டில் இருந்தபடியே நீங்கள் இதில் சேரலாம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மற்றும் சனி ஞாயிறு விடுமுறை.
உங்களுக்கான தினமும் 8 மணிநேர டைம் ஷீட்டில் உங்களின் progress தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கான சிறு சிறு டாஸ்குகள் வழங்கப்படும்.
உங்களை மூன்று வழிகளில் நாங்கள் பிரிப்போம்.
HTML/CSS/Adobe XD தெரிந்த UI Developer கள்
HTML/CSS/jQuery தெரிந்த UI Developer கள்
jQuery/Liquid தெரிந்த Backend Developers கள்
இந்த மூன்று பிரிவுக்குமே நாங்கள் ஒரு என்டர்பிரைஸ் கம்பெனியில் பணிபுரிய என்ன தேவையோ அதற்கேற்ப தயார் செய்வோம்.
Local development setup CLI & Github உடன்
Shopify theme development
Agile work flow
நாங்கள் எங்களின் partner ஆன UK Agency யுடன் நீண்ட காலமாக வேலை செய்வதால் நீங்கள் வொர்க் செய்யகூடிய ப்ராஜக் அனைத்தும் வெளிநாடு சம்மந்தப்பட்டது. நீங்கள் அந்த டெவலப்பர்களுடன் வேலை செய்வதால் நிறைய புது விஷயங்களை கற்றுக்கொள்ள ஒரு வாய்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் டெக்னாலஜியில் அப்டேட்டாக இருப்பார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். [email protected]