Shopify Platform Explained – Tamil

0.000
Last Modified
Detailed Information

Shopify என்றால் என்ன மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை விலாவாரியாக அலசும் knowledge article இது. உங்களுக்கு உள்ள அத்தனை சந்தேகங்களுக்கும் இதில் விடை உள்ளது.

Shopify store development என்பது இப்பொழுது உச்சாணி கொம்பில் இருந்துவருகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல், ஏன் அனைவரும் இதை இந்தளவுக்கு விரும்புகிறார்கள். சென்னையில் இப்பொழுது இதை தொழிலாக கொண்ட ஏஜென்சிகள் பெருகிவிட்டன அந்தளவுக்கு இது உயர்த்தி வைக்கப்படுகிறது. அப்படி இதில் என்னத்தான் அடங்கி இருக்கிறது. பார்ப்போம் வாருங்கள்.

எப்பொழுது இந்த SAAS (software as a service) வந்ததோ அதிலிருந்து IT யில் ஒரு பெரும் புரட்சி வந்ததாகவே சொல்லவேண்டும், ஆம். Installation அடிப்படையில் இருந்து அனைத்து சாப்ட்வேர்களும் Cloud யில் கொண்டுவரப்பட்டதில் இருந்து அனைத்தும் subscription அடிப்படையில் வந்துவிட்டன. Subscription என்பது வேறொன்றும் இல்லை வாடகையைத்தான் அப்படி சொல்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு சாப்ட்வேரை சோதித்து பார்க்கும் trial போல் உங்களுக்கு பிடித்தவரை நீங்கள் use செய்துவிட்டு கட்டுபடிஆகவில்லை அல்லது சரியில்லை என நீங்கள் நினைத்தால் just like that drop செய்து விட்டு அடுத்த விஷயத்திற்கு தாவலாம். இந்த cloud அடிப்படையில் இகாமர்ஸ் தளத்தை தந்துகொண்டிருக்கிறார்கள் Shopify எனும் கனடா கம்பெனி

இதில் subscription எனும் மாத வாடைகையை நீங்கள் USD யில் தான் கட்டவேண்டும் இங்கு இந்திய ரூபாயில் கட்ட இயலாது, என்பதை நினைவில் வைத்துகொள்ளவேண்டும். மாதம் சுமாராக 2100 ரூபாய் அளவுக்கு நீங்கள் பணம் கட்ட இருக்கவேண்டி இருக்கும். கிட்டதட்ட 8 இலட்சம் வியாபாரிகள் இதில் இணைத்து தங்களை தொழில் முனைவோராக கொண்டு தங்கள் தொழிலில் ஜெயிக்க இந்த Shopify தளம் உதவி புரிந்து இருக்கிறது என்பதை மறுக்க இயலாது அதனால் நீங்கள் செலவழிக்கும் பணம் நிச்சயம் உங்கள் வியாபாரத்தை பெருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த 29 டாலருக்கு நீங்கள் பெரும் பயன் என்பது அளவில்லாதது. ஆம். இப்பொழுது நீங்கள் ஒரு hosting ஐ வாங்கி அதில் 100000 பொருளை ஏற்றினால் அது bandwidth இல்லாமல் படுத்துவிடும் பிறகு அதற்கு நீங்கள் உயிர் கொடுக்க இன்னும் hardware ஐ அப்டேட் செய்யவேண்டும் அதற்கு நீங்கள் செய்யும் செலவு என்பது எவ்வளவு என்பது சொல்லமுடியாது அதேபோல் நீண்ட கால வணிகநோக்கில் பரிசோதனை முயற்ச்சிகளுக்காக அதிகளவு பணம் செலவு செய்வது என்பது வேண்டாத வேலை எனவேதான் மாதவாடகை அளவில் நீங்கள் உங்கள் பரிசோதனை முயற்ச்சிகளை இதில் தாராளமாக செய்து பார்க்கலாம்.

இதில் என்னவெல்லாம் இருக்கிறது.

Unlimited bandwidth
Unlimited products
Unlimited customers
Unlimited orders
இந்த Unlimited எல்லாம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் எத்தனை ஆயிரம் பொருட்களை ஏற்றினாலும் Shopify என்பது எதையும் தாங்கும் இதயம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நமக்கு அதற்கு மேலாகவே அவர்கள் திரும்ப கொடுக்கிறார்கள். 8 இலட்சம் வியாபாரிகள் இந்த platform நம்புகிறார்கள் என்றால் சும்மாவா என்ன?

SAAS platform என்றாலே எல்லோர் மனதிலும் தோன்றும் ஒரு கேள்வி, இதில் opensource platform போல் customization சாத்தியமா? நமக்கே இது தோனும்போது இந்த platform ஐ இழைத்து வைத்திருக்கும் இந்த கம்பெனி விடுமா என்ன? ஆம் Liquid என்ற markup ஐ கொண்டு இவர்கள் products, customers, order என அனைத்தையும் வெகு எளிதாக டேட்டாவை வாங்கி manipulate செய்யும் விஷயத்தை எளிதாக்கி இருக்கிறார்கள். இதனை கொண்டு நீங்கள் நினைக்க விரும்பும் அத்தனை customization யும் மிக எளிதாக செர்வரிலிருந்து எடுக்க கையாளமுடியும். நீங்கள் என்ன டிசைன் வேண்டுமானலும் இதில் கொண்டுவரமுடியும், உங்கள் கிரியேட்டவிட்டியின் எல்லையை நீங்கள் இதனை தொடலாம். நான் இதனை மேம்போக்காக சொல்லவில்லை இதனில் கிட்டததட்ட 8 ஆண்டுகாலம் பணியாற்றி உள்ளதால் சொல்கிறேன்.

ஒவ்வொரு product யும் வேறு வேறு டிசைனியில் காட்ட வேண்டுமே, முடியும். இதற்கு நாம் செய்யவேண்டியது template ஐ உருவாக்குவதுதான். அந்த template யல் என்னென்ன விஷயங்களை உள்ளீடாக பெறவேண்டுமோ அதை முழுவதையும் section setting யில் கிரியேட் செய்து கிளையண்ட் மேனேஜ் செய்யுமாறு செய்யலாம் இதனால் கிளையண்டுக்கு கோடிங்கில் கைவைக்கும் வேலை இல்லை. ஒவ்வொரு productக்கும் அதனை சார்ந்த related products ஐ கொண்டுவரவேண்டுமா, எளிது. அதே கலெக்ஷனில் மற்ற products ஐ காட்டலாம் அல்லது product handle ஒவ்வொரு products யின் tag ஆக யூஸ் செய்து நாம் நினைக்கும் பொருளை related products ஆக கொண்டுவர முடியும்.

Basic plan தொடங்கி Advanced plan வரை Shopify அத்தனை customization யும் வழங்குகிறது. ஆனால் இத அனைத்தும் cart page வரை மட்டுமே. அது தாண்டு checkout pages முழுவதும் அவர்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளார்கள் ஏனெனில் அவை இகாமர்ஸ் பண பரிவர்தனையின் முதுகெலும்பு என்பதால் அதில் மாற்றங்கள் கொண்டு வர முடியாது. ஆனால் அவர்களின் checkout pages 4 நான்கும் மிக தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உங்கள் கஸ்டமர்களுக்கு உங்கள் இகாமர்ஸ் தளத்தின் நம்பத்தன்மை அதிகரிக்கும் தவிர குறையாது.

Shopify Apps

ஒரு ப்ளார்பார்மின் நம்பத்தன்மை மற்றும் அதனுடைய ஊடுருவலை அதனுடைய eco system ஆகிய third party apps மூலமாகவே நாம் அணுகமுடியும். ஆம் Shopify இன்றைக்கு இந்த அளவுக்கு உச்சாணிகொம்பில் நிற்பதற்கு அதற்கு பக்கபலமாய் இருப்பது அதுனை apps. உங்களுக்கு என்ன வேண்டும்? எல்லாமே இதில் இருக்கிறது. நீங்கள் ஒரு சிறிய பிஸினஸாக இருந்து உங்களால் அதிக பணத்தை apps யில் செலவு செய்ய இயலாது என்றால் பிரிச்சனையில்லை. எல்லா apps ம் முறையே Free plan யில் தொடங்கி premium plan யில் முடிவடைகின்றன எனவே நீங்கள் எதையும் free யில் தொடங்கி உங்களுக்கு workout ஆனால் பிறகு premium app ஐ வாங்கலாம்.

Shopify development க்கு மார்கெட்டில் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள்?

இது உங்களின் project ஐ பொருத்து வேறுபடும் மற்றும் நீங்கள் யாரிடம் செல்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஆம், இதனை நீங்கள் ஒரு பெரும் கம்பெனியிடம் போனால் உங்களுக்கு அவர்கள் மாதக்கணக்கில் கணக்கிட்டு மூன்று மாதம் ஆகும் என்று சொல்வார்கள். மணிநேரத்திற்கு தலா 600 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். கணக்கிட்டு பார்த்தீர்கள் என்றால் அது 3 முதல் 4 இலட்சம் வரை போகும். ஆனால் இதனை நீங்கள் 30 ஆயிரத்திற்கும் 40 ஆயிரத்திற்கும் செய்யலாம். அதுபோல செய்து தருவபவர்களும் மற்ற கம்பெனிகளில் என்ன செய்கிறார்களோ அதையேதான் செய்வார்கள்.

உங்களுக்கு அதுபோல தேவையெனில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் அவர்களை அறிமுகப்படுத்துகிறோம். Contact [email protected]

Conversion Rate Optimization

இப்பொழுது இகாமர்ஸ் என்பது வெறும் ஆன்லைன் presence என்பதை தாண்டி அதுவே உங்களின் physical ஸ்டோரின் முதுகெலும்பாய் இருக்கிறது. உங்களின் ஒரு locality ஐ சார்ந்த கஸ்டமர்களின் தேவைகளுக்கேற்ப நீங்கள் இனி பிஸினஸ் செய்த தோடு மட்டுமல்லாமல் இப்பொழுது இனி உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் பிஸினஸ் செய்யும் அளவுக்கு இந்த இகாரம்ஸ் தளம் உதவி புரிந்து வருகிறது. அப்படிப்பட்ட இகாமர்ஸ் ஸ்டோரில் முதலில் விசிட்டர்களை வரவழைப்பது என்பது முதல் சவால் பிறகு வந்த விசிட்டர்களில் எத்தனை பேர் பர்சேஸ் செய்து இருக்கிறார்கள் என்பது இரண்டாவது சவால், பிறகு எத்தனை கஸ்டமர்களை நீங்கள் தக்கவைக்க முடியும் என்பது மூன்றாவது சவால். இதற்கு எனவே டெக்னில்லாக conversion rate optimization டீம் இருக்கிறது. அவர்ளின் முதல் பணியே ஒரு தளத்தை அழிகிய தளம் என்பதை தாண்டி எப்படி UX and UI அமைந்துள்ளது என்பதை பற்றி ஒரு audit செய்து பார்க்கவேண்டும், பிறகு அதில் உள்ள குறைகளை களைந்து மைனஸ் எல்லாவற்றையும் ப்ளஸ்ஸாக மாற்றவேண்டும்.

பிறகு உங்களின் விசிட்டர்கள் எந்த இடத்தில் நுழைகிறார்கள் பிறகு எந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள heat map உதவும். அதனை கொண்டு உங்கள் targeted audience மற்றும் நீங்கள் focus செய்ய வேண்டிய keywords ஐ குறிவைத்து கன்டெண்ட் கிரியேட் செய்யவேண்டும். அதன் பின் சோதனை ஓட்டமாக A/B டெஸ்டிங் அடிப்படையில் அவர்கள் வெள்ளோட்டம் பார்பார்கள் இதில் எந்த டிசைன் அதிக அளவு கஸ்டமர்களை பர்சேஸ் செய்யவைகிறதோ அதனை நிரந்தரமாக்குவார்கள்.

இகாமர்ஸ் தளம் என்பது ஒரு சிட்டிங்கில் டிசைனிங் முடித்து, ஆன்லைனில் புகுந்துவிடலாம் என்பது நீண்ட கால வியாபார நோக்கிற்கு உதவாது, அதேபோல் கணக்கில்லாமல் themeforest யில் கிடைக்கும் ஏதாவது வரு தீமை நீங்கள் டவுன்லோட் செய்து தளத்தை உருவாக்க ஒரு வாரம் கூட ஆகாது. ஆனால் அதன் பின்னால் என்ன நடக்கும் என யோசித்து பார்ப்பீள் என்றால் உங்கள் தளம் கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கும். நீங்கள் ஆயிரம் அல்லது இலட்சம் products ஐ ஏற்றினாலும் அதில் பயன் இல்லை என clients உணரவேண்டும்.

மிகவும் சீரியசாக இகமார்ஸ் தளத்தை நடத்தவேண்டும் என்றால் நீங்கள் அதற்கு நீங்கள் சரியான ஏஜென்ஸியை அணுகவேண்டும், இகாமர்ஸ் தளத்தின் வடிவமைப்பு என்பது conversion அடிப்படையில் இருக்கவேண்டும் அதற்கு ஒரு குழு உங்களுடம் எப்பொழுதும் இருக்கவேண்டும்.

என்னடா இது ஏதோ சிம்பிளாக, ஒரு hobby யாக இகாமர்ஸ் தளத்தை ஆரம்பிக்கலாம் என்றால் இவன் ஏதோ ஒரு குழு உங்களுடன் பயணிக்கவேண்டும் என்கிறானே என நீங்கள் நினைக்கலாம். சிறிய மீனை போட்டு பெரிய மீனை போட்டு எடுக்கும் வித்தை அறிந்தவர்தான் இங்கு ஏஜென்சியே நடத்த முடியும். உங்களிக்கு பிஸினஸ் அதிகம் நடந்தால் நீங்கள் அதில் ஒரு பங்கை ஏஜெனிசிக்கு கொடுக்கமாட்டீர்களா என்ன? அதுதான் இங்கு நடக்கவேண்டும். ஒரு இன்வெஸ்ட்மெண்ட் என்பது பூரணமாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் ஏஜென்சியை முழுமையாக நம்பவேண்டும். இதில் முக்கியமானது அவர்கள் ஏதாவது ஒரு இகாமர்ஸ் தளத்தை கிளையண்டுக்கு உருவாக்கி அவர்களை செல்வந்தர்களாக ஆக்கி இருக்கிறார்களா என கேளுங்கள், அந்த இகாமர்ஸ் தளம் அவர்களுக்கு எவ்வளவு வருவாய் ஈட்டி கொடுக்கிறது என analytics report ஐ கேளுங்கள். அதன்மூலமே நீங்கள் ஒரு சரியான கம்பெனியை அடையாளம் காண முடியும்.

இங்கே என்ன பிரச்சனை

உண்மையை சொல்லபோனால் வெளிநாட்டில் ஒரு Shopify store கிரியேட் செய்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கேட்கிறார்கள். அவர்கள் இதற்கு கிட்டதட்ட 25 இலட்சம் தொகைக்கு மேலாக இருந்தால்தான் project க்கிற்கு உங்களிடம் பேசவே செய்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் அந்த தொகை என்பது நாம் வாயை திறக்கும் அளவிற்கு இருந்தாலும் அது அவர்களுக்கு பெரும் வருவாயை தரும் அமுதசுரபி போல் இருக்கும் என்பதை நீங்கள் மறுக்கமுடியுமா? எந்த விஷயத்தையும் பைசா செலவில்லாமல் சம்பாதிக்கு முடியும் என நினைப்பது என்பது முட்டாள்தனமானது. எத்தனையோ பேர் பணம் செலவு செய்ய கஞ்சத்தனம் செய்து கொண்டு கிடைக்கும் ஏதாவது ஒரு தீமை போட்டுகொண்டு கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு சீ இந்த பழும் புளிக்கும் என இழுத்தி மூடிவிட்டு அடுத்த கணவுக்கு தாவிவிடுவார்கள். இதேபோல் அவர்கள் வீணாக்கும்வது அவர்களின் நாட்களை அல்ல வாழ்க்கையை.

2000 டாலர் வாடகை கொடுத்து Plus ஸ்டோர் நடத்தும் எத்தனையோ பேர் இன்னும் வளர்த்தான் செய்கிறார்கள் ஒழிய யாரும் இழுத்து மூடுவதில்லை என்பதை இங்கே சொல்லிகொள்ள விரும்பகிறேன். நீங்கள் சுமாராக25 இலட்சம் செலவு செய்து, 2000 டாலர் மாதவாடகை கொடுத்து உங்கள் பிஸினஸை உருவாக்க நினைக்கிறீர்கள் என்றால் சொல்லுங்கள் அதற்கு என UK யில் உள்ள பிரயேத்யகமான கம்பெனியை அடையாளம் காட்டுகிறேன்.

இந்த கட்டுரையின் ஆரம்பித்தில் நான் எழுதியிருக்கும் 30,000, 40000 ரூபாய் ஏஜென்சிகள் தீமை கொண்டு உருவாக்கும் தளத்திற்கும் கஸ்டமர் அடிப்படையில் உருவாக்கும் தீமுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என உணருவீர்கள் என நினைக்கிறேன்

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories