திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மிக விரைவாக UD 2+2 பேருந்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். முன்பிருந்த UD பேருந்தின் இருக்கையைவிட இது கொஞ்சம் சிறியதாக இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வளவு comfortable ஆக இல்லை.
இரண்டாவது, இது என்னுடைய கோரிக்கையாகவும் வைத்து கொள்ளலாம். இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் ஒரு ஹேண்ட் ரெஸ்ட்தான் இருக்கிறது. ஒரு இருக்கைக்கு இரண்டு ஹேண்ட் ரெஸ்ட் இருக்கும்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
மூன்றாவது, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 180 ரூபாய் டிக்கெட் வாங்கினார்கள். இது மிகவும் சரியான விலையாக இருந்தது. இதனை கொஞ்சம் உயர்த்தி கொடுத்தாலும் மக்கள் பயணிப்பதற்கு தயராக இருப்பார்கள் கீழ்கண்ட மாற்றங்கள் செய்தால்;
– 4 சீட்டுகள் கொண்ட ஒரு வரிசையை, மூன்று சிட்டுகளாக மாற்றி ஒரு இருக்கைக்கும் அடுத்த இருக்கைக்கும் நடுவில் இடைவெளி இருந்தால் பெஸ்டாக இருக்கும். குறைந்துபோன ஒரு இருக்கைக்கான டிக்கெட் விலையாக ரூபாய் 60ஐ ஒரு டிக்கெட்டுக்கு ஏற்றி வைக்கலாம்.
– அந்த 60 ரூபாயையும் ஏற்றாமல் அதே நான்கு சீட்டை சிறிது இடைவெளி விட்டு அமைக்கமுடியும் என்றால் அது அனைத்தையும் விட அருமை. ஆனால், நடத்துனர் செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் இடையில் நடந்துபோகிற அளவுக்கு ஒரு இடைவெளி இருப்பது அவசியம்.
இதுபோல் ஒரு பேருந்தை நீண்ட தூரம் பயணிக்கும் வழிதடங்களில் விட்டு பயணிகளின் feedback ஐ கேட்டு வாங்கி மேலும் தரமான பயண அனுபவத்தை தமிழக அரசு தர முடியும்.