pricefinder.in யில் முதலில் மடிப்பாக்கம் சுற்றியுள்ள ஏரியாக்களை கவர் செய்வது என முடிவு செய்துள்ளோம். இதனால் பிற ஊர்கள் சேர்க்கப்படாது என்று அர்த்தம் இல்லை. இந்த தளம் இந்தியா முழுவதற்கும் உரியது. எங்களால் டெலிவரி மற்றும் சர்வீஸ் அளிக்கக்கூடிய இடங்களை நாங்கள் இப்பொழுது அடையாளம் காண்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இடம் மடிப்பாக்கம் என்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு எங்களால் இந்த தளம் மூலம் எளிதாக சர்வீஸ் அளிக்கமுடியும் என்பதால் முதலில் மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை கவர் செய்வதற்காக களத்தில் இறங்குகிறோம்.
இங்கே மடிப்பாக்கம், கீழ்கட்டளை, புழுதிவாக்கம் என மூன்று ஏரியாக்களில் உள்ள அனைத்து shops, service professionals, show rooms, etc சேர்க்கலாம் என்பது முடிவு. இதில் வெற்றியடைந்த பிறகு பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவோம்.
புதிய தொழில் முனைவோர் அனைவர் கண்ணுக்கும் முதலில் தெரிவது சூப்பர் மார்கெட் அல்லது மளிகை கடை. ஏற்கனவே zepto, bigbasket, blinkit என கியூ கட்டி நிற்கும் இந்த சென்னை மாநகரில் நாம் என்ன செய்துவிட முடியும் என்றுதான் நினைத்தேன். எங்களுடைய பிஸினஸ் மாடல் ஒரு aggregator போல எப்படி Dunzo செயல்படுகிறதோ அதுபோல. மூன்று ஏரியாக்களில் உள்ள கடைகளை முதலில் டைரக்டரியில் ஏற்றிவிட்டு, அவர்களுடைய products ஐ எங்கள் தளத்தில் ஏற்றுவதற்கு அந்த கடைகாரர்கள்அனுமதி அளித்தால் பொருட்கள் எற்றப்படும். அது கஸ்டமர்களால் ஆர்டர் செய்யப்படும், அதனை நாங்களே டெலிவரி செய்வோம். இங்கு மளிகை என்பது ஒரு உதாரணத்திற்காக சொன்னது, மற்றபடி அனைத்து பிஸினசும் இதில் இணைக்கப்படும். சில கேட்டகரிகள், Medicals, Hardware shops, Electronics shops, Website development agencies, vegetable shops, meat shops, etc.
தற்போதைக்கு கடைகாரர்கள் உபயோகப்படுத்தும் POS உடன் pricefinder யின் inventory ஐ sync செய்யும் ஆப்ஷன் இல்லை எனவே கடைகாரர்கள் மேனுவலாகதான் pricefinder யில் இன்வன்டரியை மேனேஜ் செய்யவேண்டும். அது பெரிய பிரச்சனையாக இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் நாங்கள் POS ஐ தயார் செய்வதற்கு முயற்சி எடுப்போம் அடுத்த கட்ட phase யில். அதேபோல் மொபைல் ஆப் இன்னும் ரெடி ஆகவில்லை ஆனால் எங்கள் shop.pricefinder.in இணையத்தளம் mobile app போல் இயங்கும் என்பதால் அது லான்ச் கிரிடிக்கல் இல்லை. வெண்டார்கள் எளிதாக தங்கள் டேஷ்போர்டை பயன்படுத்தலாம்.
இந்த pricefinder தொடங்குவதற்கு தலையாய காரணம், இங்கே யாராவது கஸ்டமர்களின் அனைத்து சேவைகளையும் நிறைவேற்ற வரமாட்டர்களா என்ற ஏக்கம்தான். ஒரு கஸ்டமர், தன்னுடைய அனைத்து சர்வீஸ்களையும் ஒரே இடத்தில் நிறைவேற்ற முடிந்தால் அது அவருக்கும் மிகப்பெரிய relief ஆக இருக்கும். காரணம், அந்த நிறுவனம், அந்த கஸ்டமரின் அனைத்து விபரங்களையும் விரல் நுணியில் வைத்திருக்கும் அவருக்கு தேவையான சேவையை சரியாக நேரத்தில் செய்து கொடுக்க முடியும். நீண்ட நாட்களாக ஒரு கஸ்டமர் ஒரு கடையில் பொருளோ அல்லது சர்வீஸோ பெற்றாலும் இங்கே அந்த கஸ்டமருக்கு எந்த கிரிடுட்டும் கிடைப்பதில்லை. அவருக்கு ஒரு பே லேட்டர் வசதிகூட கொடுக்கமாட்டர்கள். அப்படி ஒரு நிலைமை இருக்கும்போது ஏன் அந்த கஸ்டமர் அதே கடையில் வாங்கவேண்டும்?. அதேபோல் ஒவ்வொரு தடவையும் தங்களுடைய போன் நம்பர், மற்றும் வீட்டின் அட்ரஸை கொடுப்பதிற்கு பதில், கஸ்டமர்களின் அனைத்து விபரங்களையும் பெற்ற ஒரு நிறுவனம், அந்த கஸ்டமருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அளித்தால் எப்படி இருக்கும்? அதைதான் நாங்கள் செய்யப்போகிறோம்.
கஸ்டர்களின் சேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தொடங்கபட்டதுதான் இந்த தளம். ஆதலால் call center மற்றும் சப்போர்ட் டிக்கெட் மூலம் கஸ்டமருக்கும் தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அளிக்கப்போகிறோம். அதற்கான முன்னேற்பாடாகத்தான் வியாபாரிகளை சேர்க்கபோகிறோம்.
இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் எதிர்கால கஸ்டமர்களுக்கு சொல்லிகொள்வது எல்லாம் ஒன்றுதான், shop.pricefinder.in யில் நீங்கள் கஸ்டமராக சேர்ந்துகொள்ளுங்கள். அது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்களின் அனைத்து ஆர்டர்கள், என்கொயரிகள், இன்வாய்ஸ் என் அனைத்தும் ஒருசேர ஒரே இடத்தில் நீங்கள் பார்த்து கொள்ளலாம். உங்களின் ஒரு பெர்சனல் அசிஸ்டெண்டாக இந்த தளம் இருக்கும் என்பதை இங்கு கூற கடமைபட்டுள்ளோம்.
இந்த தளம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை எந்த கடைகாரர்களிடமும் இதில் இணைந்து கொள்ளுங்கள் என கேட்டதில்லை. காரணம் இன்னும் நான் இதனை முறையாக பதியவில்லை மற்றும் ஆபிஸ் போடவில்லை அதனால் இது தள்ளிக்கொண்டே இருந்தது. இப்பொழுது இதற்காக ஒரு சிறிய அலுவலகம் மற்றம் call center வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். இந்த தளத்திற்காக ஒரே ஒரு கடைகாரரிடம் பேசி அந்த ஒரு கடையின் அனைத்து பொருட்களையும் ஏற்றிவிட்டேன். அந்த கடைகாரர் எனக்கு மிகவும் தெரிந்த நபர் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். இனி நம் ஏரியாவில் இருக்கும் அனைத்து கடைகாரர்களையும் சேர்ப்பதே முதல் கடமை.
இந்த தளத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று டைரட்டரி இன்னொன்று Shop. முதலில் டைரட்டரியில் கடைகளை ஏற்றிவிட்டு பிறகு அவர்களின் shop products ஐ ஏற்றலாம். Directory யில் நாங்கள் இங்கு குறிப்பிட்ட இந்த 5 features களை கடைகாரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். அது அவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்.ஒரு சிறிய மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை இங்கே சொல்கிறேன்.
டைரக்டரியில் அவர்களுடைய பிஸினஸ் அட்ரஸ் மற்றும் டீடைல்ஸ் ஏற்றியபிறகு அவர்கள் தங்கள் கடையின் பொருட்களை ஏற்றலாம். என்னை பொருத்தவரை கடையின் பொருட்களை ஏற்றினால்தான் இந்த தளத்தின் முழுமையான அனுபவத்தை பெறமுடியும் அதனால் என்னுடைய கோரிக்கை எல்லாம் கடைகாரர்கள் எல்லாம் அவர்களின் பொருட்களை ஏற்றுங்கள், அப்பொழுதுதான் உங்கள் கடை மற்றும் பொருளானது செர்ச்சில் காண கிடைக்கும் அதன் மூலம் நீங்கள் புதிய வியாபாரத்தை பெற முடியும்.
pricefinder எப்படி எல்லாம் தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்க்கிறது என்பதை எங்களுடைய பழைய ப்ளாக்கில் எழுதியிருக்கிறோம். நேரம் இருந்தால் படித்து பாருங்கள். உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் [email protected] க்கு தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம்.