உங்கள் கடையின் ஆஃபர்கள் மக்களுக்கு தெரியவேண்டுமா?

0.000
Last Modified
Detailed Information

வெண்டார்களுக்கு நாங்கள் சொல்லிகொள்வது Pricefinder.in என்பது வெறும் price தேடுவதற்கோ, ஆர்டர் கொடுப்பதற்கோ மட்டுமல்ல நாங்கள் price சார்ந்த வேறு சில விஷயங்களையும் இதில் கொடுத்திருக்கிறோம். Offers என்பது அதில் முக்கியமானது. ஏன் Offers முக்கியம் என்று சொல்கிறேன் என்றால் கடையின் வியாபாரத்தை அது பல மடங்கு பெருக்கிறது. புது கஸ்டமர்களை அடையாளம் காட்டுகிறது. உங்கள் கஸ்டமர்களுக்கு அது மகிழ்ச்சியையும் சந்தோஷயத்தையும் தருகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் இந்த பொருள் முற்றிலும் இலவசம், 500 க்கு விற்கப்படும் பொருள் இந்த ஆஃபரில் 300 ரூபாய் என எத்தனையோ ஆஃபர்களை நாம் தினமும் பார்க்கிறோம். அதனை ஏன் நம் பகுதியில் உள்ள கடைகாரர்கள் முயற்சி செய்யகூடாது. அதனால்தான் இந்த ஆஃபர் என்பது இங்கே கொண்டு வரப்பட்டது.

Listings என்று எடுத்து கொண்டால் ஆஃபர் லிஸ்டிங் என்பதும் இருக்கவேண்டும், அதுவும் neighborhood platform க்கு அவசியம் என்பதால் அது கொண்டு வரப்பட்டது. அதோடு மட்டுமல்ல, ஒரு வெண்டாரின் டைரக்டரி, பொருட்கள், ஆஃபர், ஆர்டிகல்ஸ் என அனைத்தும் ஒரு சேர இருந்தால் கஸ்டமர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கும் அல்லவா அதனால் தான் இந்த லிஸ்டிங்.

கூப்பன் கோட் பொருத்தவரை, வெண்டார்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன்கள் தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் அதனை அவர்கள் pricefinder.in மூலம் கிரியேட் செய்துகொள்ளலாம். அதனை கஸ்டமர்கள் தங்கள் ஆர்டரோடு ரீடீம் செய்துகொள்ளலாம். அது Quate ஆர்டராக இருந்தாலும் கூப்பன் கோட் ரீடிம் செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, வெண்டார்கள் 50 கூப்பன்கள் Pongal க்கு கொடுக்க நினைக்கிறார், ஒரு கூப்பனின் மதிப்பு சுமார் 50 ரூபாய் என வைத்துகொள்ளவோம். 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் இந்த 50 ரூபாய் கூப்பனை ரீடிம் செய்துகொள்ளலாம் என அவர் அறிவிக்கிறார் ஆனால் அந்த வெண்டாரின் பொருட்கள் அனைத்தும் Quate products களாக இருக்கிறது, அதாவது விலை எதுவும் இல்லாமல், ஆர்டர் எடுப்பது மாதிரி மட்டும் இருக்கிறது என்றால் என்ன செய்வது என்று யோசனை வரும், அப்பொழுதும் நீங்கள் வைத்துள்ள அந்த 50 ரூபாய் கூப்பனை ரீடிம் செய்துகொள்ளலாம். கடைகாரர் பில் போடும்போது இந்த 50 ரூபாயை தள்ளுபடி செய்து கொடுப்பார் ஏனெனில் உங்கள் ஆர்டரில் இந்த கூப்பன் இருக்கும். இது ஈசியாக இருக்கிறது அல்லவா?

இன்றும் எத்தனையோ கடைகளில் நான் பார்க்கிறேன். இதோ மடிப்பாக்கத்தில், எத்தனையோ கடைகளின் முனபு ஆஃபர் போர்டு மாட்டி இருக்கிறார்கள். அது அந்த கடையை கடக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும் அதுவே pricefinder.in யில் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள பேஜில் பதிவு செய்தால் அது பலருக்கு ரீச் ஆகும். அதுதான் வித்தியாசம்.

இதனை முயற்சி செய்வதற்கு தயார் என்றால் கீழுள்ள contact us form மூலம் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உதவுகிறோம்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories