Panasonic AC ரூமில் இன்ஸ்டால் செய்தபோது ஏசி அவுலட் டிரெய் பைப் வாங்கிவர சொன்னால் தண்ணீர் பிடிக்கும் கனமான ஹோஸ் பைப்பை வாங்கி வந்துவிட்டார்கள். இரண்டாம் மாடியில் இருந்து அவ்வளவு பெரிய கணமான பைப்பை மாட்டினால் என்னவாகும்? ஒரே மாதத்தில் பைப் கீழே விழுந்துவிட்டது.
சன் ஷேடில் இருந்து தண்ணீர் பட்டு அடுத்த வீட்டிற்கு தெறிக்கிறது. கீழ் வீடு, பக்கத்துவீடு என ஒரே பிரச்சனை. மொட்டை மாடியில் இருந்து இரண்டாம் மாடி ஸ்லாபில் கீழே இறங்க ஏசி மெக்கானிக்காரர்கள் அஞ்சுகிறார்கள். கிட்டதட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது பைப் இல்லாமலே..
இன்று ஏசி சர்வீசுக்கு வந்தவர் தண்ணீர் ஊற்றி பார்த்துவிட்டு, தண்ணீர் உள்ளே விழுந்ததால் பின்னால் போய் அதனை சரிசெய்யவேண்டும் என்று அதற்கு extra பேமண்ட் ஆகும் என அவரே சொல்லிகொண்டார். நானும் அப்படியெல்லாம் வாங்கமாட்டார் என நினைத்து வாங்க மேலே போய் அடைப்பை சரிசெய்யலாம் என அழைத்துபோனேன்
மொட்டைமாடியில் இருந்து கீழே இறங்குவதற்கு கடினமாக இருந்தபடியால் யோசித்து பின்பு இறங்கிவிட்டார். இறங்கியது இறங்கவிட்டீர்கள் அப்படியே அந்த பைப்பை வாங்கி வருகிறேன் மாட்டிவிடுங்கள் என்றேன். நேரம் இல்லை நீங்கள் அந்த குண்டு பைப்பையே கொடுங்கள் என மீண்டும் அதே பைப்பை மாட்டிவிட்டார்.
எப்படியும் இன்னும் பத்து பதினைந்து நாளில் அது கீழே விழத்தான் போகிறது. பிறகு மீண்டும் 300 அல்லது 400 அழவேண்டும் என்று நினைத்து கொண்டேன். ரேட் கார்டில் இந்த மாதிரி அடைப்பை சரிசெய்வதற்கு 600 ரூபாய் என இருந்தது. அது சரி. என்னங்க நீங்க இது எல்லாம் இந்த சர்வீசில் வராதா என கேட்டேன்?
இல்லை வராது. நீங்கள் வெறும் 300 ரூபாய் கொடுங்கள் என்று கூடுதலாக வாங்கிகொண்டார். இதனால் சொல்லிகொள்வது, ஏசி சர்வீஸ் என்றால் அதில் எல்லாம் வராது. வெறும் இன்லெட் கிளீனீங் தட்ஸ்ஆல். மேலே போய் கேஸ் செக் செய்தால் அதற்கும் காசு வாங்குவார்கள் போல வேண்டாம் போய் வாருங்கள் என்றனுப்பிவைத்தேன்
ஏசி இண்ஸ்டால் செய்ய வரும் கம்பெனிகாரர்களுக்கு அந்தந்த கம்பெனிகாரர்கள் இண்ஸ்டால் செய்த போட்டாவை கேட்க மாட்டார்களா? இந்த மாதிரி ஒரு அவுல்லெட் டிரெயின் பைப் மாட்டுகிறார் என்றால் இதனை அவர்கள் அப்பொழுதே கண்டுபிடித்திருக்கலாமே? தேவையில்லாமல் எவ்வளவு பிரச்சனை.