Pricefidner.in யில் இப்பொழுது சில கடைகளுக்கு ஆர்டர் பெறும் வகையில் ப்ரைசிங் கேட்டலாக் அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன ஆர்டர் பெறும் வகையில்? விளக்குகிறேன்.
உதாரணத்திற்கு நீங்கள் ஞாயிறு விடுமுறை நாளில் உங்களுக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று மட்டன் ஒரு அரைகிலோ, ஈரல் ஒரு 100 கிராம் வாங்க வேண்டும் என்று வைத்துகொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். காலையிலேயே எழுந்து கடைக்கு சென்று வாங்கியாக வேண்டும் நேரம் ஆகஆக கறி விற்றுவிடுமோ அல்லது ஈரல் கிடைக்காதோ என்று நினைக்க தோன்றும். இதனை எப்படி சரிசெய்வது? . ஒன்று கடைகாரர் உங்கள் ஆர்டரை அட்வான்சாக பெற்றுகொள்ளவேண்டும். இதனை நீங்கள் ஒரு போனில் சொல்லி புக் செய்து கொள்ளலாம். இரண்டாவது, pricefinder.in மூலமாக உங்களுக்கு தேவையானதை புக் செய்து இத்தனை மணிக்கு வருகிறேன் என்று லோக்கல் பிக்கப் டைமை கொடுத்தால் அவர்கள் அதற்குள் உங்கள் ஆர்டரை தயாராக வைத்திருப்பார்கள். பணம் செலுத்தி வாங்கி செல்லலாம்.
இந்த நடைமுறையில், கடைகாரர்களின் பங்களிப்பு முக்கியம் ஏனெனில், அவர்கள்தான் ஸ்டாக் மெயின்டெயின் செய்பவர்கள். மூளையோ, ஈரலோ அல்லது போட்டியோ வேறு ஒருவர் வாங்கிவிட்டால் அதனை அவுட் ஆப் ஸ்டாக் என்று மாற்றம் செய்யவேண்டும் இல்லையெனில் வேறு ஒருவர் அதனை தவறுதாக மீண்டும் ஆர்டர் செய்ய இயலும் இது தவறுதலாக முடிந்து கஸ்டமர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.
எங்கள் தரப்பில் இருந்து இன்னும் ஆப் தயாராகவில்லை என்பதால் கடைகாரர்கள் வெப் டேஷ்போர்ட்தான் உபயோகிக்கவேண்டும். அதற்கு அவர்கள் ஒவ்வொரு ப்ராடக்டின் உள் சென்று in stock /out of stock டிக் செய்யவேண்டும். இதனை எந்தளவுக்கு அவர்கள் மெயின்டெயின் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிஸியான நாட்களில் கடைகளில் கூடுதலாக ஆட்கள் வேலை செய்தால் இதனை மொபைலில் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.
ஓகே, விஷயத்திற்கு வருவோம். ப்ரைஸிக் கேட்டலாக் என்று சொல்லிவிட்டு ப்ரைசே இல்லையே என்று நீங்கள் சொல்வது புரிகிறது. ஸ்டாக்கை மெயின்டெயின் செய்ய கற்றகொண்டால் அடுத்தது விலையையும் அப்டேட் செய்ய தொடங்குவார்கள் என்பதால் இப்பொழுதைக்கு விலை பற்றி விவரங்கள் இருக்காது. போனில் நீங்கள் எப்படி ஆர்டர் கொடுக்கிறீர்களோ சேம் அதேபோலத்தான் இதுவும். எனக்கு முக்கியமாக பட்டது, பொருள் அந்த கடையில் இருக்கிறதா, இப்பொழுது வாங்கலாமா என்பதுதான், மற்றபடி விலை என்பது கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அது does not matter.
அதுவும் இல்லாமல் முறையாக இந்த தளத்தை வெண்டார்களிடம் எடுத்த செல்வதற்கு இந்த pricing ஒரு தடையாக இருக்கிறது. இருக்கிற வேலையில் இதுவேறையா என்று வெண்டார்கள் ஓடுகிறார்கள் அதனால்தான் இப்பொழுதைக்கு Pricefinder ஆர்டர் எடுத்த பிறகு விலையை சொல்கிறது. தடையாக இருந்த ஒரு விஷயத்தை சாதகமாக மாற்றிகொண்டு தன்னை தானே தகவமைத்துகொண்டது Pricefinder.in
ஆக, இனி வெண்டார்கள் ஆர்டர்கள் பெறுவதற்கோ அல்லது கஸ்டமர்கள் ஆர்டர்கள் கொடுப்பதற்கோ எதுவும் தடையாக இருக்காது. மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்கண்ட Contact us பார்ம் மூலம் தொடர்பு கொள்ளவும்.