கூடுதலாக ஒரு செட் சட்னி சாம்பார் கேட்டதற்கு, இல்லீங்க இவ்வளவுதான் வரும் என்று கடைகாரர் சொல்ல, அப்ப பார்சல் வேண்டாம் என அந்த கஸ்டமர் விருட்டென கிளம்பினார். எங்கு கொடுக்கிறார்களோ அங்கேயே வாங்கிகொள்ளுங்கள் என்று கடைகாரர் சொல்லி வந்த கஸ்டமரை வழியனுப்பி வைத்தார். நடப்பவற்றை பார்த்துகொண்டிருந்தேன்.
ஒரு காலத்தில் நானும் இருபது வயதுகளில் கடைக்கு வந்த கஸ்டமர் பந்தல் கட்டும் சவுக்கு மரங்களை எடுத்து போடுவதற்கு என்னை உதவிக்கு அழைத்தபோது, அதெல்லாம் நான் வரமுடியாது என்று கண்டிப்பாக மறுத்தேன் உடனே கடையில் இருந்த அப்பாவுக்கு தெரிந்தவர், பையன் தெரியாமல் சொல்லிவிட்டார் தான் உதவுவதாக சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார். நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னாளில் அறிந்து வேதனைப்பட்டேன். எல்லா நேரமும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைக்காமல், ஆவரேஜாக விற்கவேண்டும், வந்த கஸ்டமர் வெறுங்கையோடு போனால் அது அந்த கடையின் அழிவின் ஆரம்பம்.
இதோ இந்த மடிப்பாக்கத்தில், அது பேன்சிகடை என சொல்லமுடியாது ஒரு மினி சூப்பர் மார்கெட் என சொல்லலாம். நான் கடையில் குழந்தைக்கு Clay வாங்க சென்றபோது, அது இல்லை. எனக்கு முன்னால் வேறு ஒரு கஸ்டமர், வந்தவர் என்ன வாங்க வந்தோரோ தெரியவில்லை வந்தவர் உடனே திரும்பினார். இதை பார்த்த கடை முதலாளி, திடு திடுவென வெளியே வந்து ஏன் சார் என்ன வந்தீங்க ஒன்றும் வாங்காமா போறீங்களே என்ன விஷயம் என கேட்டார். அசந்துதான் போனேன். இந்த தொழில் பக்திதான் அந்த கடைக்கு மேன்மேலும் கஸ்டமர்களை வரவழைக்கிறது. பள்ளிவாசலுக்கு வரும் தொழுகையாளிகளை இறைவன் கண்ணியப்படுத்துகிறான் என்று சொல்வரார்கள் ஏனெனில் அது அவன் இல்லம். அவனை நாடி இறைநேசர்கள் போகிறார்கள், என்றும் அவன் அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை.
இந்த உலகம் பெரியாதாக இருக்கலாம் ஆனால் நாம் வைத்திருக்கும் கடையை சுற்றி ஓரளவு மக்கள்தான் இருக்கிறார்கள். ஒருவர் போனால் என்ன? இன்னொருவர் என்று இன்றை போட்டி மிகுந்த கால கட்டத்தில் வியாபாரிகள் கஸ்டமர்களை புறம் தள்ள முடியாது.
சில கஸ்டமர்கள் பெரிய தலைவலி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி பட்டவர்களை நீங்கள் உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றுவதுதான் உங்களை திறமையானவராக மாற்றும். சார், கஸ்டமர்களிடம் மிகவும் மெண்மையாக நடந்துகொண்டால் கடன் கேட்கிறார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆம், சில விஷயங்களில் கடன் கொடுக்கத்தான் வேண்டும். எல்லா நேரமும் பணம் கொடுத்து வாங்குவதற்கு அவன் எதற்கு உங்களிடம் தினமும் வரவேண்டும். அதனால் கஸ்டமர்களை தக்கவைப்பதற்கு சில விஷயங்களில் ரிஸ்க் எடுக்கதான் வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் இத்தனை பேர் இருக்கும்போது, ஒருவர் உங்களை தேடி வழிகேட்கிறார் என்றால் என்ன அர்த்தம். அவருக்கு உங்கள் முகம் ஏதோ ஒரு வகையில் பரிச்சயமாக இருக்கிறது என்று அர்த்தம். அவர் உங்களை அணுகுவதற்கு உங்களின் தோற்றம் தடையாக இல்லை என்பதை அறிகிறார். பரிச்சயமில்லாத ஒருவருக்கு, உங்களின் தோற்றமே ஒரு நல் எண்ணத்தை கொடுக்கிறது என்றால் கடையின் முதலாளி சீட்டில் அமர்திருக்கும் முதலாளிகள் எந்தளவுக்கு இருக்கவேண்டும். கஸ்டமர்கள் உங்களிடம் தைரியமாக பேசுவதற்கு முன்வரவேண்டும்.