Good chance to become entrepreneur

0.000
Last Modified
Detailed Information

சர்வீஸ் professionals களின் பெயர், அவரது அலுவலகம், போன் நம்பர் என அனைத்தையும் கஸ்டமருக்கு காட்டாமல் சர்வீஸ் கொடுக்கலாம் என்றிருந்தேன்.

சர்வீஸ் providers களின் நம்பரை இணையத்தில் காட்டுவதால் நேரடியாக கஸ்டமர்கள் அவர்களை அழைத்து சர்வீஸ் புக் செய்து கொள்வார்கள் பிறகு நமக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும் என்று ஒரு அச்சம் இருந்தது.

ஆனால் யோசித்து பார்த்தேன், நான் கட்டமைத்துள்ள இந்த தளமே பொதுமக்களின் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கட்டும் என்றுதான் பிறகு ஏன் நம்பரை மறைப்பானேன்? என தோன்றியது. அதுவும் இல்லாமல் நாம் இருக்கும் இந்த காலகட்டத்தில் டேட்டா என்பது மிக எளிதாக கிடைத்துவிடும். ஒரு திறந்த வெளி புத்தகம் மாதிரி இணைத்தளம் இருக்கும்போது இதில் எதற்கு நம்பரை மறைப்பானேன் என்று அதனை பதிவிட நானே சர்வீஸ் providers களை சொல்கிறேன்.

இந்த தளம் மூலம் நிறைய பேர் தொழில் முனைவோராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஒரு சர்வீஸ் provider ஆக நீங்கள் தான் உங்களுக்கு பாஸ். உங்களுக்கு மேல் யாரும் இல்லை, உங்களுக்கு கீழும் யாரும் இல்லை. அதனால், நம்பிக்கையுடன் உங்கள் profile ஐ அப்டேட் செய்யுங்கள். நிச்சயமாக எதிர்காலம் இருக்கிறது.

அதேபோல கஸ்டமர்களுக்கு உங்களை பற்றி, உங்களுடைய professional experience பற்றி, என அனைத்தும் தெரிந்து இருப்பதில் தவறில்லையே? அதனால்தான் கண்டிப்பாக உங்கள் profile யில் அனைத்து விஷயங்களையும் பதிவிடுங்கள். கஸ்டமர் pricefinder.in வழியாக உங்களை சர்வீஸை புக் செய்தாலும் சரி, இல்லை நேரடியாக புக் செய்தாலும் சரி அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. எங்களுக்கு வேண்டியது எல்லாம், நீங்கள் உங்கள் avalablity ஐ அப்டேடாக வைத்திருக்கிறீர்களா என்பதுதான், ஏனெனில் எங்கள் தளத்திற்கு வரும் கஸ்டமர்களுக்கு அதுதான் முக்கியம். அவர்கள் எப்படி புக்கிங் செய்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.

நீங்கள் ஒரு தொழில் முனைவோராக ஆகுவதற்கு, உங்களுக்கான கஸ்டமர்களை அடையாளம் காணுவதற்கு, உங்களின் lead க்காக யாரையும் சார்ந்திருக்காமல் நீங்கள் உங்களை மட்டுமே சாரந்திருப்பதற்கு, நாங்கள் pricefinder.in வழிவகை செய்கிறோம்.

எங்கள் தளத்தில் இணைவதற்கு [email protected] க்கு உங்கள் விபரங்களை அனுப்புங்கள்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories