Headless CMS என்றால் என்ன?

0.000
Last Modified
Detailed Information

Headless என்ற விஷயம் வெப் சைட் டெவலப்மெண்ட் இன்டஸ்டரியில் முன்பே பேசப்பட்டு வந்தாலும் இப்பொழுதுதான் நாங்கள் ஒரு டெஸ்ட் ப்ராஜக்ட் செய்து கொண்டிருக்கிறோம். தூரத்தில் நின்று பார்ப்பதற்கும் அதில் வேலை செய்து பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

Headless என்றால் என்ன? wordpress அல்லது shopify யை எடுத்துகொண்டால் backend and frontend இரண்டும் ஒரு ப்ளாட்பார்மில்தான் இருக்கவேண்டும். ஆனால் headless யில் backend ஐ தனியே பிரித்துவிடுகிறார்கள். உதராணத்திற்கு Strapi CMS ஆனது தன்னக்கத்தே அனைத்து backend operations யும் வைத்திருக்கிறது அதற்கு front end என்பது இல்லை, அதாவது தீம் என்பது இல்லை. அனைத்து அவுட்புட்டும் json ஆகத்தான் வரும் இதனை நீங்கள் எதில் வேண்டுமானாலும் front end ஐ டெவலப் செய்து கொள்ளலாம். For example, React, VueJs என எதுவாக இருந்தாலும்.

இதனால் என்ன நன்மை? ஒரு json, நீங்கள் இதனை எதில் வேண்டுமானாலும் கால் செய்துகொள்ளலாம், website, mobile app, pos, என எந்த front end யிலும். இது வேலையை எளிதாக்குகிறது. மேலும் wordpress, shopify கொடுக்கும் store front api யை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories