வீடுகளில் இருக்கும் இந்த பரண் என்றழைக்கபடும்? சிலாப் அல்லது கப்போர்டுகள் என்பவை எதற்காக வைக்கப்படுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை. எதற்காகவோ வைக்கட்டும் ஆனால் அதை close செய்யும்படி வைத்தால்தான் என்ன? வீடுகளின் திறந்தவெளி குப்பை கிடங்கு அதுதான்.
திறந்த வெளி குப்பை கிடங்கு. பேன் போட்டு ஏசி ஆன் செய்தால் இருக்கும் தூசுகள் எல்லாம் ஏசிக்கு போய் நம் நுரையீரலுக்கு நேராக போய் சேருகிறது. இந்த சிமெண்ட் சிலாபை விற்கும் கடைகாரர்கள் அப்படியே ரெடிமேடாக வைத்து மூடும் கதவுகளையும் விற்று எங்களை பாதுகாக்கவேண்டும்.
மேலே ஒரு சிலாப்,சைடில் ஷெல்புக்கு பல சிலாபுகள் என வீடு முழுவதும் சிலாபுகள் நிறைய வைத்து வீடு கட்டிவிடுகிறார்கள். பிறகு அதை மூடுவதற்கு ஆகும் செலவை பார்த்துவிட்டு அப்படியே பல பத்தாண்டுகள் தள்ளிவிடுகிறார்கள் பிறகு அந்த சிமெண்ட் சிலாபுகளே உதிர்ந்துவிடுகின்றன.
இது போதாது என்று சமையலறையில் நிறையவைத்து அதை மாடுலர் கிச்சன் என்றழைக்கிறார்கள். இதில் நல்ல விஷயம் மாடுலர் கிச்சனில், அனைத்து சிலாபுகளும் கதவுகள் கொண்டு மூடப்பட்டிருக்கும்.
மேலே ஏறுவதற்கு என்று லேடர் ஒன்று வைத்திருக்கிறார்கள். இதில் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது அது ரகசிய அறைகள். அவைகள் எல்லாம் பாத்ரூம் டாய்லட் கட்டப்படிருக்கும் தளத்தின் மேல் இவை பெரும்பாலும் இருக்கும் இப்பொழுது எப்படி வைக்கிறார்களோ தெரியவில்லை.
வீடுகளை குடோனோகவும், ரகசிய அறைகளாகவும் கட்டாதீர்கள். அதேபோல சிலாபுகளுக்கு பதில் போடர்பிள் அலமாரிகள் வையுங்கள். அதுவும் இலகுவாக. உங்கள் கைக்கு எட்டாத, நீங்கள் எட்ட முடியாத தூரத்தில் வைப்பவை எல்லாம் எப்பொழுதும் உங்களுக்கு உதவுவதில்லை. பின்பு எப்படி பாத்திரங்களை அடுக்குவது?
அதற்கு என ஒரு அறையை தனியாக வையுங்கள். அதில் கண்டிப்பாக சிலாபுகள் இருக்ககூடாது. இலகுவான பர்னிச்சர் மூலம் உங்கள் பாத்திரங்களை அடுக்கிவையுங்கள். கூடுமானவரை அதனை நீங்கள் மூடிவைத்துவிடுங்கள். இதுவே நல்லது.