டைரக்டரி - தக்க சமயத்தில் உங்களை காக்கும்

0.000
Last Modified
Detailed Information

Pricefinder.in யில் டைரக்டரியில் (Directory) கூடுமானவரை அதிகமான டீடயில்ஸ் கொடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதனால்தான் இப்பொழுது Facilities, Services Offered, Products, Languages Known என்ற நான்கு புதிய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறேன்.

இதனால் என்ன பெரிய மாற்றம் வந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா? சொல்கிறேன். தற்சமயத்துக்கு Health sector ஐ எடுத்துகொள்வோம், இங்கு Clinics என்றால் சிறிய கன்சல்டேஷன் மையம் என்று பொருள்படும் இதில் பார்மஸி, பார்க்கிங் என்று சிறிய அளவிலான facility இருக்கும். இதுவே Hospital என்றால் அது மிகப்பெரியது அங்கு பெட், ஆபரேஷன் தியேட்டர், ஆம்புலன்ஸ், ICU, பிஸியோதெரபி என்று பல விஷயங்கள் இருக்கும். எந்த facitlity எங்கு கிடைக்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.

உதாரணத்திற்கு, ECG போன்ற சில விஷயங்கள் சில கிளினிக்கில் இருக்கலாம், அல்லது இல்லாமலும் போகலாம். ஸ்கேன் என்பது அரிதாக சில கிளினிக்கில் இருக்கலாம். ஆக, பொதுமக்களுக்கு எந்த விஷயங்கள் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதனால்தான் ஒரு அட்மினால் பேக் எண்டில் என்ன பார்க்க முடிகிறதோ அதே விஷயங்களை பொதுமக்களும் பார்க்கவேண்டும் என்பதால் அனைத்து டேட்டாவும் வெளிப்படையாக அமைக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் அவர்களால் விரைவாக முடிவெடுக்கமுடியும்.

அதனால்தான் Facilities மற்றும் Services ஐ வைத்திருக்கிறேன். Languages Known என்பது, சிலர் சர்வீஸ் professionals உடன் தமக்கு நன்றாக பேசத் தெரிந்த மொழியில் உரையாடவேண்டும் என்று நினைப்பார்கள் அப்பொழுது இந்த ஆப்ஷன் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இறுதியாக Products. இது Pricefinder.in யின் home page க்கு இணையான functionality. நீங்கள் தேடும் பொருளை முதலில் தெரிவு செய்தால் பிறகு அதுவே அது எங்கு கிடைக்கும் என்பதை சொல்லிவிடும். அந்த listing கிளிக் செய்து, நீங்கள் products ஐ பர்சேஸ் செய்யலாம்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக டீடயில்ஸ் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். அதனால்தான், நான் வெண்டார்களுக்கு சொல்லிகொள்வது எல்லாம், நீங்கள் உங்கள் டீடயில்ஸ் அதிகமாக கொடுங்கள். அது தேவைப்படுவோர்க்கு உதவியாக இருக்கும்.

இதில் ஏதாவது கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் : [email protected]

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories