How much does it cost to develop simple website? – Tamil

0.000
Last Modified
Detailed Information

ஒவ்வொருவருக்கும் ஒரு வெப்சைட் என்பது இப்பொழுது அத்தியாவசியம் ஆகிவிட்ட இந்த நிலையில் இந்த கட்டுரை website development ஐ விலாவாரியாக அலசுகிறது. 6000 ரூபாயில் இது சாத்தியம்

வெப்சைட் டெவலப்மெண்ட் என்பது இப்பொழுது மிகவும் எளியதாகிவிட்டது. இதை துவங்குவதற்கு இப்பொழுது ஒரு domain, ஒரு நல்ல தீம், விரைவான ஹோஸ்டிங் என்று மூன்று விஷயங்களில் இதை அடக்கிவிடலாம். இதற்கு எவ்வளவு சார்ஜ் ஆகும்? ஒரு கம்பெனிக்கான வெப்சைட்டை கொண்டு எப்படி வியாபாரத்தை பெருக்குவது, இன்னும் நிறைய கஸ்டமர்களை எப்படி அடையாளம் காண்பது என பல விஷயங்களை இங்கே ஆராய்வோம். வாருங்கள்.

வெப்சைட் எதற்கு முக்கியம்

உங்களின் பர்ஸில் உள்ள விசிட்டிங் கார்டு உங்களை எப்படி அடையாளம் காட்டுகிறதோ அதேபோலதான் வெப்சைட் உங்களை அடையாளம் காட்டுகிறது. என்ன ஒன்று விசிட்டிங் கார்டு என்பது உள்ளங்கையில் அடங்கிவிடும் அதில் நீங்கள் உங்களை பற்றிய விஷயங்களை நாலு வரியில் நறுக்கென்று சொல்லவேண்டும் ஆனால் வெப்சைட்டில் உங்களின் எல்லாவிஷயங்களையும் பகிரமுடியும் அத்தோடு இதை உங்களின் மார்கெட்டிங் உத்தியாக கடைபிடித்தால் இதன்மூலம் புதுப்புது கஸ்டமர்களை அடையாளம் காணலாம். நீங்கள் 10 க்கு 10 சைஸில் கடை வைத்திருந்தாலும் உங்கள் presence ஆன்லைனில் மிகப்பிரமாண்டமாக காட்டப்படும் அத்தோடு மட்டுமல்ல நீங்கள் உங்களின் எல்லைகளை ஒரு குறிப்பிட்ட எல்லையோடு இனி நிறுத்தவேண்டியதில்லை. உங்கள் தளத்தை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் தெரியும்படி செய்து புதிய வியாபாரத்தை பெறலாம் இதனால்தான் வெப்சைட் என்பது ஒவ்வொரு கடை, கம்பெனி, தொழிற்சாலை என வியாபாரம் செய்யும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறுவியாகவேண்டியது கட்டாயம்.

ஒரு கடையை நாம் நிறுவுவதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம் ஆனால் ஒரு வெப்சைட் என்பது எவ்வளவு முக்கியமானது என தெரிந்தால் நீங்கள் இதற்கு ஆகும் செலவை ஒரு பொருட்டாக பார்க்க மாட்டீர்கள் அதோடு இதை உங்களின் அடையாளமாக மாறும்போது உங்களுக்கு Branding என்பது எவ்வளவு முக்கியம் என தெரியவரும். இன்றைய போட்டியான காலகட்டத்தில் அனைவரும் நிலைத்து நிற்க ஒரு Branding தேவைப்படுகிறது. நீங்கள் அதனை அழுத்தமாக உங்களின் கஸ்டமர்களின் மனதில் பதிக்கவேண்டும், இதற்கு இவர்கள்தான் என அவர்கள் மனதில் உங்கள் பெயர் தெரியகூடாது உங்களின் ப்ராண்ட்தான் தெரியவேண்டும் அந்தளவிற்கு உங்களின் வியாபார நிறுவதனத்தின் பெயரை பரிச்சயமாக்கவேண்டும் என்றால் அது செய்வதற்கு எது உதவும். வெறும் விசிட்டிங் கார்டில் எப்படி மற்றவர்களை நீங்கள் impress செய்யமுடியும் அதற்குதான் இந்த வெப்சைட் என்பது அத்தியாவாசியமாகிறது.

நிற்க! வெப்சைட்டில் பயன்கள் என நாம் லிஸ்ட் செய்ய ஆரம்பித்தால் அந்த பட்டியல் இப்படி நீளும்.
உங்கள் தொழிலில் நீங்கள் சாதித்தவற்றை உங்கள் மனதுக்குள் பூட்டி கொண்டவற்றை உலகுக்கு பறைசாற்ற வெப்சைட் உதவும்.
உங்கள் கஸ்டமர்களின் பாராட்டு பத்திரங்களை வெளி உலகுக்கு கர்வத்துடன் நீங்கள் சொல்வதற்கு
உங்கள் கடையின் அழகிய புகைபடங்களை காட்டுவதற்கு.
உங்களின் சர்வீஸ்களை எந்தளவிற்கு அழகாக மற்றவர்களை விட குறைந்த அளவிற்கு கொடுக்குமுடியும் என்பதற்கு
உங்களின் கஸ்டமர்கள் உங்களிடம் நேரிடையாக Contact செய்வதற்கு
எவ்வளவு குறைந்த விலையில் மற்றவர்களை விட நேர்த்தியாக உங்களால் கொடுக்கமுடியும் என்பதற்கு உங்களின் விலைப்பட்டியலை தைரியமாய் வெளியிடுவதற்கு
உங்களின் கடை அல்லது கம்பெனியின் Branding ஐ promote செய்வதற்கு
உங்களுக்காக 24/7 உங்களின் வியாபாரத்தை அது வெளி உலகுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருக்கும். நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்காக அது செயல்பட்டு கொண்டியிருக்க
இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும் இது நான் கூகுள் செர்ச்சில் முதல் இரண்டு பக்கங்களில் காட்டுவதால் வரும் பயன்களை தவிர்த்து. அதை பற்றி இந்த கட்டுரையின் இறுதியில் காணுவோம்.

இதற்கு எவ்வளவு செலவு ஆகும்

உங்கள் கம்பெனியின் அல்லது கடையின் ப்ராண்டிங் வேல்யூவை பொறுத்து இது மாறுபடும். உதராணத்திற்கு ஒரு product development company யின் வெப்சைட் என்றால் எப்படி இருக்கவேண்டும். அவர்களின் product பற்றிய மக்களின் மனதில் அமர்ந்துள்ள எண்ணங்களை பிரதிபலிக்கவேண்டும். எப்படி ஒரு product package கவர் வடிவமைப்பு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல்தான் வெப்சைட்டின் டிசைனும் இருக்கவேண்டும். இதனை ஏதோ ஒரு தீம் எடுத்தோம் செய்து முடித்தோம் என்றிருக்ககூடாது. மாறாக நாம் இதனை ஒரு prototype வடிவத்தில் முதலில் கொண்டு வர வேண்டும் பிறகு அதனை கிளையண்டின் பார்வைக்கு அனுப்பவேண்டும் அவருக்கு அது பிடித்திருக்கிறதா என்று முடிவு செய்த பின்பு அந்த prototype ஐ HTML/CSS க்கு மாற்றம் செய்யலாம்.

இப்பொழுது Adobe XD போன்ற Prototype டூல் மூலமாக இதனை மிக எளிதாக கொண்டுவரமுடியும் அத்துடன் client நேரிடையாக கமெண்ட் செய்யும் விஷயமும் இதில் உள்ளது. இதனால் back and forth இமெயில் communication தவிர்க்கப்படுகிறது. உண்மையை சொல்லபோனால் வெப்சைட் டிசைனிங் என்பது அனுஅனுவாய் ரசித்து ருசித்து வெப் டிசைனரால் உருவாக்கப்படும் ஒரு வண்ண காவியம் ஆனால் இதற்கு நீங்கள் நிறைய செலவு செய்யவேண்டி வரும், கால அவகாமும் நிறைய வேண்டும். எனக்கு தெரிந்து இதுபோல் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் டிசைன் செய்து தொடங்கினால் இதற்கு ஆகும் செலவு பல லட்சங்களை தொடும் அதனால்தான் இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு industries க்கும் கிடைக்கின்ற ரெடிமேட் தீம்களை கொண்டு கிளையண்டின் லோகோ கலருக்கு ஏற்றாற்போல் சில styling களைமாற்றி கொடுத்து விடுகிறார்கள். இதற்கு ஆகும் செலவு 25000 ரூபாய்.

இந்த 25000 ரூபாயில் நீங்கள் கிடைக்கப்பெறுவது பலர் தங்களின் பொண்ணான பல மாதங்கள் செலவழித்து உருவாக்கிய டிசைன்களைதான் அது எதனால் விலை மலிவாக கிடைக்கிறது என்று தெரியவேண்டுமா? பெரிய சூட்சமம் இல்லை. விளக்குகிறேன்.

themeforest.net என்பது பல freelancer கள் தங்கள் hobby யாக தங்களின் உபரி நேரத்தை செலவழித்து பல மாதங்கள் மற்றும் பல வருடங்கள் செலவழித்து ஒரு தீமை உருவாக்கியிருப்பார்கள். அதனை அவர்கள் விற்கு வேண்டிய தொகை என்று கணக்கிட்டால் பல லகரங்கள் ஆகும் ஆனால் இதனை ஒருவருக்கு பல லட்சங்களுக்கு விற்பதை விட பல லட்சம் பேருக்கு வெறும் ஆயிரங்களின் விற்றால் ? இரண்டும் ஒரு கணக்குதான். அவர் தான் உருவாக்கிய தீமுக்கு பல லட்சங்களை பெற்றிருப்பார். மேலும் மேலும் அந்த தீமை பட்டை தீட்டி இன்னும் மெருகேற்றி அதனை பல ஆயிரம் கஸ்டமர்களை அடையாளம் காண நினைப்பார். அதனால் அவருக்கும் லாபம் நமக்கும் லாபம். பல லட்சங்கள் ஆகும் வெப்சைட் டிசைன் இப்பொழுது 5000 ரூபாயிக்கும் 6000 ரூபாயிக்கும் கிடைக்கும்போது யார் விடுவார்கள். அதனால்தான் இன்றும் பல சாப்ட்வேர்க்ள் கம்பெனிகள் 5000 ரூபாய் தீமை வாங்கி 100 மடங்கு லாபம் பார்க்கிறார்கள். வாங்கும் கஸ்டமர்களுக்கும் தெரியபோவதில்லை. இதுதான் இன்றைய வெப்டெவலப்மெண்ட் நிலவரம்.

5000 ருபாய் தீமை 1 லட்சத்திற்கு விற்காமல் 25000 ருபாய்க்கு விற்பவர் சரியானவர்தானே. இன்னும் சொல்லப்போனால் அவர் தீமை அப்படியே தூக்கி கொடுத்துவிடுவதில்லை அதனில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கு ஆகும் நேரங்களை கணக்கிட்டால் நீங்கள் செலவு செய்யும் பணம் நியாயமானதாக இருக்கும். ஒரு முறை நீங்கள் செலவு செய்யும் இந்த 25000 ரூபாய் என்பது ஒரே ஒரு முறைதான். நீங்கள் வாங்கிய அந்த premium theme license வாழ்நாள் முழுவதும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்பொழுதும் Hosting, Domain ஆகியவை கஸ்டமர் வாங்குவதுதான் சரி ஏனெனில் அவர்களின் கட்டுபாட்டில்தான் அவர்களுடைய இணையத்தளம் இருக்கவேண்டும். நீங்கள் Godaddy அல்லது Bluehost ஆகியோரிடம் போனால் அதிகபட்சம் வருடத்திற்கு 6000 ரூபாய் வரை ஆகும் மற்றும் டுமைனுக்கு .com என்றால் 1100 ,மற்றவை என்றால் அவை 700 ரூபாய் அளவுக்கு வரும். ஆக, மொத்தமாக நீங்கள் செலவு செய்யவேண்டியது

Website development cost – 25000 one time payment

Hosting – 6000/year

Domain – 1000/year

மொத்தமாக 32000 ரூபாய் ஆகும்.

சரி வெப்சைட்டின் உச்ச கட்டம் என்ன

இருக்கிறது. வெப்சைட் என்பது ஒரு அடிப்படை தேவை எந்த ஒரு செயலை செய்யவிரும்பினாலும் அதற்கு ஆதார தேவை இந்த வெப்சைட். ஆம் வெப்சைட் என்பது ஒரு சுவர் போன்றது. சித்திரம் வரைய வேண்டினால் அதற்கு நம்க்கு சுவர் வேண்டும் அல்லவா அங்குதான் பெரும் சுவராகிய வெப்சைட் தேவைப்படுகிறது. சரி 25000 ரூபாய்க்கு வெப்சைட் தயார் செய்தாகிவிட்டது என்று வைத்து கொள்வோம் அதற்கு அடுத்தபடியாக என்ன உச்சம் தொடபோகிறோம். சொல்கிறேன்.

நாம் வெப்சைட் தயார்படுத்தி வைத்துகொண்டு அதனை நம்முடைய விசிட்டிங்கார்டில் போட்டு கொள்ளலாம் அல்லது கடையின் டைரி, காலண்டரில் பிரிண்ட் போட்டு கொள்ளலாம் ஆனால் அது நாமாக கொண்டுபோய் சேர்க்கும் நபர்களுக்கு மட்டுமே போய் சேரும். நாமாக வலியபோல் சேர்த்தால்தான் உண்டு. அப்படியே நாம் வலியபோய் சேர்த்தாலும் அவர் நம்முடயை தேவை வரும்போது நம்மை பற்றி நினைவு இருந்தால் விசாரிப்பார் அப்படி அவருக்கு நினைவு வந்து நம்முடையை வர்த்தகத்தின் பேரை மறந்துவிட்டால் அவர் எங்கே போய் நம்மை தேடுவார்.

யாரும் தேவை இருந்தால் மட்டுமே தேடுவார்கள். தேவை வந்து எங்கே தேடுவது என்று பார்த்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது Google. அந்த கூகளில் அவருடைய தேவையை தேடினால் அது அவருக்கு அருகில் எங்கு உள்ளது என கூகுள் பட்டியலிடும். அந்த பட்டியலில் யார் முதல் இரண்டு பக்கங்களில் இடம் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அடித்தது ஜாக்பாட். ஏனெனில் அவருக்கு அந்த சர்வீசுக்கான அழைப்புக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேபோல் யாரும் நீங்கள் தெரிந்தவர் என்று ஒரே சிட்டிங்கில் உங்களிடம் வேலையை தூக்கிகொடுத்து விடமாட்டார்கள் அவர்களும் பல இடங்களுக்கு போன் செய்து ரேட்டை விசாரித்து யார் குறைந்து செலவில் நிறைந்த தரத்துடன் செய்து தருகிறார்களோ அவர்களுக்கே வியாபாரத்தை தருவார்கள். ஆக, நீங்கள் உங்கள் தளத்தை கூகுள் செர்ச்சில் முதல் இரண்டு பக்கங்களில் கொண்டு வர வேண்டும் அத்துடன் உங்களின் வெப்சைட் என்பது விசிட்டர்களின் நம்பகத்தன்மையை பெற்றிருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே உங்களை consider செய்வார்கள் இல்லையெனில் அவர்கள் வேறு தளத்திற்கு தாவிவிடுவார்கள். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உங்கள் வெப்சைட் லோட் ஆகும் டைம். 3 செகண்டுக்கு மேல் உங்கள் தளம் லோடாகாமல் சுற்றிகொண்டே இருந்தால் உங்கள் விசிட்டர்கள் close செய்துவிடுவார்கள். அவர்கள் தேடுதலின் உச்சத்தில் இருக்கும்போது அவர்கள் எதிர்பார்ப்பது வேகத்தின் உச்சம். அந்த நேரத்தில் உங்கள் தளம் 2 செகண்டில் லோட் ஆனால் உங்களுக்கு வெகுவாக சாத்தியம் இருக்கிறது. அதேபோல் SSL என்னும் செக்கியூரிட்டியை உங்கள் தளம் பெற்றிருக்கவேண்டியது முக்கியம். இல்லையெனில் Not secure என்று உங்கள் வெப்சைட் லோட் ஆகும்போது இடது மூலையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இதனால் விசிட்டர்களுக்கு உங்களின் தளத்தின் மேல் நல்ல எண்ணம் உருவாகாது. என்னாடா இது ஒரு சின்ன விஷயத்தில்கூட concentrate செய்யமுடியாத இந்த நபரா நமக்கு சர்வீஸை செய்து கொடுக்கபோகிறார் என்ற நெகடிவ் எண்ணம் உங்கள் விசிட்டர்க்ளுக்கு வரும் ஆதலால் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சிரமம் பார்க்காமல் நாம் செய்தாக வேண்டும்.

ஓகே நாம் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். SEO. பல் பில்லியன் டாலர்கள் புழங்கும் ஆன்லைன் சந்தையில் இப்பொழுது இந்த வார்த்தை பரிச்சயமானது. கூகளில் இடம் கிடைத்தால் நீங்கள்தான் அடுத்த லட்சாதிபதி கோடீஸ்வரர் எல்லாம். ஆனால் இதற்கு என்ன தேவை. ?

இந்த SEO செய்வதற்கு என ஒரு தனி டீம் எல்லா கம்பெனியிலும் உள்ளது. நீங்கள் வருடத்திற்கு செலவு செய்யும் இந்த 6000 ரூபாயை அவர்கள் மாதத்திற்கு கேட்பார்கள். ஆம், நீங்கள் மாதாமாதம் செலவு செய்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் உங்களின் தளம் keyword அடிப்படையில் முன்னிலைப்படுத்தபடும். இதனால் நீங்கள் நிறையை பிஸினஸை பெறலாம்.

அத்தோடு மட்டுமல்லாமல் நீங்கள் social network ஆன FB, Twiiter, Instrgram யில் ஆக்டிவாக இருக்கவேண்டியது அவசியம் எல்லா இடங்களிலும் சேரும் உங்கள் தளத்தின் பெயர்தான் Google ரேக்கிங்கு உதவும்.

என்னடா இது ரொம்ப காசு செலவு ஆகும் வீஷயமாக இருக்கிறதே என நீங்கள் நினைப்பது புரிகிறது ஆனால் இதெல்லாம் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வித்தை என நின நீங்கள் உணர்ந்தால் இதில் கலக்கலாம்.

எனக்கு தெரிந்து ஒரு கம்பெனி CEO நன்றாக seo தெரிந்தவர். அவர் முதலில் ஒரு கூப்பன் சைட் ஆரம்பித்தார் கிட்டதட்ட பத்தாண்டுகளுகு முன்னால். அவர் எப்படி ஒரு தளத்தை கூகளின் முதலிரண்டு பக்கங்களில் கொண்டு வர முடியும் என தெரிந்தவர் அதனால் அவர் அந்த தளத்தை அமேரிக்காவில் கூகுள் செர்ச்சில் கொண்டுவந்து நல்ல லாபம் பார்த்த பின்பு அதை அப்படியே வேறொருவருக்கு கைமாற்றிவிட்டு அதிலும் கணிசமான பணத்தை பெற்றுவிட்டார். பிறகு யோசித்தார் இது நல்ல பிசினாக இருக்கிறதே நாம் இதை அடிப்படையாக கொண்டு வேறொரு தொழிலை ஆரம்பித்தால் என்ன புதுமையான ஒரு விஷயத்தை கையில் எடுத்தார், ஆம் எடுத்த துறை என்பது கூப்பன் சைட்டை கம்பேர் செய்யும்போது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட்டது போல் இருக்கும். ஏனெனில் இந்த முறை அவர் இறங்கியது Nutritional supplement powder விற்பனையில் அதுவும் அவர்கள் இல் நியூட்ரிஷன்களோடு சேர்ந்துகொண்டு அவர்களே தயாரித்த supplement powder. இதை நம்மூரில் சத்துமாவு என்று சொல்கிறோம். இங்கே நவதானியம் என்று கூவிகூவி விற்றாலும் யாரும் சீண்ட மாட்டரார்கள் ஆனால் இப்பொழுது மேலை நாடுகளில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் ஆரவம் காட்டுகின்றனர், ஆதவும் வேலையில்லை வெள்ளைகாரன் என் சொல்லும் வெள்ளைகாரர்கள் வேலையின் அவசரகதியில் ஒரு நாள் உணவை அவசரகதியில் உண்டு ஏனோதானோ என்று அந்த நாளை முடிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்ததுதான் இந்த சத்துமாவு. சொன்னார் நம்ப மாட்டீர்கள் இன்று அவர் பல நூறு கோடிகளுக்கு அதிபதி. அதுவம் வெறும் இகாமர்ஸ் தளம் மூலம். காரணம் சிம்பிள் அவர் நம்பியது மார்கெட்டிங்கை. அதுவும் டிஜிட்டல் மார்கெட்டிங்கை. இன்று அவர் உச்சாணி கொம்பில் நிற்கிறார் என்றால் அவருக்கு உதவியது அவரில் SEO அறிவுதான்.

அப்பேற்ப்பட்ட அலாவுதீனின் அற்பதுவிளக்கை நிராகரித்துவிட்டு நீங்கள் வெப்சைட் நடத்துவது எதற்காக, யாருகாக? அதனால்தான் சொல்கிறோம். ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டீர்கள் என்றால் முழுமையாக இறங்குங்கள். நீங்கள் இறங்கிய களத்தில் நீங்கள் ஜெயிக்கவேண்டும், மற்ற சில்லு சிண்டுகளை புற முதுகிட்டு ஓடவிட வேண்டும் என்றால் நீங்கள் ஏந்த வேண்டியது அறிவாயுதத்தை. ஜெயிப்பதோ அல்லது தோற்பதோ அடுத்தது முதலில் நீங்கள் களத்தில் இருக்கவேண்டும். உங்களை களம் இறக்குவதற்கும் உங்களின் உச்சாணிக்கொம்பில் நிறுத்திவைக்கவும் நாங்கள் இருக்கிறோம். முதலில் ஒரு வெப்சைட்டை துவங்குவோம் 25000 ரூபாயில், அதனை அமைத்துதர மின்னஞ்சல் அனுப்பவும் இந்த மெயில் ஐடிக்கு [email protected]

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories