முன்செல்லும் ஆட்டோவிலிருந்து வெளியிடப்பட்ட அளவுக்கு அதிகமான புகை, ஏற்கனவே இருக்கும் தூசு படலத்தை மேலும் அடர்த்தியாக்கியது. பைக்கில் இருந்த எனது நர்சரி படிக்கும் மகன் வேண்டுமென்றே இருமி காட்டினான். அடப்பாவமே, ஒரு நர்சரி படிக்கும் 3 வயது குழந்தைக்கு கூட தெரிகிறது இங்கு இருக்கும் ரோட்டின் நிலைமை எப்படி என்று ஆனால் அதிகாரிகள் ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கீழ்கட்டளை பஸ் ஸ்டாண்டு சிக்னலில் எனது பைக்குக்கு பக்கத்தில் இன்னொருவரும் தனது நர்சரி குழந்தையை அமர்த்தி கூட்டி வந்திருக்கிறார், அக்குழந்தை மாஸ்க் போட்டுகொண்டு இருந்தது. குழந்தைகளுக்கு கண்ணில் தூசு படாமல் இருக்க கண்ணாடி, தூசுயிலிருந்து பாதுகாக்க மாஸ்க் என நாம் பயணிப்பது சென்னையின் முக்கிய சாலையிலா அல்லது பாலைவனத்திலா என நினைக்க தோன்றியது.
மெட்ரோ வேலைப்பாடு நடக்கிறது என்பது இரு வாகனங்கள் செல்லும் இடத்தில் ஒரு வாகனம் செல்லும் நிலையை ஏற்படுத்தலாம் ஆனால் குண்டும் குழியுமான சாலைகளுக்கும் மெட்ரோவிற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்று புரியவில்லை. ஒருவேளை மெட்ரோ வேலைகள் முடிந்த பிறகுதான் ரோடு போடமுடியும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? இருந்தால் தெரிந்து கொண்டு ஏதாவது மாற்று இருக்குமா என தேடலாம். இந்த சிறு கட்டுரையின் முதல் பத்தி இங்கே https://mohamedkamil.com/madipakkam-koot-road-to-echankadu-signal-road/.
இந்த அரசு மக்கள் கருத்துகளை காது கொடுத்து கேட்கிறது, அதுவே மிகப்பெரிய விஷயம். எங்கோ ஒரு சாமானியன் கூறும் கருத்துக்கு பதில் எழுதி அதனை தீர்க்க முற்படும் சென்னை மாநகராட்சிக்கு என்னுடைய வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். அதேபோல், இந்த சாலை விஷயத்தையும் போர்கால அடிப்படையில் தீர்த்துவைத்தால் கோடி நன்மையாக இருக்கும்.