150 ரூபாய் மதிய உணவு. இதோ இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்து அமர்ந்து இருக்கிறேன். சுவை என்பதும் எதிலும் இல்லை. கூட்டு பொறியல் காரகுழம்பு சாம்பார் என எதுவும் சிலாகிக்கும் அளவுக்கு இல்லை. பாயாசத்தில் அளவுக்கதிமான சர்க்கரை. ரசம் ஒன்றுதான் சுமாராக இருக்கிறது. அப்பளம்கூட பிடிக்கவில்லை…
ஒரே ஒரு விஷயம். சமையலில் நாம் உபயோகிக்கும் பருப்பு, அரிசி, காய்கறிகள் அனைத்தும் உயர்தரமாகவும் சிறந்தவையாக இருந்தால் நாம் சுமாராக சமைத்தாலும் அது சூப்பராக வந்துவிடும். ஏன் அப்பளம் எடுத்தகொள்ளுங்கள் பிந்து பாப்புலர் அப்பளம் பொறித்தால் எப்படி சுவையாக இருக்கிறது.
உருளை கிழங்கில் நிறைய வகைகள் இருக்கிறது. சில உருளைகிழங்குகள் வாய்வு பிரச்சனையை கொடுக்கிறது அதனால் உருளை கிழங்கை நான் சாப்பிடுவதில்லை. ஆனால் ஏதோ ஒரு உருளைகிழங்கு வாய்வு பிரிச்சனையை கொடுப்பதில்லை ஆனால் அது எதுவென இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை.
சூளைமேட்டில் இருக்கும்போது ராமச்சந்திரா ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவேன். சைவமோ அசைவமோ அதை சூடாக சாப்பிட்டுவிட்டால் சுவை குறைவாக இருந்தாலும் நமக்கு அது தெரிவதில்லை. அங்கு ஆவி பறக்க சாம்பார் கூட்டு என வைப்பார்கள். அவ்வளவு நன்றாக இருக்கும். அந்த சாப்பாட்டை மிகவும் மிஸ் செய்கிறேன்.
ஏன் அதுபோல் சூடான சாப்பாட்டை எந்த ஹோட்டலும் பரிமாறுவதில்லை என தெரியவில்லை. காரப்பாக்கத்தில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அவர்கள் மைக்ரோ ஓவனில் வைத்து ஆவி பறக்க கொடுத்தார்கள். அதுகூட பிரச்சனை இல்லை. ஆனால் ஆறிபோன சாப்பாடு சுவையை குறைத்துவிடும். ஹோட்டல் முதலாளிகள் முயற்சி செய்யவும்