புதிய லிஸ்டிங் - Products

0.000
Last Modified
Detailed Information

shop.pricefinder.in/directory யை பற்றி கடந்த போஸ்டில் எழுதியிருந்தேன். அதில் புதிய 4 விஷயங்களை filter யில் இணைத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அதாவது, products, service, facilties, languages known. இதில் facilities மற்றும் languages known பிரச்சனை இல்லை. ஆனால் products மற்றும் service யில் சில நடைமுறை பிரச்சனைகள் உள்ளன.

ஒரு வெண்டாரின் கடையில் 850 க்கும் மேலான பொருட்கள் உள்ளன. அந்த 850 products யும் ஒரு டைரட்டரி லிஸ்டிங்கில் சேர்ப்பது அல்லது அனைத்து products யும் filter யின் போது தேடுவது என்பது செர்வர் ரிசோர்ஸ் அனைத்தையும் எடுத்துகொள்கிறது. விளைவு, செர்வர் டவுன் ஆகிவிடுகிறது. அதனால் products மற்றும் service ஐ directory filter யில் இருந்து நீக்கிவிட்டேன்.

அதற்கு பதிலாக, புதிதாக products மற்றும் service க்காக  pricefinder.in/shop என்ற லிஸ்டிங் வைத்துள்ளேன். அதில் filter ஆப்ஷன் உள்ளது. அது உங்களுக்கு பொருளையோ அல்லது சர்வீஸையோ தேடினால் அதுவே அது எந்த லொகேஷனில் கிடைக்கிறது என்பதை சொல்லிவிடும். இது அப்படியே pricefinder.in தளத்தின் functionality போல அமைந்து உள்ளது. இது கஸ்டமர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அத்துடன். சில சர்வீஸ்கள் மற்றும் products களுக்கு அதிகப்படியான தகவல்கள் தேவைப்படும் மற்றும் அவை அங்கேயே பர்சேஸ் செய்யவேண்டியதாக இருக்காது, உதராணத்திற்கு website creation, இது போன்ற சர்வீஸ்கள் மற்றும் products களுக்கு pricefinder.in/shop மூலம Quate பெற்றுக்கொண்டு பின்பு விலையை கொடுக்கலாம்.

அதேபோல, products, directory, offers, properties, qa எல்லாம் ஏற்றுவதை இலவசமாக கொடுத்துவிட்டு, அதில் ஒரு லிமிட்டுக்கு மேலாக products ஏற்றினால் premium என சார்ஜ் செய்யலாமா என யோசித்தேன், அப்படி செய்தால் vendors களுக்கு ஒரு restriction கொடுத்தது போல் ஆகிவிடும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குதான் பொருட்களை ஏற்றமுடியும். அது கஸ்டமர்களுக்குதான் பின்னடைவு ஏனெனில் எந்தளவுக்கு பொருட்கள் மற்றும் அதிகப்படியான விபரங்களை வெண்டார்கள் ஏற்றுகிறார்களோ அந்தளவுக்கு கஸ்டமர்களுக்கு நல்லது என நினைப்பவன் நான். இந்த தளத்தின் முக்கிய நோக்கமே கஸ்டமர்களுக்கு தேவைப்படும் விஷயம் நொடிப்பொழுதில் கிடைக்கவேண்டும். அது அவர்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவவேண்டும். இதற்கு எது குறுக்கே வந்தாலும் அவை எனக்கு வேண்டாம் என ஓரம் தள்ளிவிடுவேன்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் [email protected] க்கு மெயில் அனுப்புங்கள்.

 

 

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories