Perfex CRM Review – தமிழ்

0.000
Last Modified
Detailed Information

Codecanyon யில் கிடைக்கபெறும் சிறந்த invoice software. என்னடா இது அவர்கள் CRM மற்றும் PM டூல் என்கிறார்கள் நீங்கள் என்னவென்றால் Invoice சாப்ட்வேர் என்கிறீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. PayPal gateway integrete செய்து இருந்து invoice அனுப்பினால் அந்த invoice உடன் வரும் pay button ஐ கொண்டு பயனார்கள் பணம் கட்டினால் நமக்கு பேமண்ட் வரும் அவர்களுக்கு paid receipt வரும். பல முறை கிளையண்டிடம் பணத்தை இந்த டூலை கொண்டு பணம் வாங்கி இருக்கிறேன் என்பதால் நான் இதனை சொல்கிறேன். பணம் கொடுத்தவர்களுக்கும் தங்களுக்கான acknowledgement மாதிரி ஒரு receipt ஆட்டோமேடிக்காக உடனடியாக கிடைக்கபெறுவதால் அவர்களுக்கும், பரவாயில்லை பணம் போய் சேர்ந்துவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சு கிடைக்கும்.

பிசினஸின் பொதுவான அம்சம் என நான் கருதுவது, ஒரு சர்வீஸ் நீங்கள் கிடைக்கபெறுகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் ஒரு quate பெற்றிருக்கவேண்டும். அந்த quate ஐ நீங்கள் அப்ரூவ் செய்தால் மட்டுமே அது invoice ஆக மாறவேண்டும். புரிகிறதா. ஒரு வியாபாரி தன்னுடைய இஷ்டத்துக்கு invoice அனுப்ப முடியாது. அதற்கு அவர்கள் முதலில் கஸ்டமர்களிடம் முறையான அனுமதி பெறவேண்டும். அதுதான் இந்த quate. அது approve ஆனால் மட்டுமே வேலை ஆரம்பிக்கும், பிறகு invoice அனுப்பலாம். இந்த நடைமுறையை இந்த Perfex CRM அழகாக கையாண்டியிருக்கிறது. அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இது சாப்ட்வேர் யாரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்றால் எனக்கு தெரிந்து இது freelancers, சிறிய சாப்ட்வேர் ஏஜென்சி, நேர அளவில் வேலை செய்து அதற்கு பில்லை வசூலிக்கும் சர்வீஸ் யாராக இருந்தாலும் இதனை உபயோகிக்கலாம். பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அப்டேட்டாக இருக்கிறார்கள். அதனால் நம்பி இறங்கலாம்.

CRM என்று சொல்கிறார்கள் எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கஸ்டமர் profile ஐ ஓப்பன் செய்தால் அவரில் பில்லிங் அட்ரசில் ஆரம்பித்து அவர் invoice, quate, tasks, projects, support tickets என கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இது அனைத்தையும் நீங்கள் உபயோகிப்பீர்களா என்றால் அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது. Project பொறுத்தவரை நாம் ஒரு task ஐ கிரியேட் செய்து அதில் அப்டேட் செய்தால் அது மெயிலாக கிளையண்டுக்கு notification போகும் ஆனால் கிளையண்டுகள் அந்த இமெயிலில் அப்படியே ரிப்ளை செய்யுமுடியாது இதனால் நான் இதனை project management க்கு உபயோகிப்பதில் மாறாக அதற்கு நீங்கள் freecamp போன்ற saas pm software ஐ உபயோகிக்கலாம். நம்முடைய செர்வர் தாங்கவேண்டும் இல்லையா. அதுவும் நீங்கள் உங்கள் மெயில் சர்வரை யூஸ் செய்யவேண்டும். இரண்டு மூன்று மெயில் அனுப்பினால் கொஞ்சம் தாமதம் ஆகிறது. அதனால் இதனை நான் project க்கு உபயோகிப்பதில்லை.

உங்கள் கஸ்டமர்களின் விபரங்களை சேமிக்கும் இடமாக, invoice டூலாக உபயோக்கி தரமான சாப்ட்வேர். நம்பி வாங்கலாம்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories