கூகுள் எப்பொழுது டைரக்டரி சேவையை ப்ளேசஸ் என தொடங்கினார்களோ அப்பொழுதே மற்றவர்கள் வழங்கிய டைரக்டரி சேவை காணாமல் போனது.
இதுவரை நீங்கள் யாராவது உங்கள் பகுதியில் உள்ள கடைகளின் விவரங்கள் அறிந்து கொள்ள தனிப்பட்ட டைரக்டரி வெப்சைட்டில் தேடி இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. ஏன் நானே இதுவரை தேடியதில்லை காரணம் சிம்பிள். கூகுளில் தட்டினால் அது அருகில் உள்ள அனைத்து கடைகளையும் கூகுள் மேப்போடு எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை அழகாக காட்டி விடுகிறது. பிறகு ஏன் தனியாக ஒரு டைரக்டரி? அதனால் தான் டைரக்டரி வெப்சைட்டுகள் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டன.
எனக்கு தெரிந்து இன்னும் பல கடைகள், கம்பெனிகள் எல்லாம் கூகுள் places ஐ கிளைம் கூட செய்யவில்லை. கிளைம் செய்தவர்கள்கூட தங்கள் கடை செயல்படும் நேரத்தை ஒரு முறை பதிவிடுவதோடு சரி பிறகு மறந்து போய்விடுகிறார்கள். விடுமுறை தினங்கள், அவரச விடுப்பு போன்றவற்றை யாரும் கூகுள் ப்ளேசிலேயே பேணுவதில்லை எனும்போது டைரக்டரி சைட்டில் யோசித்து பாருங்கள்?
இதற்கே கூகுள் ரிவியூவ் பார்த்து பல பேர் கடைகளுக்கு செல்கிறார்கள். அதேபோல் எந்த நேரம் கடையின் பிஸியான நேரம் என்பதை கூகுள் தவிர வேறு எந்த டைரக்டரியும் தரமுடியாது என்பதே நிஜம். உண்மை நிலவரம் இதுதான்.
ஏன் இந்தளவு பெரிய ரைட்டப் என்றால், நானே முதலில் டைரக்டரி தளம் தான் ஆரம்பித்தேன். அதுவும் website development companies மட்டும் குறிவைத்து. ஏகப்பட்ட கம்பெனிகள் பதிவு செய்தார்கள். அது எல்லாம் பேக் லிங்குக்காக என்பது தெளிவாக தெரிந்ததால் அதனை கைவிட்டுவிட்டேன்.
இப்பொழுது இந்த pricefinder.in என்பது அப்படி பல விதமான விஷபரீட்சைகளை தாண்டி வந்தது என்பதை இங்கே சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன். இந்த தளத்திலேயே இப்பொழுது நான் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சேவையை வழங்குவதற்கு காரணம், நான் இருக்கும் மடிப்பாக்கம் ஏரியாவில் இருந்து பைக்கில் போய் வரும் அளவு அது இருக்கவேண்டும் அப்பொழுதுதான் என்னால் கஸ்டமர்களுக்கு தரமான சேவையை வழங்க முடியும்.
நான் இங்கே இருந்துகொண்டு, திருநெல்வேலியில் சேவையை ஆரம்பித்தால் யாரும் நம்பமாட்டார்கள். நாம் சேவை வழங்கும் பகுதிக்கு அருகில் நமது அலுவலகம் இருக்கவேண்டும் அதுதான் தற்சமயத்திற்கு நல்லது என்பதால்தான் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே கவனிக்கிறேன்.
டைரக்டரியை கடந்து பொருட்களின் விலையை தேடும் தளத்தில் வந்து நிற்கிறது என்னுடைய இந்த டைரக்டரி பயணம். ஏன் கூகுள்கூடத்தான் shop ஆப்ஷனை கொடுக்கிறது பிறகு ஏன் Pricefinder.in என கேட்பவர்களுக்கு, நான் சொல்லிகொள்வது. இந்த தளம் இதுவரை ஆன்லைனில் இல்லாத நம் அருகாமை பகுதியில் உள்ள கடைகளின் பொருட்களை அதன் விலையை தேடும் ஒரு செயலி.
இலவசமாக ஆன்லைன் ஸ்டோரை நம் அருகாமை கடைகளுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அத்தோடு, சென்னை போன்ற நகரத்தில் நாம் தேடும் பொருள் நமக்கு அடுத்த சந்தில் இருக்கும் கடையில் இருக்கலாம், ஆன்லைனில் கிடைக்கும் அதே பொருளின் விலையை விட கம்மியாக, ஆனால் நாம் அதனை அடையாளம் காண்பதற்கு வழி இல்லாததால் அந்த வியாபாரத்தை நம் பகுதிகாரருக்கு கொடுக்க தவறி விடுகிறோம். அதனை நிவர்த்தி செய்வதற்கு வந்ததுதான் Pricefinder.in
இன்றே இணையுங்கள் Pricefinder.in உடன் உங்கள் வியாபாரத்தில் புது அனுபவத்தை பெறுங்கள். மெயில் செய்யவும் [email protected]