பத்து சதவீத தள்ளுபடி என்பதை அப்பொழுதே பெற்றுகொள்ளலாம் அல்லது அந்த தள்ளுபடி தொகையை கொடுத்து நமக்கான கிரிடிட்டை உயர்த்திகொள்ளலாம். கையில் சுத்தமாக காசை துடைத்துவிடும் வேளையில், இந்த தள்ளுபடி தொகையானது அந்த வேளை மாத்திரை வாங்கி கொள்ள உபயோகமாக இருக்கிறது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இவர்கள் எல்லா ஊரிலும் இருப்பது அதனால் நாம் வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும், அனைத்து ஊர்களிலும் ஒரே அக்கொண்ட் இருப்பதால் அவர்கள் வழங்ககூடிய அந்த தள்ளுபடி தொகை சேர்ந்து கொண்டே இருக்கிறது.
இங்கே மடிப்பாக்கத்தில் டாக்டர் ரகுராம் அவர்கள் அப்போலோ கிளினிக்கில் பார்த்தவரை அங்கு வாங்கும் மருந்துகள் அனைத்துக்கும் தள்ளுபடி கிடைத்தது. இப்பொழுது டாக்டர் தனியாக கிளினிக் மற்றும் பார்மசியை நடத்துவதால் அங்கு நான் அப்போலா பார்மசியை மிஸ் செய்கிறேன்.
இந்த நேரத்தில் அப்போலோ பார்மசியின் நிறுவனர்களுக்கு சொல்வது, நீங்கள் ஆரம்பித்த வைத்த இந்த நல்ல விஷயம் இன்று கோடானு கோடி பேர்களுக்கு உபயோகமாக இருக்கிறது. இதனை உங்கள் ப்ராண்டு பார்மசி என்றில்லாமல், தனியார் பார்மசிகளையும் உங்கள் நிறுவனத்தின் POS உடன் இணைத்தால் கஸ்டமர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். Nothing is impossible. நன்றாக ஓடும் மருத்துவமனைகளுடன் நீங்கள் ஒப்பந்தம் போட்டுகொண்டால் சிறப்பாக இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் இந்த Pricefinder.in உருவாக்கத்தில் அப்போலோ பார்மசியின் இந்த தள்ளுபடி விஷயம் எனக்கு உந்துதலாக இருந்தது. அப்போலோ சேமித்து வைக்கும் அந்த தள்ளுபடி பணம் நமக்கு ஒரு சேமிப்பு போன்றது. ஏனெனில் எந்நாளும் நமக்கு மருந்துகளின் தேவை முடியாது. நாங்கள், Pricefinder.in ஒரு படி மேலே போய், எங்களின் கஸ்டமர்களுக்கு பொருட்கள் மற்றும் சர்வீஸையே Buy Now Pay Later வழங்குவது என்பது திட்டம். இந்த திட்டத்திற்கு அச்சாணி போட்டது அப்போலோ பார்மசிதான்.
ஏன் இதனை இப்பொழுது எழுதவேண்டும் என்று நினைக்கீறீர்களா? ஒன்றுமில்லை இப்பொழுதுதான் அப்போலோ பார்மசிபோய் ஒரு மாத்திரை அட்டையை காசில்லாமல் வாங்கிவந்தேன் அதாவது நான் சேமித்து வைத்திருந்த தள்ளுபடி பணத்தில் வாங்கிவந்தேன்.
மாத்திரை வாங்கவைத்திருந்த காசில் கால் கிலோ காராசேவை வாங்கி சாப்பிட்டுகொண்டுதான் இதனை எழுதுகிறேன்.