மடிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் pricefinder.in தளத்தில் உங்கள் பிசினஸை இணைக்க இன்றே அணுகவும் [email protected]
வெறும் டைரக்டரி என்று இல்லாமல், என்ன பொருள் அல்லது சர்வீஸ் கொடுக்கிறீர்கள் என்பதை price catalog ஆக கொடுத்தால் அது கஸ்டமர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
என்ன பொருள் விற்கிறீர்கள் என்பதை ஏன் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறேன் என்பதை ஒரு உதராணத்துடன் சொன்னால் உங்களுக்கு புரியும்.
நீண்ட நாட்களாக Rhino beetle என்னும் rubber toy எங்கு கிடைக்கிறது என்பதை மடிப்பாக்கம் கடைகளில் ஏறி இறங்கி பார்த்துவிட்டேன் ஆனால் கிடைக்கவில்லை. ஏன் இந்த குறிப்பிட்ட டாய் என்றால், ஏற்கனவே உள்ள stag beetle வைத்திருக்கின்ற குழந்தைகள் Juny Tony பார்த்துவிட்டு rhino beetle கேட்கிறார்கள். Stag beetle க்கும் Rhino beetle க்கும் யார் பெரியவன் என்று சண்டை இருக்கும் Tree sap சாப்பிடுவதில் என்பதே எனக்கு அந்த Juny Tony பாக்கும்போதுதான் தெரிந்தது.
ஆன்லைனில் தேடினால் அவர்கள் சொல்லும் விலையை பார்த்தால் தலைசுற்றி விடும் போல இருக்கிறது. எதேச்சையாக மடிப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள கடையில் insects பேக்கேஜில் அது கிடைத்தது. இதற்கு முன்பு தேடி பார்த்தபோது அந்த கடையில் இல்லை. புது புது பொம்மைகள் வந்து கொண்டே இருக்கும்போது அது எதேச்சையாக கிடைத்து.
இதில் வேடிக்கை என்ன என்றால், கீழ்கட்டளையில் ஒரு பெரிய கடையில் அது இருக்கிறது. ஆனால் இதுவரை அந்த கடைக்கே நான் சென்றதில்லை சரி பார்த்துவிடுவோம் என்று ஒரு நடை பார்த்துவிட்டு வந்ததில் அது அங்கு இருக்கிறது என்று தெரிந்தது.
அந்த கடைகாரர் இந்த டாய் அங்கு கிடைக்கிறது என்பதை pricefinder.in ல் பதிவு செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கடைகாரர்களுக்கு இந்த டாயின் பெயர் என்ன தெரியாவிட்டால் கூகுள் லென்ஸில் போட்டோ எடுத்தால் அதுவே கொடுத்துவிடுகிறது அதனால் விலங்குகளின் பெயர் என்ன என்பது இனி எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சில யூனிக் டாய்கள் மற்றும் பொருட்கள் உங்கள் கடைகளில் மட்டும் இருக்கும் அது சென்னை என்றில்லை இந்தியாவில் யாருக்காவது எப்பொழுதாவது வேண்டியிருக்கும் அப்பொழுது அந்த பொருட்கள் அவர்களுக்கு காணக்கிடைத்தால் அந்த கஸ்டமர்களுக்கு எப்படி இருக்கும்?. அதற்குதான் நாங்கள் pricefinder.in வைத்திருக்கிறோம். இதில் பொருட்களை எற்றுவதற்கு இலவசம். எங்கள் தளம் மூலம் உங்கள் பொருட்கள் விற்றால் எங்களுக்கு குறைந்த அளவு கமிஷன் கொடுக்கவேண்டும் அவ்வளவே.
இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் [email protected]