சென்னை மாநகரில் இப்பொழுது அனைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டே குவிக் காமர்ஸ் தளங்களின் ஆப்களில் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள் அந்த பொருட்கள் அடுத்த 10 அல்லது 20 நிமிடத்தில் வீடு வந்து சேருகிறது. இதற்கு அவர்கள் டெலிவரி கட்டணம் வாங்குவதாக தெரிவதில்லை, காரணம் அவர்களே விற்கும் பொருட்கள் என்பதால் இருக்கும். நிற்க.
இது போல் போய்கொண்டிருக்கும் நவீன யுகத்தில் இன்னும் ஆன்லைனுக்கே வரமாட்டேன் என்றால் நீங்கள் உங்களை எதிர்காலத்துக்கு ஏற்றார்போல் தயார் செய்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மாற்றம் ஒன்றே மாறாதது அதனால் நாம் அந்த மாற்றங்களை பிடித்து கொண்டு வெற்றி அடைவதுதான் புத்திசாலிதனம்.
நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் Pricefinder.in இதன்மூலம் நீங்கள் கடையின் அத்தனை பொருட்களையும் ஆன்லைனில் கொண்டுவரலாம் பைசா செலவு இல்லாமல். உங்களுக்கான Pricefinder URL ஐ உங்கள் கஸ்டமர்களிடம் கொடுத்து அவர்களை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய சொல்லலாம். பிறகு நீங்கள் அதனை டெலிவரி செய்யலாம் அல்லது அவர்களே வந்து அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடைக்கு வந்து வாங்கி செல்லலாம் store pickup என்று சொல்வார்கள் இதை.
ஆக, கடையை ஆன்லைனில் கொண்டுவருகிறீர்கள்?. இதில் என்ன புதுமை இருக்கபோகிறது இது பல்லாண்டுகாலமாக இருக்கிற ஒன்றுதானே? இப்பொழுது ஆன்லைன் ஸ்டோரை கூவிகூவி விற்கிறார்களே இதில் என்ன புதுமை இருக்கிறது இதில் என்ன மாற்றம் வந்துவிடபோகிறது?
நான் ஒரு வியாபாரியாக இருந்தால் கண்டிப்பாக இதுபோன்றுதான் கேள்வி கேட்பேன். கண்டிப்பாக இதற்கு விளக்கமளிக்கிறேன். நாங்கள் ஏன் மற்றவர்களை காட்டிலும் தனித்து நிற்கிறோம் என்பதை இங்கே சில பாயிண்டுகளாக சொல்லிவிடுகிறேன்:
– மற்றவர்கள் உங்கள் கடையை ஆன்லைனில் கொண்டுவருவதற்கு மாதச்சந்தா அல்லது வருட சந்தா அல்லது ஒரு முறை கட்டணம் என்று ஏதாவது வாங்குவார்கள். நாங்கள் அது போல் எதையும் வாங்குவதில்லை.
– நாங்கள் Pricefinder.in தளத்தில் ஏன் உங்கள் பொருட்கள் அல்லது சர்வீஸை ஏற்ற சொல்கிறோம் என்றால் இதுஒரு மார்கெட்ப்ளேஸ் போல. இங்கு நிறைய கடைகள் அவர்களுடைய பொருட்களை ஏற்றும்போது, எந்த பகுதியில் எந்த பொருட்கள் கிடைக்கிறது அது என்ன விலையில் கிடைக்கிறது என கஸ்டமர் தேடும்போது உங்கள் கடை மற்றும் பொருட்கள் அவர்களுக்கு காணக்கிடைக்கும் அதன்மூலம் உங்களுக்கு புதுப்புது கஸ்டமர்கள் கிடைப்பார்கள். ஒரு பைசா செலவு இல்லாமல், உங்கள் பொருட்களை நாங்கள் கஸ்டமர்கள் காண்பதற்கு வழிவகை செய்கிறோம். இது Pricefinder.in செர்ச்சில் மட்டுமல்ல, உங்களுடைய கடையும், கடையின் பொருட்களும் முறையாக இணைக்கப்பட்டிருப்பதால் கூகுள் அதனை அழகாக Google search யில் தேடுபவருக்கு காட்டும். இதன்மூலம் உங்கள் கடை மேலும் பிரபலம் ஆகும்.
– கடை இயங்கும் நேரம், விடுமுறை நாட்கள், அவரச விடுமுறை நாட்கள், கூடுதலாக இயங்கும் நேரம் என அனைத்தையும் நீங்கள் Pricefinder யில் மேனேஜ் செய்யலாம் இதனால் உங்கள் கஸ்டமர்களுக்கு உங்கள் கடையின் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.
– அதேபோல், நீங்கள் உங்கள் கடையை பற்றி, உங்கள் வணிகத்தின் கருத்துகள், கட்டுரைகள் என உங்களை பிஸினஸை ப்ரொமோட் செய்ய நாங்கள் Articles என்று தனியாக வைத்து உள்ளோம். அதன்மூலம் நீங்கள் எத்தனை articles வேண்டுமானாலும் எழுதலாம்.
– Offers என்ற ஒரு விஷயம் இருக்கிறது. தற்சமயம் உங்கள் பிஸினசில் நீங்கள் வழங்கும் ஆஃபர்களை இங்கே பதிவிடலாம். இதன்மூலம் நிறைய கஸ்டமர்களை உங்கள் கடை போய் சேரும்.
இவை அனைத்தும் பைசா செலவு இல்லாமல் நீங்கள் செய்யலாம் என்பதுதான் இதில் ஹைலைட்.
இப்படி எல்லாம் இலவசமாக கொடுப்பதால் உங்களுக்கு என்ன பயன் என்பது நீங்கள் கேட்பது புரிகிறது. இதையும் நாங்கள் சொல்லவேண்டியது எங்கள் கடமை. இதில் ஒளிவுமறைவு இல்லை. எங்கள் Pricefinder.in தளத்தில் நீங்கள் பொருட்களை ஏற்றுவதற்கு, ப்ளாக் எழுதுவதற்கு, offers ஏற்றுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. நீங்கள் எத்தனை பொருட்களை வேண்டுமானாலும் ஏற்றி கொள்ளுங்கள். எங்கள் மூலமாக அல்லது எங்கள் Pricefinder.in மூலமாக நடக்கும் ஒவ்வொரு சேல்சுக்கும் நாங்கள் மிகவும் குறைந்தபட்ச கமிஷன் தொகையான 5 சதவீதத்தை வசூலிப்போம். உதாணத்திற்கு, 1000 ரூபாய் Pricefinder மூலமாக வியாபாரம் நடந்தால் 50 ரூபாயை சார்ஜ் செய்வோம்.
உங்களுக்கே தெரியும், இப்பொழுதெல்லாம் Payment gateways 2 அல்லது 3 சதவீதம் சார்ஜ் செய்கிறார்கள் ஒவ்வொரு சேல்சுக்கும். அதனால் இந்த 5 சதவீதம் என்பது மிகவும் குறைவானதுதான். இதனால் உங்கள் சேல்ஸ் அதிகமாகுமே ஒழிய குறையாது.