எதனால் Pricefinder.in தனித்து நிற்கிறது?
Pricefinder.in தனித்து நிற்பதற்கு காரணம் இங்கு வெண்டார்கள் தங்கள் pricing catalogue ஐ அடிக்கடி அப்டேட் செய்யவேண்டியதில்லை. மற்ற ஆப்களில், தினம் மாறும் pricing ஐ அப்டேட் செய்யவேண்டியது அவசியம். அதேபோல் இது Quate முறையில் இருப்பதால், வெண்டார்கள் கஸ்டமர்களின் தேவையை லிஸ்ட்டாக வாங்கி கொண்டு அதனை கஸ்டமர்களின் Shipping address க்கு பில்லோடு போய் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் வெண்டார்களுக்கு கஸ்டமர்களின் Requirement ஐ வாங்கியதுபோல ஆகிவிட்டது, கஸ்டமர்களுக்கும் தேவையான list ஐ கொடுத்தது போல் ஆகிவிட்டது. மளிகை மற்றும் அத்தியாவாசிய பொருட்களில் விலை விபரங்கள் பெரிதாக மாற்றம் அடையபோவதில்லை அதனால் ரெகுலராக ஒரு கடையில் பொருட்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு தாங்கள் வழங்கிய பொருட்களின் விலை பட்டியல் ஓரளவு தெரிந்திருக்கும். சர்ப்ரைஸாக இருக்காது.
நான் கடை முதலாளிகளிடம் சொல்வது நீங்கள் உங்கள் கடை பொருட்களின் விலையை ஏற்றுங்கள் ஒரே ஒரு முறை மட்டும். தினம் தினம் நீங்கள் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. என்னதான் Quate என்றாலும் அதற்காக 0 என்று product price ஐ கொடுப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை ஏனேனில் அது கஸ்டமர்களுக்கு இறுதி விலைபட்டியலின் மேல் நம்பிக்கை கொள்ளசெய்யாது. அதனாலதான் ஒரு விலையை நிர்ணயம் செய்யுங்கள், அதில் கூடுதலாகவோ அல்லது குறையவோ செய்தால் கஸ்டமர்கள் பெரிதாக பார்க்கமாட்டார்கள். நாங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம், இது Quate system. இறுதி விலை பட்டியல் அல்ல என்று அதேபோல் Cart யில் இருந்து அவர்கள் checkout செய்யும்போது Proceed to Quate என்றுதான் இருக்கும்.
Pricefinder.in ஐ ஒரு எளிமைபடுத்தப்பட்ட தளமாக வைக்கவே நான் விரும்புகிறேன். கண்ணாபின்னா என்று feature கள் கொடுத்து தளத்தின் நோக்கத்தை பாழ்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால்தான் எனக்கு இந்த Quate system சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. 1000 products வைத்திருக்கும் ஒரு கடை ஓனரிடம் நீங்கள் விலைப்பட்டியலே அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருங்கள் என்றால் அவர்கள் நிச்சயம் செய்யமாட்டார்கள். மாறாக ஒரே ஒரு முறை மட்டும் pricing வோடு product ஐ ஏற்ற சொல்லுங்கள் அதனை செய்வார்கள்.
பெரிய லிஸ்டை எழுதிகொண்டு இனி கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. லிஸ்ட்டை Pricefinder யில் கிரியேட் செய்யுங்கள், உங்கள் அபிமான கடைக்கு அதனை அனுப்புங்கள். உங்கள் Shipping location க்கு எந்த நேரத்தில் டெலிவரி செய்யவேண்டும் என்பதையும் அந்த ஆர்டரில் குறிப்பிட்டுவிட்டால் கடைகாரர் அதனை டெலிவரி செய்துவிடுவார்.
உங்கள் வியாபாரத்தை இதில் இலவசமாக இணைக்க விருப்பமா, தொடர்பு கொள்ளுங்கள் [email protected] க்கு.