Home Uncategorized Community Price Watch இப்பொழுது மேலும் புதிய வசதிகளுடன்

Community Price Watch இப்பொழுது மேலும் புதிய வசதிகளுடன்

7
0

Pricefinder.in யின் Community Price Watch இப்பொழுது லிஸ்டிங்களையும் அதாவது, Product, Directory, Property , News , Jobs என்ற இந்த 5 லிஸ்டிங்குளையும் கொண்டிருக்கும். முன்பு இது Product மட்டும்தான் காட்டும்படி இருந்தது இப்பொழுது தளத்தில் உள்ள 5 listings களின் aggrgated feed போல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் பகுதியில் தற்சமயம் எந்த product என்ன விலையில் விற்றுகொண்டிருக்கிறது, என்ன offer, போய்கொண்டிருக்கிறது, என்ன event, என்ன நியூஸ், என்ன Property listing , என்ன job offer என அனைத்தும் இந்த Community Price Watch page கொண்டிருக்கும். இதில் Offer or Wanted என இரண்டு லேபிள் இருக்கும். உங்களுக்கு பொருள் அல்லது சர்வீஸ் வேண்டும் என்றால் Wanted என்று செலக்ட் செய்து போஸ்ட் செய்வீர்கள், நீங்கள் ஒரு கடைகாரராகவோ அல்லது சர்வீஸ் professional ஆக வோ இருந்து நீங்கள் உங்கள் விலைபட்டியலை வெளியிடும்போது அதனை Offer என செலக்ட செய்வீர்கள். ஆக,5 லிஸ்டிங், 2 posting types, multiple possiblities.

ஆரம்பம், முதலே என்னுடைய நோக்கமாக இருந்தது, ஒரு கடையோ, கம்பெனியோ, சர்வீஸ் கொடுப்பரோ யாராக இருந்தாலும் அவருடைய அனைத்து விபரங்களும் ஒரு கிளிக்கில் காண கிடைக்கவேண்டும். இங்கொண்றுமாய், அங்கொன்றுமாய் இருக்கும் விபரங்களை தொகுத்துதான் நாங்கள் இந்த Community Price Watch யில் மொத்தமாக காட்டியிருக்கிறோம். உதாரணத்திற்கு Fryry Snacks கடை இருக்கிறது. அவர்கள் கடையின் price catalog ஐ மெயினாக வெளியிடவேண்டும். அதேசமயம், அவர்கள் ஏதேனும் புதிய offer வெளியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்பொழுது pricefinder.in யின் News லிஸ்டிங்கில் அதனை வெளியிடுவார்கள். ஆனால், அது community price watch யில் Fryry Snacks ஐ தேடுபவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். அதேபோல, அவர்கள் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று Pricefinder.in யின் Jobs லிஸ்டிங்கில் போஸ்ட் செய்கிறார்கள், அதுவும் கிடைக்காமல் போய்விடும். அவர்ள் தங்களை பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள் News லிஸ்ங்கில் அதுவும் தெரியாமல் போய்விடும். ஆக ஒரு கடைகாரர், கம்பெனி, சர்வீஸ் provider என யாராக இருந்தாலும் அவர்களுக்கான தேவை என்பது பல விதங்களில் சிதறி கிடைக்கிறது அதனை சரியாக கோர்த்து ஒரே இடத்தில் அளிக்கும் முயற்சிதான்  Community price watch யின் புதிய வடிவம். யாராவது Community Price Watch யில் Fryr Snacks என தேடும்போது, இப்பொழுது அவர்கள் அந்த கடையின் அனைத்து product price, கடையின் டைரக்டரி விபரங்கள் உதாரணத்திற்கு Shop status, கடை திறந்து இருக்கிறதா அல்லது Closed ஆ என தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்த கடை கொடுக்கும் Offers, Jobs listings, அவர்கள் வெளியிடும் செய்தி கட்டுரைகள், அவர்கள் property தேவைகள், அவர்கள் மேற்கொள்ளும் events என அனைத்தும் ஒரே தேடலில் நீங்கள் முழு picture ஆக பார்க்கலாம். இது கஸ்டமர்களின் நேரத்தை பெருமளவு மிச்சபடுத்துகிறது. அதேபோல அந்த கடைகாரரின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் ரீச் ஆகிவிடுகிறது.

இந்த புதிய விஷயங்களால், பழைய விஷயங்கள் மாறுமா என்றால் இல்லை, எப்பொழுதும்போல கஸ்டமர்கள், தாங்கள் வாங்கிய பொருளின் விலையை இங்கே பில்லோடு சமர்பிக்கலாம், அது approve ஆன பிறகு வெளியில் தெரியும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய விஷயங்கள் enhance செய்யப்பட்டுள்ளது, பழைய விஷயங்கள் அப்படியே உள்ளது.

இந்த நேரத்தில் மக்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள கடமைமைபட்டுள்ளேன். Pricefidner.in உடன் இணைந்து நீங்கள் பணத்தை சம்பாதிக்கும் முறையை இதில் அறிமுகப்படுத்துகிறோம். எப்படி என்கிறீர்களா? விளக்குகிறேன்.

நீங்கள் போய் கொண்டிருக்கும் வழியில் ஒரு tolet பார்க்கிறீர்கள், உடனே அதனை நீங்கள் இதில் தெரிவிக்கலாம், அதாவது, நீங்கள் அதனை இங்கே Community Price Watch யில் போஸ்ட் செய்யலாம்.  முடிந்தால் ஒரு போட்டோ கூட போடலாம். ஆனால் என்ன ஒன்று,  இடம் இங்கே இருக்கிறது என தெரிந்தால் கஸ்டமர்கள் டைரக்டாக சென்றுவிடுவார்கள் அதனால் வெளி புற போடோவை விட உட்புற படங்கள் சிறந்தது. நீங்கள் அப்லோட் செய்யும் அந்த property post க்கு யாராவது enquiry செய்தால், அது டைரக்டாக எங்களுக்குதான் வரும். அந்த லீடை நாங்கள் முடித்து தரும்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் கிடைக்கும். எத்தனை பெர்சன் கமிஷன் போன்ற விபரங்கள் பிறகு அந்தந்த லீடை பொறுத்தது. உங்களுக்கான enqiry மெனுவில் அவை அப்டேட் செய்யப்படும். இங்கே Pricefinder.in ஒரு மீடியேட்டராக இருந்து வேலையை முடிக்கும்.