Community Price Watch ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன். Watch என்றால் இது கையில் கட்டி கொள்ளும் வாட்ச் அல்ல. இது நாம், நாம் என்றால் அனைவரும், கஸ்டமர்கள், வியாபாரிகள் என அனைவரும் சேர்ந்து பிறருக்கு உதவும் ஒரு சிஸ்டம். எப்படி என்கிறீர்களா? விளக்குகிறேன்.
உதாரணத்திற்கு, நான் அன்மையில் ஒரு Fridge ஐ தேடி அலைந்தேன். ஒரு குறிப்பிட்ட அதே ஃபிரிட்ஜ் இரு கடைகளில் இரு விலையில். ஒருவேளை இன்னும் தேடி சென்றால், இன்னும் விலை குறைவாக கிடைத்திருக்குமோ என்னவோ ஆனால், இரண்டாவது கடையிலேயே குறைந்த விலையில் வாங்கிகொண்டேன். நீங்கள் கண்டடைந்த அந்த விஷயத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்தால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும் அல்லவா? இங்கே நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். இது உதவி என்று புரிகிறது ஆனால் இதனால் கஸ்டமர்களுக்கு என்ன லாபம். ? எங்களின் form யில் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் நம்பரை மறைத்து வெளிடலாம் இதனால் உங்களுக்கு வரும் Leads மூலமாக நீங்கள் சம்பாதிக்கலாம். வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்காமல், யாருக்கு தேவையோ அவருக்கு கொடுத்தால்தான் அது சரியாக இருக்கும்.
ஒரு கஸ்டமராக இது உங்களுக்கு கூடுதல் பணத்தை ஈட்ட உதவும். நீங்கள் சர்வீஸ் provider ஆகவோ அல்லது கடைகாரராகவோ இருந்தால் உங்கள் பொருட்கள் அனைத்தையும் இதில் வெளியிடலாம். இதன்மூலம் உங்களுக்கு கூடுதல் ரீச் கிடைக்கும். அதேபோல், நீங்கள் உங்கள் price ஐ பொதுவெளியில் அறிவித்தால் உங்கள competitor உங்களை விட குறைந்த விலை வைப்பார் என கருதினால் உங்கள் பெயர், கடையை மறைத்து லீட்ஸ் பெறலாம். அனைத்து விதத்திலும் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Add Price என்ற மெனு இப்பொழுது நீங்கள் காணலாம். நீங்கள் கூகுள் அக்கொண்ட் லாகின் செய்திருந்தால் போதும், இந்த form ஓப்பன் ஆகும். அப்படியே கொடுத்துவிடலாம். உங்கள் past entries யும் இந்த form யில் காணகிடைக்கும். டெலிட்டும் செய்து கொள்ளலாம். பிறகு என்ன விலை பட்டியலை ஏற்றவேண்டியதுதானே?
கேள்விகள் இருந்தால், தொடர்புகொள்ளவும், hello@pricefinder.in


