Pricefinder.in-இல் இணையுங்கள், உங்கள் வியாபாரத்தைப் பெருக்குங்கள்!

    6
    0

    நீங்கள் உங்கள் கடையில் விற்கும் பொருட்களை Pricefinder-இல் லிஸ்ட் செய்யும்போது, உங்கள் கடையின் பொருட்கள் Location அடிப்படையில் தேடுவோருக்குக் காணக்கிடைக்கும். அந்தப் பட்சத்தில் அவர் உங்கள் கடையை அடையாளம் காண்பார். அத்தோடு உங்கள் கடையில் இந்தப் பொருள் இந்த விலையில் கிடைக்கிறது என்ற information-ஐ அங்கே நீங்கள் pass செய்கிறீர்கள். தரமான பொருளைக் குறைவான விலையில் கொடுக்க நீங்கள் தயாராக இருக்கும்போது அதனை எதற்கு மறைப்பானேன்? வெளிப்படையாக அறிவியுங்கள். கஸ்டமர்கள் உங்களை வரவேற்பார்கள்.

    Pricefinder.in என்றாலே Price Comparison தான். இதனைச் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் இங்கு பலரும் Price Compare ஆவதைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆன்லைனில் கிடைக்கும் பொருட்களைக் கம்பேர் செய்யத் தளங்கள் இருக்கும்போது, நமக்கு அருகாமையில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்களைக் கம்பேர் செய்தால் என்ன? இதனால் அவர்களுக்கு வியாபாரம் தான் அதிகரிக்கும், குறையாது.

    இதே மடிப்பாக்கத்தில் இன்னும் எத்தனையோ நூறு கடைகளை நான் இன்னும் படியேறிக் கூடப் பார்த்ததில்லை. காரணம், எனக்கான தேவை என்பது அருகில் இருக்கும் அந்த ஒரு மளிகைக் கடை, ஒரு காய்கறிக் கடை, ஒரு சூப்பர் மார்க்கெட், ஒரு பேக்கரி எனப் பரிச்சயமான கடைகளோடு முடிந்துவிட்டது. அனைத்துக் கடைகளுக்கும் தத்தமது கஸ்டமர்கள் இருக்கிறார்கள். நான் எப்படி ஒரு 5 அல்லது 6 கடையில் வாடிக்கையாளராக இருக்கிறேனோ அதுபோல்.

    நான் இதுவரை போகாத கடைகள் எனக்கு ஒரு வாய்ப்பை இன்னும் கொடுக்கவில்லை என்றுதான் சொல்வேன். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    பிரியாணி சாப்பிடத் தோன்றினால் இந்த மடிப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஒரு கடையைத் தேடிப் பிடித்து வைத்துள்ளேன். நான் சாப்பிட யோசித்த அந்த நாளில் அந்த கடை விடுமுறை. 200 ரூபாயை வைத்துக்கொண்டு 2 கிலோமீட்டர் ஒரு சுற்றுச் சுற்றி வந்தேன். ஆனால் ஒரு கடை கூட என்னைக் கவரவில்லை. பிறகு 20 ரூபாய்க்கு மேகி பாக்கெட் வாங்கிச் சமைத்து அந்த உணவு வேளையை முடித்தேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், சாப்பாடு விஷயத்தில் ஒரு புது முயற்சி எடுக்கத் தயக்கமாக இருக்கும். ஏனெனில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் ரிஸ்க் எடுக்க யாராக இருந்தாலும் தயங்குவார்கள். விடுமுறை நாட்களில், யாரும் வீட்டில் இல்லாத நாட்களில்தான் நாம் வெளியிலேயே சாப்பிடுவோம். அந்த நேரத்தில் புது முயற்சி என்ற பெயரில் புது ஹோட்டலில் சாப்பிட்டு ஏதாவது ஆனால் என்ன ஆகும் என்ற அச்சத்திலேயே பரிச்சயமான ஹோட்டலை நாடுவோம்.

    ஆனால் இந்தக் கட்டுப்பாடு, மற்ற பொருட்களுக்கு இருக்காது தானே?

    உணவுக் கடை என்றில்லை, இன்னும் எத்தனையோ கடைகள் இருக்கின்றன. ஆனால் அவை ஏனோ ஈர்ப்பதில்லை. என்ன காரணம் இருக்கும்? ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தக் கடையில் என்ன பொருள் இருக்கிறது என்பது முதலில் மக்களுக்குத் தெரிய வேண்டும். அது என்ன விலையில் இருக்கிறது என்பது இரண்டாவதாகத் தெரிய வேண்டும். பிறகு அந்த கடையின் புகைப்படங்கள் காணக் கிடைக்க வேண்டும். அந்தக் கடையைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இருக்க வேண்டும். கடையின் அலுவல் நேரங்கள் (Business Hours) தெரிய வேண்டும். பிறகு reviews இருக்க வேண்டும். கடைக்காரர் பொருட்களை ஆர்டர் எடுத்துக்கொள்வாரா என்று தெரிய வேண்டும். எடுத்துக்கொண்டால் டெலிவரி செய்வாரா என்று தெரிய வேண்டும். பேமெண்ட் (Payment) எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டும். கடை எத்தனை ஆண்டுகளாக நடத்துகிறார்கள் என்று தெரிய வேண்டும். இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன.

    “அட போங்கய்யா, இத்தனை தெரிய வேண்டும் என்று சொன்னால் ஒரு கடைக்காரனாக நான் எங்கே போவேன்” என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. இத்தனையையும் pricefinder.in உங்களுக்குச் செய்து கொடுக்கிறது. ஆம், உண்மை. உங்கள் கடைக்கு ஒரு லிஸ்டிங் தயார் செய்து கொடுக்கிறோம். அதில் உங்கள் கடையின் பொருட்களை நீங்கள் லிஸ்ட் செய்துகொள்ளும் வசதியை அளிக்கிறோம். உங்கள் கடையின் அலுவல் நேரங்கள், உங்கள் கடையின் புகைப்படங்கள், உங்கள் கடையின் offers-களை நீங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த உதவுகிறோம். கஸ்டமர்களின் ஆர்டர்களை நேரடியாக நீங்கள் பெறும் வண்ணத்தில் Dashboard இருக்கிறது. அதில் நீங்கள் உங்களின் கஸ்டமர் ஆர்டர் விபரங்களைப் பெறலாம், ஆர்டரை டெலிவரி செய்யலாம். தேவையெனில் நீங்கள் உங்கள் கஸ்டமரிடம் பேமெண்ட் கூட வாங்கலாம் (Order thank you page-இல்). இத்தனை வசதிகளையும் உங்களுக்கு நாங்கள் செய்து தருகிறோம். இதற்காக நீங்கள் எங்களுக்குத் தருவது மாதம் 499 ரூபாய். ஆம், எந்த வித upfront payment-ம் இல்லை.

    உங்கள் தளத்தை உடனடியாக ஆரம்பிக்கலாம்; மேற்கொண்டு எந்தச் செலவும் செய்யாமல். உங்களுக்கு நாங்கள் yourshop.pricefinder.in என்ற subdomain-இல் லிங்க் செய்து வெப்சைட் தருகிறோம். உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் உங்களுக்கான website url-ஐ இணைத்துக் கொள்ளுங்கள். இது மட்டுமா? இல்லை இன்னும் இருக்கிறது.

    உங்கள் இணையத்தளத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் Pricefinder.in-இலும் தெரியும். அதாவது, உங்கள் profile லிஸ்டிங்கில் காணக்கிடைக்கும். அங்கேயே கஸ்டமர்கள் ஆர்டர் கொடுக்கலாம் உங்களுக்கு. Pricefinder.in-இல் உங்கள் பொருட்கள் லிஸ்ட் ஆவதால் என்ன பயன் என்கிறீர்களா? சொல்கிறேன்.

    • ஒரு கஸ்டமர் ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையைத் தேடி pricefinder.in-இல் வரும்போது, அந்தத் தேடுதலில், உங்கள் கடையும், உங்கள் கடையின் பொருட்களும் காணக்கிடைக்கும். இதனால் உங்களுக்குப் புதிதாக கஸ்டமர்கள் கிடைப்பார்கள். தரமான பொருளைச் சரியான விலையில் கொடுக்கும்போது கஸ்டமர்கள் தாராளமாக வருவார்கள்.

    • உங்களுக்கான தனி இணையத்தளத்தை நீங்கள்தான் மார்க்கெட் செய்ய வேண்டும். அதாவது, உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் உங்கள் கடையின் இணையத்தளத்தைக் கொடுத்து அதில் ஆர்டர் கொடுக்கச் சொல்லலாம். ஆனால், pricefinder.in உங்களுக்கு ஆர்டரைப் பிடித்துக் கொடுக்கும். அதுதான் இங்கே ஹைலைட்.

    • உங்கள் கடையின் பொருட்களை மற்ற கடைகளின் பொருட்களோடு கம்பேர் செய்ய விடுங்கள். இதனால் உங்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. மாறாகக் கஸ்டமர்கள் உங்கள் சவாலை ஆமோதிப்பார்கள், வரவேற்பார்கள். இன்றைய கஸ்டமர்கள் மிகச்சிறிய விலை மாற்றங்களைப் பெரிய பாதிப்பாகப் பார்ப்பதில்லை. மாறாக அந்தப் பொருள் எப்படிக் கையாளப்படுகிறது, கடை சுத்தமாக இருக்கிறதா, ஃப்ரெஷ் (Fresh) products இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்கள். ஒரு சில ரூபாய் குறைவு அவர்களைப் பாதிக்காது. அதனால் தைரியமாக களத்தில் இறங்குங்கள். மாறிக்கொண்டே இருக்கும் விலைப் பட்டியலை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருங்கள். இது கஸ்டமர்கள் மனதில் உங்கள் மீது பெரிய மரியாதையைக் கொடுக்கும்.

    • ஒரு கடையில் ஆர்டர் கொடுப்பதற்கு முன்னால் கஸ்டமர்கள் பார்ப்பது, அந்தக் கடை திறந்து இருக்கிறதா என்பதுதான். கடையின் வேலை நேரம் என்பது இன்றியமையாதது. அதனை Pricefinder.in முக்கிய விஷயமாகக் கருதுகிறது. அதனால்தான் ஒரு டைரக்டரியை உருவாக்கி அதில் கடையின் அனைத்து விபரங்களும் சேமிக்கப்படுகிறது. திடீர் விடுமுறை மற்றும் இன்னும் கொஞ்ச நேரம் கடை திறந்திருக்கும் போன்ற நேரங்களில் நீங்கள் உங்கள் Shop Status-ஐ எளிதாக மாற்றலாம். ஜஸ்ட் ஒரு டிக். தட்ஸ் ஆல்.

    • Pricefinder.in முகப்பிலேயே Search, add to cart வரை கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிதாக இப்பொழுது கஸ்டமர்கள் உங்கள் கடையில் ஆர்டர் கொடுக்க முடியும். உங்கள் கடையின் அனைத்து விபரங்களும் இப்பொழுது கஸ்டமர் முன்பு. இதனைத்தான் கஸ்டமர்கள் விரும்புவார்கள்.

    • உங்களுக்கான இணையத்தளம் என்று ஒன்று இருந்தாலும், அது ஒரு அடையாளம் என்றாலும், அது ஒரு தனிமரம். அந்த மரம், தன்னுடைய வேரைக் காத தூரம் பரப்பி தன் இருப்பை விஸ்தரித்துக் கொண்டாலும் அது என்றும் தோப்பு ஆவதில்லை. Pricefinder.in ஒரு தோப்பு, அங்கேதான் உங்களுக்கான இரை இருக்கிறது. வெளியில் தேடாதீர்கள்.

    Pricefinder.in-இன் மூன்றாவது அஸ்திரம், Community price watch. இது உருவாக்கப்பட்ட நோக்கம், கஸ்டமர்கள் தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சர்வீஸ்களின் விலை விபரங்களை இங்கே பதிவிடுவதால் அது மற்றவர்களுக்குப் பயன்படுமே என்பதால். உதாரணத்திற்கு ஒரு விஷயத்தைப் பகிர்கிறேன். சமீபத்தில் ஒரு Fridge வாங்க வேண்டி ஒரு கடையில் விலையை விசாரித்தேன். அந்தக் கடையில் சொன்ன விலை ஆன்லைன் தளத்தின் விலை அளவுக்கே இருந்தது. பரவாயில்லை, குறைவாகத்தான் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, சரி மாலை வந்து வாங்குகிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். மாலை நேரத்தில் ஒருவர் சொன்னார், “இந்தக் கடையில் எதற்கும் விசாரித்துப் பாருங்கள் கொஞ்சம் விலை கம்மியாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று. அந்தக் கடையில் இதுவரை எந்தப் பொருளுமே நான் வாங்கியதில்லை, உள்ளே சென்று பார்த்தது கூட இல்லை. சரி எதற்கும் பார்த்துவிடுவோம் என்றெண்ணி விசாரித்தால், இன்ப அதிர்ச்சி, விலை கம்மியாகக் கிடைத்தது. உடனே புக்கிங் செய்தேன். பொருள் வந்து சேர்ந்தது.

    பெரிய எலக்ட்ரானிக் கடைகள் தங்கள் விலை விபரங்களை நோட்டீஸாகவே distribute செய்கிறார்கள். ஆனால் நமக்கு நம்முடைய பட்ஜெட்டில் அந்தக் குறிப்பிட்ட மாடல் பொருள்தான் வேண்டும் என்று பார்த்தால் அது அந்த லிஸ்டில் இருக்காது. பிறகு எப்படித்தான் ஒரு கஸ்டமர் தான் சல்லிசாக வாங்கிய ஒரு பொருளின் விலையைச் சபையில் வைப்பது என்று யோசித்தபோதுதான் இந்த Community Price Watch ஐடியா வந்தது.

    ஏற்கனவே வெண்டர்கள் (Vendors) தங்கள் கடையின் பொருள் விபரங்களை ஏற்றுகிறார்கள். கஸ்டமர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களின் விலைப் பட்டியலை ஏற்றுவதில் தவறு என்ன இருக்கிறது? தவறு ஏதும் இல்லை. மாறாக இது அனைவருக்கும் பயன்படும். “நான் இந்தப் பொருளை வாங்கி இருக்கிறேன்” என்பதற்கு ஒரு பில் இருக்க வேண்டும். அது அந்த கடைக்காரர் கொடுத்திருக்க வேண்டும். அந்த பில்லின் காப்பியை நீங்கள் Add Price form-இல் அப்லோட் செய்து, பிறகு நீங்கள் வாங்கிய பொருள், விலை, கடை விபரங்களை உள்ளீடு செய்யலாம். கடையின் பெயரை வெளியிடாமல், பொருள் அல்லது சர்வீஸின் விலை, எந்தப் பகுதியில் வாங்கியது, முடிந்தால் அந்தப் பொருளின் புகைப்படம் மட்டும் ஏற்ற நினைத்தால் தாராளமாக ஏற்றலாம். தேவைப்படுவோர், அந்தந்தக் கடையின் விபரங்களை enquiry மூலம் Pricefinder.in வழியாகப் பெறுவார்.

    ஒரு கஸ்டமராக அவர் உங்கள் கடையின் பொருட்களை ஏற்ற முன்வரும்போது, ஒரு கடையின் ஓனராக நீங்கள் ஏற்ற வேண்டும் அல்லவா? நீங்கள் ஏற்கனவே உங்கள் கடையின் பெயரில் profile கிரியேட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது எளிதான Form-இல் உங்கள் கடையின் பொருட்களை ஏற்றும்போது, அவை Shop Owner என்று பிரதிபலிக்கும். இதன் மூலம் Community Price Watch-ிலும் ஒரு கடையின் ஓனராக நீங்கள் உங்கள் முத்திரையைப் பதிக்கலாம். ஒரு கஸ்டமர் உங்கள் கடைப் பொருளின் விலையை ஏற்றுவதைக் காட்டிலும் ஒரு கடையின் ஓனராக நீங்கள் ஏற்றும்போது அது விசிட்டர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையைக் கொடுக்கும். கஸ்டமர்களுக்கு உங்கள் கடையின் பொருட்கள் பிடித்திருந்தால் அவர்கள் அங்கே தெரியும் உங்கள் கடையின் பெயரைக் கிளிக் செய்தால் அது உங்கள் Shop லிஸ்டிங்கிற்குச் (Listing) செல்லும். அங்கே அவர்கள் உங்கள் கடையின் பொருட்களை purchase செய்வார்கள்.

    நான் ஏன் Community Price Watch-ஐ ஒரு கேம் சேஞ்சராக (Game Changer) பார்க்கிறேன் என்றால், நீங்கள் மடிப்பாக்கம் லேக் வியூ-விற்கு (Lake View) மாலை நேரத்தில் ஒரு வாக் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று உங்களுக்கு ஒரு ஆசை, “இந்த சிக்கன் சமோசா இங்கே கிடைக்குமா? எந்தக் கடையில் கிடைக்கும்? எந்த நேரத்தில் அந்தக் கடை ஓப்பன் ஆகும்?” என்று தெரிந்தால் ஒரு இரண்டு சமோசா சாப்பிடலாமே என்று நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் அந்த கஸ்டமர், நேராக Community Price Watch பேஜூக்குச் செல்கிறார். அங்கே Madipakkam என்று தேடினால் அவை அனைத்து கடைகளையும் காட்டும்; அது வேலைக்கு ஆகாது. அதனால் Madipakkam Lake View என டைப் செய்கிறார். அவருக்கு Fryry Snacks என்ற கடை சிக்கன் சமோசா விற்பதாக அந்தக் கடை ஓனரே அதில் சொல்கிறார். உடனே அந்த கஸ்டமர், அந்தக் கடையின் லிஸ்டிங்கை அங்கேயே கிளிக் செய்கிறார். அது Fryry Snacks-இன் லிஸ்டிங் பேஜூக்குச் செல்கிறது. அங்கே கடை திறந்து இருந்தால் அவர் Shop Open என்ற ஸ்டேட்டஸைப் பார்ப்பார். அத்துடன் சிக்கன் சமோசா Add to cart பட்டனுடன் அவருக்குக் காட்சியளிக்கும். “சரி, ஏரியைச் சுற்றிவிட்டு 20 நிமிடம் கழித்து வருகிறேன் அதற்குள் எனக்கு ஒரு 5 சமோசா ரெடி செய்க” என ஆர்டர் செய்கிறார். ஆர்டர் வெண்டாருக்கு வருகிறது. அவர் கஸ்டமர் வரும் நேரத்திற்குள் சமோசா ரெடி செய்து கொடுக்கிறார்.

    இப்பொழுது தெரிகிறதா ஏன் Community Price Watch இருக்க வேண்டும் என்று? இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். “அந்த வெண்டார் Pricefinder.in-இல் இணைந்து இருக்கிறார் என்றால் நேரடியாக முகப்புப் பக்கத்தில் தெரியும் அந்த செர்ச்சிலேயே (Search) அந்த கஸ்டமர் தேடி இருக்கலாமே” என்று. இது ஒரு நல்ல கேள்வி. Fryry Snacks வெண்டார் Pricefinder.in தளத்தில் partner-ஆக இருக்கிறார் என்பதால் அந்த கஸ்டமருக்கு அது முகப்புப் பக்கத்தில் காணக் கிடைத்திருக்கும். இதுவே, அந்த கஸ்டமர், “கீரை வடை எங்கே கிடைக்கும்” என்று தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கடைக்காரர் இன்னும் Pricefinder.in partner ஆகவில்லை எனும்போது, கஸ்டமர்கள் ஏற்றும் விலைப்பட்டியல்தான் Pricefinder.in-க்கு உதவும். ஒரு வெண்டார், ஒரு கஸ்டமர் இருவரும் விலைப்பட்டியல் ஏற்றும்போது அது முழுமை அடைகிறது. அதனால்தான் Community Price Watch-ஐ ஒரு முழுமையாகப் பார்க்கிறேன். எங்களுடைய Pricefinder.in Partner-களை Community Price Watch-இல் பொருட்களை ஏற்றுவதற்கு நான் அறிவுறுத்துவேன்.

    நிற்க, ஆக, மூன்று முக்கிய விஷயங்களை மாதம் 499 ரூபாய்க்கு Pricefinder.in வழங்குகிறது. எந்த ஒரு Upfront payment-ம் இல்லாமல். Information website என்பது மருகி, எங்கு காணினும் இ-காமர்ஸ் என்றாகி, மார்க்கெட்பிளேஸ், Community price watch என்று அது உங்கள் முன்னால் வளர்ச்சி அடைந்து நிற்கிறது. இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் static information website-ம் மாதம் 499 என்றே இருந்தது. இப்பொழுது இ-காமர்ஸும் அதே 499 ரூபாய் என்று இருக்கிறது. கூடுதலாக மார்க்கெட்பிளேஸ் மற்றும் Community Price Watch. நீங்கள் செலவிடும் இந்த 499 உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு துருப்புச்சீட்டு. அதனைச் சரியாகப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தைப் பெருக்குங்கள். இறுதியாக ஒன்று சொல்லிக்கொண்டு முடிக்கிறேன். Pricefinder.in-ஐ நம்பினார் கைவிடப்படார்.

    இணைவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் hello@pricefinder.in-க்கு மெயில் அனுப்பவும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். நீங்கள் எக்காரணம் கொண்டும் உங்கள் விலைப்பட்டியலை இணையத்திலோ அல்லது pricefinder.in-யிலோ வெளியிட முடியாது, ஆனால் community price watch-இல் விலைப்பட்டியலை ஏற்றத் தயாராக இருக்கிறேன், ஆனால் கடையின் அடையாளம் தெரியக் கூடாது என்று சொன்னால், அதற்கும் வழி இருக்கிறது. உங்கள் இ-காமர்ஸ் தளம் மற்றும் pricefinder.in-இல் Price Request என்ற பட்டனை Add to cart-க்கு பதிலாகக் கொடுக்கிறோம். இதுவும் Add to cart போலவே அனைத்து functionality-யும் கொண்டிருக்கும். ஆனால் Price மட்டும் இருக்காது. உங்களுக்கு Request order கிடைத்த பின்பு நீங்கள் உங்கள் கஸ்டமரைத் தொடர்பு கொண்டு உங்கள் விலை விபரங்களைக் கொடுத்து பிஸினஸை முடிக்கலாம். இது பெரிய எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகளுக்குப் பொருந்தும். ஆக, Community price watch-இல் விலை விபரங்களைக் கொடுத்து கடை பெயரை மறைத்து லீட்ஸ் (Leads) பெறுங்கள். உங்கள் தளத்தில் கடை விபரங்கள் கொடுத்து விலையை மறைத்து லீட்ஸ் பெறுங்கள். அவ்வளவுதான்.

    நன்றி.