நீங்கள தேடும் பொருள் pricefinder.in தளத்தில் இருந்தால்தான் அதன் விலை மற்றும் எந்த வெண்டார்களிடம் அந்த பொருள் கிடைக்கிறது என சொல்லமுடியும். ஆச்சா..
சிக்கன் பிரியாணி தேடுகிறீர்கள். அதற்கு Chicken Biryani என டைப் செய்தால் ஒரு prouduct வருகிறது. அதில் எந்த கடைகாரர் சிக்கன் பிரியாணியை கொடுக்கிறார். இப்பொழுது கிடைக்குமா, என்ன விலை என்ற விபரங்களை நீங்கள் அந்த product page யில் நுழைந்தால்தான் பார்க்குமுடியும். ஒவ்வொரு products க்கு ஒவ்வொரு unique product page. No duplicates, No mess.
சிக்கன் பிரியாணி products கீழ் வெண்டார்களின் தகவல்கள் கிடைக்கபெறும் அதில் அனைத்து லொக்கேஷன், அனைத்து கடைகாரர்களின் கடைகளும் இடம்பெறும். அதனால் அங்கேயே நீங்கள் madipakkam என் filter செய்தால் மடிப்பாக்கத்தில் உள்ள கடைகள் தெரியவரும். இப்பொழுது, கடையை கண்டுபிடித்தாகிவிட்டது. முக்கியமாக stock இருக்கிறதா என்றும் தெரிந்துவிட்டது. முன்பதிவு செய்து இறுதியாக்கிகொள்ள, நீங்கள் அந்த வெண்டார் பேஜில் நுழைந்தால் அங்கே அவரின் அத்தனை products களும் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் அங்கே நீங்கள் chicken birynai ஆர்டர் செய்து பிக்கப் டைம் கொடுத்தால் உங்களுக்கான பிரியாணி ரிசர்வ் செய்யப்படும். நீங்கள் சரியான நேரத்தில் சென்று வாங்கி கொள்ளலாம்.
எதற்கு சுத்திவளைத்து நேரடியாக செர்ச் பாக்சில் chicken biryani madipakkam என டைப் செய்து அத்தனை கடை பிரியாணியையும் லிஸ்ட் செய்யவேண்டியதுதானே?
மேற்கண்ட வரிக்கு பிறகு என்னால் எழுத முடியவில்லை. டெக்னிக்கல்லாக ஒரு விஷயம் நம்மால் முடியவில்லை, அதுவும் லான்ச் கிரிட்டிகல் கிடையாது என சமாதானம் சொல்லி அதனை அப்படியே விட்டுவிட்டு, முழம் அளவுக்கு How to என்று கட்டுரை எழுத மனம் ஒப்பவில்லை.
கட்டுரை நிறுத்தி, function யில் வொர்க் செய்தேன். இதோ சாத்தியமாகிபோனது. அட என்று நானே என்னை மெச்சிகொண்டேன். வேறு யார் நம்மை பாராட்டுவார், அதனால் நமக்கு நாமே இப்படி செய்துகொள்ளவேண்டியதுதான்.
விஷயத்துக்கு வருவோம். இப்பொழுது கசகச வென்று எங்கேயும் தேடவேண்டியதில்லை. Pricefinder.in யின் home page யில் hero banner யிலேயே search and location box இருக்கிறது. நீங்கள் என்ன பொருள் தேடுகிறீர்களோ டைப் செய்யுங்கள், அதுவே கொட்டும் அனைத்து விபரங்களையும். பொருளின் பெயர், கடையின் பெயர், விலை, ஸ்டாக் இருக்கிறதா, கடை திறந்திருக்கிறதா என்று அனைத்து விபரங்களும் ஒரு சேர காணகிடைக்கும். இதில் முத்தாய்ப்பான விஷயம் அந்த செர்ச் பாக்சிலேயே add to cart செய்து கொள்ளலாம். என்னடா இது இப்படி பொசுக்குன்னு முடிஞ்சிருச்சேன்னு எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு.
நேற்றைக்கு முந்தைய நாள் இந்த கட்டுரை எழுத ஆரம்பித்து இருக்காவிட்டால், இது சாத்தியமில்லை. என்னை பொருத்தவரை, ஒருவர்,சிக்கன் பிரியாணியோ மட்டன் பிரியாணியோ தேடுகிறார் என்றால், எந்த கடையில் இருக்கும், என்ன விலையில் இருக்கும், ஆர்டர் புக் செய்யலாமா, என அனைத்துவிஷயங்களும் விரல் நுணியில் தெரியவேண்டும். அவ்வளவுதான் ஈஸியா இருக்கனும். அதுக்கான ஒவ்வொரு கடை பேஜூம் போய் பார்க்க டைம் இல்லை யாருக்கும். அதனை இந்த செர்ச் அருமையாக செய்து காட்டும்.
எத்தனை மணிக்கு ஆர்டர் வாங்க வருகிறீர்கள் மற்றும் என்னைக்கு டெலிவிரி போன்ற விஷயங்கள் செக் ஆவுட்டில் காணக்கிடைக்கும் as usual ஆக. எனக்கு என்னவென்றால், எத்தனையோ டாக்ஸிகள் சென்னை ஏர்போர்டிற்கு ஆட்களை அழைத்து கொண்டு ஊரிலிருந்து வருவார்கள், அவர்கள் ஏதேனும் ரிடர்ன் டிரிப் கிடைக்காதா என காத்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்த pricefinder.in search யில் காணகிடைத்தால், கஸ்டமர்களுக்கு அப்படியே கேட்ச் செய்துகொள்வார்கள். ஏனெனில், Closed, out of stock எல்லாம் on the fly யில் வொர்க் ஆகும்.
அவர்கள் என்றில்லை கால் டிரைவர்கள், கேப்ஸ், மருந்தகங்கள், உணவகங்கள், ஹார்ட்வேர்ஸ் கடைகள், மளிகை, காய்கறி, பழங்கள் என அனைத்து கடைகள் இந்த தளத்தின் மூலம் வியாபாரம் செய்யலாம். அனைத்து சர்வீஸ் providers களும் இதில் இணைந்து கொள்ளலாம். உங்கள் கடையை இதில் இணைக்க அழையுங்கள. hello@pricefinder.in
எவ்வளவு கமிஷன் வசூலிக்கிறோம் என்பதை பற்றிய விபரங்கள் காண இதை கிளிக்கவும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
