ஒரு ஆக்டர் காமெடியில் ஜொலிக்கிறார் என்றால், மக்கள் அவரை அப்படிதான் அடுத்த படத்திலும் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் ஒவ்வொருவரை பற்றியும் ஒரு கருத்தை உள்வாங்கி கொள்கிறார்கள். அதனை அவர்கள் பிரதிபலிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்போடுதான் அவர்களின் அடுத்த படத்தை நோக்குவார்கள். எதற்கு இந்த விளக்கம் எனில் அவதாரின் 3 ம் பாகத்தை IMAX யில் கண்டுகளிக்க சென்றேன். ஆனால் ஏதோ ஒன்று முழுமை அடையாதது போலவே இருக்கிறது.
முதல் பாகம், extrooridinatry, அதில் காடு மற்றும் அது சார்ந்த வினோத விலங்குகள், பறவைகள் என வேறு உலகத்தை கண்முன் நிறுத்தினார். இரண்டாம் பாகம், கடல் சார்ந்த மீன்கள் மற்றும் உயிரனங்கள். கடலின் பிரமிப்பை அதில் காட்டினார். மூன்றாம் பாகம், புளு சட்டை மாறன் சொன்னதுபோல, நெருப்பை சார்ந்து இருக்கும் என்று போனால், இது இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி போல இருக்கிறது. இதனை நான் ஏற்கனவே என்னுடைய இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தில் எழுதி இருப்பேன். கடல் சார்ந்துதான் ஹீரோ இருப்பார் என் நினைத்தேன் அதுவே நடந்திருக்கிறது.
இதனை way of water யின் பாகம் 2 என சொல்லி இருந்தால் இந்தளவு ஏமாற்றம் இருந்திருக்காது. காடு, கடல், மலை, என அனைத்தும் காட்டியாகிவிட்டது இனி அடுத்த என்ன இருக்கபோகிறது என நினைத்தேன். அதுபோலவே ஆகிவிட்டது. திருவண்ணாமலை சக்தி தியேட்டரில்தான் way of water பார்த்தேன். படம் முடிந்த பிறகும் திரையில் ஓடும் அந்த கடல் ஜீவராசிகளை உட்கார்ந்து பார்த்து கொண்டு இருந்தேன். ஆனால் ஏனோ இந்த மூன்றாம் பாகத்திலும் அதேபோல ஓடவிட்டார்கள் ஆனால் ஏனோ மனம் உட்காருவதற்கு லயிக்கவில்லை.
முதல் இரண்டு பாகத்தை பார்காதவர்களுக்கு இது விஷூவல் டிரீட். ஆனால் முதல் இரண்டு பாகத்தை பார்த்தவர்களுக்கு பெரிதாக ஈர்க்கவில்லை. இதை புளூசட்டை மாறன் அவர் விமர்சனத்தில் சொல்லி இருந்தார்.
இது எழுதும்போது எனக்கு Avengers infinity war மற்றும் Avengers end game படம் ஞாபகம் வந்தது. இதற்கு முன்பு Marvel characters என்று எனக்கு தெரிந்தது, iron man, spiderman என்ற இருவர்தான். இரண்டு பேர் படத்தையும் தியேட்டரிலேயே பார்த்திருக்கிறேன். ஆனால், எதேச்சையாக IMAX யில் Avengers Infinity War பார்த்தேன். எல்லா திரைபடங்களிலும் ஹீரோ ஜெயித்துதான் பார்த்திருக்கிறோம் ஆனால் முதன்முறையாக வில்லன் ஜெயித்து பார்த்தபோது அட என்று நினைத்தேன். இது புதுசா இருக்கே என்ற ஆர்வம் வந்தது. IMAX திரைக்கும் படத்திற்கும் அடடா என்று இருந்தது. அடுத்தது எப்பொழுது end game வரும் என காத்திருந்து மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் பார்தேன். படம் ஆகா என்று இருந்தது. அதிகபட்ச வசூலை ஈர்த்தது.
அதிகமாக டிவியில் பார்த்த மற்றும் அவ்வப்போது பார்க்கும் படங்கள் என சில உண்டு Doctor, avengers infity war, end game, kung fu panda, jurasic park . இந்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட். ஏன் இந்த திரைபடங்கள் என்னை ஈர்க்கின்றன். ஏன் மறுபடியும் பார்க்க தூண்டுகின்றன என் நினைத்தேன். இந்த படங்களை வரிசை படுத்தி பார்த்தால் ஒரு விஷயம் தெரிந்தது. இந்த படங்கள் அனைத்தும் மெதுவாக நகரக்கூடியவை அதாவது தாம்தூம் என கேமராவை பறக்கவிடாமல், மிகவும் பொறுமையாக தான் சொல்லவந்த விஷயத்தை அனாயசமாக சொல்லி இருப்பவை.
infininity war, end game என இரண்டு படத்தையும் இதை படித்தபின்பு மீண்டும் பாருங்கள் உங்களுக்கு அது புரியும். வில்லன் கூட சாவகாசமாக , பொறுமையாக வசனம் பேசும்படி இருக்கும். கத்துவது, கூச்சலிடுவது எல்லாம் எதுவும் இருக்காது.
புஷ்பா படத்தின் முதல் பாரட்டும் இப்படிதான் இருக்கும். அட நடக்கிறது நடக்கட்டும் அப்புறம் பார்த்துகுலாம் என்ற ரீதியில் அநாயசமாக அல்லு அர்ஜூன் நடித்திருப்பார். ஒருவேளை அதுகூட படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஒரு கேரக்டர் வடிவமைப்பின்போது, அந்த கேடரக்டர் நம்பும் விஷயத்திற்கு மிக உண்மையாக அந்த படம் இயக்கும்போதுதான் படம் மாபெரும் வெற்றி அடைகிறது. நெல்சனின் டாக்டர் திரைப்படம், ப்ளாக் காமெடி என்ற ரீதியில் பேசப்பட்டது. ஆனால் அது கேடரக்டரின் இயல்புக்கு எந்த விதத்திலும் மாற்றமாக இல்லாததால் மாபெரும் வெற்றி அடைந்தது. ஜோக்கர் ஆங்கில திரைப்படம் அப்படிதான் இருந்தது.
நிற்க, இவ்வளவு நீட்டி முழங்கி, நான் சொல்ல வந்த விஷயம், ஆஸ்கர் நாயகன் ஜேம்ஸ் கேமரூனுக்கு வகுப்பு எடுப்பது அல்ல. மாறாக எங்கே இந்த படம் சறுக்கிறது என்ற கோணத்தில் சொல்வதற்குதான். குறிப்பாக மூன்று திரைப்படங்களும், இயற்கை அன்னை இறுதியில் காப்பாற்றுவதாக உள்ளது இது ஒரு டெம்ப்ளேட் போல் உள்ளது.
பெரும் மரத்தின் கீழ் வாழ்ந்து வந்த ஒரு இனத்தை அடித்து துரத்துவதற்கு அந்த மாபெரும் மரத்தை வேரோடு சாய்க்கும்போது அந்த மக்கள் விடும் கணணீரின் எமோஷன், தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற அந்த மக்கள் ஹீரோ மீது காட்டும் அந்த கோபம், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தன்னால் ஆன இந்த இழப்புக்கு தான் என்ன செய்ய போகிறேன் என்று தன்னுயிரை துச்சமென மதித்து பெரும் பறவையை தனதாக்கிகொள்ளும் அந்த ஹீரோவின் தியாக மனப்பான்மை என அவதார் விட்டு சென்றிருக்ககூடிய விஷயங்கள் ஏராளம்.
தன் மன்னில் வாழ இயலாமல் பிறர் மண்ணில் கையேந்தும் அந்த துக்கநிலை, தான் ஒரு மன்னரின் வாரிசு என்ற போதிலும் அயல் மண்ணில் கைகட்டி நிற்க வேண்டி உள்ளதே என்ற ஆதங்கம், திமிங்கில வேட்டையின்போது நடக்கும் அந்த ஜீவராசிகளின் உயிர் போராட்டம், தன் மக்களை எப்பேற்பட்டாவது காக்கவேண்டுமே என்ற அந்த தந்தையின் துடிப்பு, இறுதியில் தன் குடும்பத்தின் இழப்பு என way of water முழுவதும், பாசமும், ஆதங்கமும், கோபமும் விரவி இருந்தது.
ஆனால் மூன்றாம் பார்ட்டில் காட்சிகள் நினைவில் வைக்க தக்கதாக இல்லை என்றே சொல்லலாம். ஒரு fantacy மூவியில் visual effects ஐ மட்டுமே நம்பி உங்களிடம் ஒரு கதை பரிமாறபடுகிறது என்றால் அதில் ஆழமான எமோஷன் இருக்கவேண்டும். வெறும் visual effects மட்டுமே உயிர்ப்பாக இருக்கிறது எனில் மூன்றறை மணி நேரம் ஏதோ ஒரு வீடியோ கேம் பார்த்ததுபோல் ஆகிவிடும்.
சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது போல் இருக்கிறது திரைப்படம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திப்பார் என்று நம்பி போனேன் ஆனால் இது அப்படி அல்ல.
மிகவும் பெர்பக்ஷனிஸ்ட் என்று பெயரெடுத்தவர் அவர். நுணுக்கமாக காட்சிகளை அமைப்பவர். பிரமாண்டம், பிரமாண்டம் என அவர் தன் கலை நுணுக்கத்தை இழக்கிறாரோ என் தோன்றுகிறது.
அவதாரில் சொல்லுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. சண்டை செய்வது, இறுதியில் இயற்கை காப்பாற்றுவது என்ற டெம்ப்ளேட்டை தூக்கிபோட்டுவிட்டு, புதிய கதைகளத்தை இயக்குனர் உருவாக்கவேண்டும் என்பதே என்னை போன்ற அவரில் ரசிகர்கள் நினைப்பது. இதெல்லாம் அவரிடம் சொன்னால், உனக்கு இதை புரிந்து கொள்ள மூளை வலிமை என்று சொன்னாலும் சொல்வார். நமக்கு எதுக்கு வம்பு.
இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் captain america ஒரு வீட்டிற்கு வருகிறார், குழுந்தையை தூக்கி கொஞ்சுகிறார் பிறகு doomsday வருகிறது அடுத்த ஆண்டின் இறுதியில் என்று போட்டார்கள். யார் டைரக்டர் என பார்த்தால் Rossa brothers.
மீண்டும் ஒருமுறை IMAX செல்லவேண்டும் என நினைத்தால் அது இந்த திரைப்படத்திற்கு மட்டும்தான். இதுவும் சரியில்லை என்றால், வேறு என்ன செய்வது, வெயிட் செய்யவேண்டியதுதான் அடுத்த டைரக்டருக்கு.

