Cloud Kitchen ஐ மடிப்பாக்கம் ஏரியாவில் ஆரம்பிக்கலாமா? இதற்கு முன்போ அல்லது தற்பொழுது யாரேனும் செய்கிறீர்கள் என்றால் இதனை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.
எனக்கு இருக்கும் கேள்விகள்?
1. Cloud Kitchen யில் பிரியாணி மற்றும் நெய் சோறு போன்ற அசைவ உணவுகள் விற்கலாம் என்று ஐடியா. இதற்கு வாடகை வீடுதான் சரிவரும். வீட்டை cloud kitchen க்கு எடுக்கும்போது, ரெண்டல் அக்ரிமெண்டில் இது கமர்ஷியல் என்று சொல்வதா அல்லது கமர்ஷியல் இல்லை என்று சொல்வதா?
2. எப்படி இருந்தாலும் ஒரு கம்பெனியின் பெயரில்தான் இது இயங்கமுடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் வீடு வாடைக்கு விடுபவர்கள் கமர்ஷியல் கரண்ட்டை மாற்றி கொடுப்பார்களா? கமர்ஷியல் என்று வீடு மாறும்போது அதற்கு வேறு ஏதாவது பிரச்சனை வரும் என்று வீட்டு உரிமையாளர்கள் அஞ்சுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இதனை எப்படி கொண்டுபோவது என்பது பற்றி லீகல் ஒப்பினியன் கேட்க விரும்புகிறேன்.
3. GST அவசியமா?
4.வீட்டை கமர்ஷியல் இல்லாமல் கொண்டுபோனால் அதை TNEB எப்படி அணுகும். Cloud kitchen என்பதே கடை வைக்க காசில்லாமல் வீட்டிலிருந்து செயல்படும்போது அதுவும் கமர்ஷியல் என்றால் அது இன்னும் சுமையைதான் கொடுக்கும்.
5. இப்பொழுது swiggy போன்றவற்றை கனெக்ட் செய்யும் pos கிடைக்கிறது. இதனை யாராவது உபயோகித்து பார்த்து இருக்கிறீர்களா?
6. Cloud kitchen ஐ ஆரம்பித்து வெற்றி பெற்றது எப்படி அல்லது வீழ்ந்தது எப்படி?
நன்றி.