160 ரூபாய் சிக்கன் பிரியாணியில் Profit margin எவ்வளவு?

Question Open
Last Modified
Contact Information
Chennai, India
Detailed Information

கீழ்கட்டளையில் (மேடவாக்கம் மெயின் ரோட்டில்) உள்ள ஒரு கடையில், சிக்கன் பிரியாணி பார்சல் 160 ரூபாய். முட்டை, தயிர் வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் பிரட் அல்வா என்று கொடுக்கிறார்கள். மற்ற பிரியாணியை கம்பேர் செய்யும்போது worth என்று தோன்றுகிறது.

என்னுடைய கேள்வி, எப்படி 160 ரூபாயில் இவ்வளவும் கொடுக்க முடிகிறது. அப்படியென்றால் ஒரு பிரியாணிக்கு ஆகும் செலவு எவ்வளவு மற்றும் லாபம் எவ்வளவு? அரிசியை பொருத்தவரை பாஸ்மதிதான், சிக்கன் பீசும் தாராளமாக கொடுக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்.? ஒரு பார்சலுக்கு எவ்வளவு profit margin? யாராவது பிரியாணி கடையை நடத்தியவர்கள் தெரிந்தால் சொல்லவும்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories