Pricefinder.in யின் அடிப்படை நோக்கம் அல்லது அடிநாதம் என்பது எந்த நேரத்திலும் வெண்டாரின்(வியாபாரி அல்லது கடைகாரர்) details ஐ கஸ்டமர்களிடம் இருந்து மறைப்பதில்லை என்பது. அது என்ன வெண்டாரின் details? , அதில் என்ன இருக்கிறது கஸ்டமரிடம் இருந்து மறைப்பதற்கு? என்று உங்களுக்கு கேள்வி எழுலாம். விளக்குகிறேன்.
இகாரமர்ஸ் துறையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று Quick Commerce, இரண்டாவது Marketplace.
Quick commerce : இங்கு மார்கெட்டில் உள்ள Quick commerce app களை நீங்கள் உபயோகித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் அவை அனைத்தும் தங்களுக்கான Dark stores ஐ சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சப்ளையை அவர்களுடைய Dark Store யிலிருந்து கொடுக்கிறார்கள். இந்த டார்க் ஸ்டோர்கள் இன்னும் கஸ்டமர்கள் நேரடியாக வாங்கும் வண்ணம் திறக்கப்படவில்லை. இன்னும் கொஞ்சம் நாட்களில் அவையும் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். நிற்க. இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒவ்வொரு app ம் தங்களுக்கான கடை பொருட்களை விற்கிறார்கள். யாரும் அடுத்தவர்களுடைய பொருட்களை விற்பதில்லை.
இப்பொழுது அப்படியே மார்கெட்ப்ளேஸ் என்றால் என்ன பார்த்துவிடுவோம்.
மார்கெட்ப்ளேஸ் என்பது ஒரு மார்கெட் என்று நினைத்துகொள்ளுங்கள். எப்படி மார்கெட்டில் பலதரப்பட்ட கடைகள் இருக்குமோ அதே போலத்தான் இங்கும் பல தரப்பட்ட கடைகள், தங்கள் கடைக்கு என தனியாக பேஜை உருவாக்கி அதில் தங்கள் பொருட்களை ஏற்றுவார்கள். அவரவருக்கு என தனியாக டேஷ்போர்டு கொடுக்கப்படும் அதில் அவர்களின் பொருட்கள், ஆர்டர், கஸ்டமர்கள் என அனைத்து விபரங்களும் அடங்கி இருக்கும்.
இந்த இரண்டையும் பார்த்துவிட்டோம் அல்லவா இப்பொழுது, நம்முடைய Pricefinder.in எந்த கேட்டகரியில் வரும்? Quick Commerce அல்லது Marketplace.?
Pricefinder.in என்பது ஒரு மார்கெட்ப்ளேஸ். இங்கு அனைத்து கடைகளுக்கும் தனித்தனியே பேஜ் உருவாக்கப்பட்டு அவர்களுடைய பொருட்களை ஏற்றும்படி வெண்டார்களுக்கு டேஷ்போர்டு கொடுக்கப்படும். கடைகளுக்கு ஆன்லைன் தளம் இருக்கிறதோ இல்லையோ, இந்த Pricefinder.in யில் ஒவ்வொருவருக்கும் தனிதனியே Unique address வோடு ஆன்லைன் ஷாப்பிங் பேஜ் உருவாக்கி தரப்படும். அதன்மூலம் கடைகாரர்கள் தங்களுடைய கஸ்டமர்களுக்கு அந்த URL ஐ கொடுத்து ஆர்டர் கொடுக்க சொல்லலாம். இந்த பேஜில் கடையின் அட்ரஸ், அவர்களின் பொருட்கள் உள்பட அனைத்து விபரங்களும் ஏற்றப்படும். அதனால் கஸ்டமர்கள் கடையின் விபரங்களை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இதேபோல, ஆன்லைனில் ஏகப்பட்ட மார்கெட் ப்ளேஸ் இருக்கிறதே இது எதற்கு பத்தோடு ஒன்று பதினொன்று?
நல்ல கேள்வி. இது வெறும் மார்கெட் ப்ளேஸ் அல்ல, ஹைப்பர்லோக்கல் மார்கெட்ப்ளேஸ் (Hyperlocal Marketplace). இது புரிந்து கொள்வதற்கு கடினமான பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது. சிம்பிள். நாம் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள கடைகளை இதில் இணைப்பதன்மூலம், நமக்கு வேண்டிய பொருட்கள் விரைவாக நம் கைக்கு வந்து சேரும் அல்லவா? அதுதான் ஹைப்பர் லோக்கல் மார்கெட் ப்ளேஸ். உங்கள் ஊரின் கூட்ரோட்டில் கிடைக்கும் பொருளுக்கு எதற்கு 500 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கடையில் வாங்குவானேன்? அதுதான் Hyperlocal Marketplace.
இப்பொழுது மீண்டும் ஒரு கேள்வி எழும். 100 மீட்டரில் இருக்கும் கடைக்கு சென்று பொருள் வாங்குவதற்கு எதற்கு நான் ஆன்லைனில் ஆர்டர் செய்யவேண்டும். அப்படியே ஆர்டர் செய்யவேண்டும் என்றால் அதற்கு Quick commerce இருக்கிறதே அதில் ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் கிடைத்துவிடுகிறது. இதற்கு எதற்கு மார்கெட் ப்ளேஸ். ?
நல்ல கேள்வி, இதனை பற்றி விளக்குகிறேன். பல ஆண்டுகளாக நாம் ஒரு பகுதியில் வாழ்கிறோம் என்றால் நமக்கு அருகில் இருக்கும் கடைகள் மிகவும் பரிச்சயமாக இருக்கும். அருகில் இருக்கும் கடையில் என்ன இருக்கும், என்ன இருக்காது என்பதை கடை முதலாளியை விட நமக்கு தெரிந்திருக்கும். இப்பொழுதுகூட மாத ஆரம்ப நாட்களில் பெரிய லிஸ்டோடு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் தங்களுக்கு பரிச்சயமான கடைகளுக்குதான் செல்கிறார்கள். ஏன் என்று நினைத்து பார்த்து இருக்கிறீர்களா? ஏனெனில் அந்த கடைக்கு அவர்கள் பலமுறை நேரடியாக சென்று இருக்கிறார்கள். பல முறை அவர்களின் பேக்கிங் பொருட்களை வாங்கி இருக்கிறார்கள். கடைகாரர்கள் கடையை எப்படி மெயின்டெயின் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும், அதனால்தான் அவர்கள் இன்னும் வழக்கமாக வாங்கும் கடைகளுக்கே செல்கிறார்கள். விலை குறைவு, குவாலிட்டி, கடையை சுத்தமாக வைத்திருத்தல் என எத்தனையோ காரணங்கள் கஸ்டமர்களை அந்த கடைக்கு இழுத்து செல்லும்.
ஓகே, கேள்விக்கு வருவோம். 100 மீட்டரில் இருக்கும் கடைக்கு நடந்தே சென்று வாங்கிவிடுவேனே?…கண்டிப்பாக இது சாத்தியமானதுதான். டீ போட டீதூள் இல்லை என்றால் அப்பொழுது உட்கார்ந்து ஆன்லைனில் ஆர்டர் செய்ய யாருக்கும் டைம் இல்லை. வண்டியை எடுத்து ஒரு ரவுண்ட் வந்தால், அடுத்த 5 நிமிடத்தில் வாங்கிவந்துவிடுவோம். அவசர நேரங்களில் எந்த ஆன்லைன் சேவையும் சாத்தியம் இல்லை என்பதே என்னுடைய கருத்தும். அந்த நேரத்தில் நாம் காத்திருக்கமுடியாது. ஆனால் எதற்கு ஹைப்பர்லோக்கர் மார்கெட்ப்ளஸ் தேவை என்பதற்கு என்னுடைய பார்வை சிறிது மாறுபட்டது. எப்படி எனகிறீர்களா?, விளக்குகிறேன்.
உதராணத்திற்கு மளிகை பொருட்களை எடுத்துகொள்வோம். நீங்கள் ஒரு லிஸ்டை ரெடி செய்துவிட்டீர்கள். இந்த லிஸ்ட் அந்த கடைகாரருக்கு செல்லவேண்டும். என்ன செய்வோம். இருக்கவே இருக்கிறது Whatsapp அல்லது ஏதாவது மெசேஜிங் சர்வீஸ். இந்த லிஸ்டை போட்டோ எடுத்து அனுப்பிவிட்டால் டெலிவரி அட்ரஸூக்கு பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். காசு கொடுத்து பில்லை வாங்கி கொள்ளலாம். இந்த இடத்தில் நாங்கள் செய்வது, அந்த மெசேஜிங் ஆப்பிற்கு பதில் Pricefinder.in ஐ உட்காரவைப்பது. எப்படி?
சிம்பிள். Pricefinder.in க்கு வருகிறீர்கள். உங்கள் அருகில் உள்ள கடையின் பெயரை தேடுகிறீர்கள். அது கிடைக்கபெறுகிறது. அதை கிளிக் செய்து உள்ளே போனால், அந்த கடையின் விலாசம், போன் நம்பர், கடையின் புகைபடங்கள் என அனைத்தும் கிடைக்கப்பெறும். நாம் தேடிய கடை இதுதானா என்பதை உறுதி செய்த பின்னர், அந்த கடையின் பேஜில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்ற பொருட்களை Add to cart செய்கிறீர்கள். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களின் விலை இதில் இருக்கலாம் அல்லது இல்லாமல் Quate என்றும் இருக்கலாம். நீங்கள் பொருட்களின் லிஸ்டை தயார் செய்யும்போது எப்படி விலை இல்லாமல் இருக்கிறதோ அப்படிதான் இதுவும் இருக்கும். ஏன் விலை இல்லாமல் என்ற கேள்வி எழலாம். பதில் சொல்கிறேன்.
ஒரு மளிகை கடைகாரர் குறைந்தது ஆயிரம் பொருட்களையாவது வைத்திருப்பார். அந்த பொருட்களில் விலை என்பது அவ்வப்போது மாறிகொண்டே இருக்கும். நான் போய் கடைகாரரை நீங்கள் பொருட்களில் விலையை மாற்றி கொண்டே இருக்கவேண்டும் என்று சொன்னால், இருக்கிற வேலையே பார்க்கமுடியவில்லை இதில் எங்கே நான் விலையை மாற்றுவது என்பார்கள். அதனால்தான், விலை இல்லாமல் வெறும் ஆர்டர் மட்டும் செல்வது போல் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. நிறைய பொருட்களை உள்ளடக்கிய மளிகை போன்ற கடைகளுக்கு இது பொருந்துகிறது ஆனால் சிறிய அளவிலான பொருட்களை விற்பவர்களுக்கு இது பொருந்தாது. அதனால் கஸ்டமர்கள் அச்சப்பட தேவையில்லை. அதேபோல, உங்களுக்கு மளிகை பொருட்களின் விலை விபரங்கள் ஓரளவு தெரியும். பில் உங்களுக்கு Surprise ஆக இருக்காது.
ஓகே, இரண்டாவது துனை கேள்வி இதற்கு நான் Quick Commerce யில் ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் வந்துவிடபோகிறது. மிகச்சரி. அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை சொல்லவிரும்புகிறேன்.
Hyperlocal Marketplace ஐ நான் ஆரம்பித்தற்கு முதற் காரணம், நான் ஒரு சர்வீசின் விலை விபங்களை கேட்க முனைந்தபோது, ஒவ்வொருவரும் ஒரு விலை சொன்னார்கள். MRP இல்லாத பிசினஸ் இது அதனால் விலை நிர்ணயம் என்பது ஒவ்வொரு வெண்டாருக்கும் மாறுபடும். ஒரு கம்பெனி மூலம் செய்கிற வேலையை ஒரு தனிநபர் செய்து கொடுக்கும்போது விலை வேறுபாடு அதிகமாக இருக்கும் அல்லவா, என்னால் புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக இது இருந்தது. நாம் இந்த சர்வீசுக்கு கொடுத்தது சரியான விலையா என்ற கேள்வி இருக்கவே கூடாது. ஒரு நுகர்வோராக எனக்கு அனைத்து விபரங்களும் தெரியவேண்டும் என எதிர்பார்த்தேன். ஒரு வெளிப்படையான வியாபாரம் ஏன் நான் சார்ந்த இந்த சர்வீஸ் துறையில் கொடுக்ககூடாது என்ற நினைத்ததன் விளைவே இந்த மார்கெட்ப்ளேஸ்.
இரண்டாவது, ஒரு மளிகை கடையோ அல்லது வேறு கடையோ, பல வருடங்களுக்கு காசு கொடுத்து பொருட்கள் வாங்கி இருந்தாலும் ஒரு கடினமான நேரத்தில் பொருட்களை கடனாக கொடுப்பதற்கு தயங்குகிறார்கள். தயங்குகிறார்கள் என்பதைவிட அவர்கள் கொடுப்பதில்லை எனலாம். ஒரு கஸ்டமர், பல்லாண்டுகளாக ஒரே கடையில் பல ஆயிரங்களுக்கு மாதா மாதம் பொருட்கள் வாங்கினாலும் அவருக்கு எந்த வித சலுகையும் இல்லை என்றால் எப்படி இருக்கும். என்ன யோசனை வரும் என்றால், எப்படியும் யாரும் கடன் தருவதில்லை பிறகு ஒரே கடையில் பொருட்களை வாங்குவானேன் என்று அவர்கள் விலை குறைவாக ஆஃபர் எங்கு போய்கொண்டிருக்கிறதோ அங்கு வாங்குவார்கள். பணம் படைத்தவர்களுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் பெரிய பணம் இல்லை என வைத்துகொள்வோம். ஆனால், நடுத்தர மக்கள் நிலைமை?. ஒரு 1000, 2000 ஆயிரம் கூட 10 அல்லது 15 நாட்களுக்கு பின்னர் வாங்கி கொள்கிறோம் என்று சொல்லி பொருட்களை கொடுப்பதற்கு இங்குள்ள கடைகள் தயாராக இல்லை. இதை எப்படிதான் தீர்ப்பது. ? பல ஆண்டுகளாக ஒரு ரயில் சேவையை, ஒரு கார் சேவையை தினமும் பயன்படுத்தி வந்தேன். திடீரென்று ஒரு நாள் அனைத்து சேவைகளையும் நிறுத்திவிட்டேன் (ஆபிஸ் அருகில் வந்ததால்). இரண்டு பேரிடமும் ஒரு விசாரிப்பு கூட இல்லை. எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. என்னடா இது, ஒரு பிரிமியம் கஸ்டமராக என்னை டிரீட் செய்யவேண்டிய கம்பெனிகள் ஒரு கிள்ளுகீரையாக நினைத்துவிட்டதே என உண்மையிலேயே நினைத்து வருத்தப்பட்டேன். கஸ்டமர் ரிலேஷன் என்பது எந்த பிஸினசிலும் அவசியம். இன்று தனியார் பேங்குகள், ஒவ்வொரு individual க்கும் ஒரு Relationship Manager ஐ ஒதுக்குகிறார்கள். பேங்குக்கு போய் வரும்வரை அவர் அத்தனை உதவிகளையும் உடன் இருந்து செய்து தருகிறார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்தளவு Customer Relationship முக்கியமானது என்று.
ஒவ்வொரு கஸ்டமரும் தனக்கு சேவை வழங்கும் கம்பெனிகள் தன்னை ஒரு ராஜாவாக பார்த்துகொள்வார்கள் என்றுதான் நினைப்பார்கள். தான் அந்த கம்பெனியின் கஸ்டமர் என்று சொல்வதை அவர் பெருமையாக கருதவேண்டும். நல்லதோ கெட்டதோ அந்த கம்பெனி அந்த கஸ்டமரை கைவிடக்கூடாது. ஒரு கஸ்டமர் உங்களுக்கு இவ்வளவு வியாபாரம் தருகிறார் என்றால் அவரை நாம்தான் அதிகமாக கவனிக்கவேண்டும். ஒரு கடினமான நேரத்தில் அவருக்கு பொருட்களை கடன்கொடுக்க அந்த கம்பெனி தயங்க கூடாது. அப்படி இருந்தால் அந்த கஸ்டமர் & கம்பெனி Bond எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். அதுபோன்ற ஒரு சேவையைதான் Pricefinder.in கொடுக்கவேண்டும் என்று யோசித்தேன். அதைநோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். எங்கள் கம்பெனி கஸ்டமர்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனி என்பதால், எங்கள் தளம் மூலம் நீங்கள் எவ்வளவு வியாபாரம் செய்கிறீர்களோ அந்தளவுக்கு நாங்கள் உங்களுக்கான சேவையை மேம்படுத்துகிறோம். கடினமான நேரங்களில் Pricefinder.in தோளோடு தோள் நிற்கும்.
ஓகே, அடுத்த மெயின் மேட்டருக்கு வருவோம். அது என்ன வெண்டார்களின் அனைத்து விபரங்களையும் வெளியப்படையாக அறிவிப்போம் என்பது?
இது சர்வீஸ் செக்டாரை மனதில் கொண்டு சொன்னது. இன்று நாம் புக் செய்யும், சர்வீஸ்களை அந்தந்த கம்பெனிகள் தங்களுடன் இணைந்த பார்ட்னர்களின் availability கொண்டு கஸ்டமருக்கு சேவை வழங்குகிறது. உதராணத்திற்கு, ஒரு கால் டேக்ஸி கம்பெனியை எடுத்துகொள்வோம். ஒரு நீண்ட பயணத்திற்கு நாம் ஒரு காரை புக் செய்யவேண்டும். நமக்கு இருக்கும் ஒரு பிரச்சனை, வரும் டிரைவர் எப்படி இருப்பார், நம்மோடு முகம் கொடுத்து பேசுவாரா அல்லது உம்மென்று இருப்பாரா? கார் எப்படி இருக்கும். புது காரா, பழைய காரா, என்ன மாடல், ஏசி வொர்க் ஆகுமா என ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்களோடு நாம் வண்டியை புக் செய்வோம். டிரைவர் நேராக வரும்வரை நமக்கு எதுவுமே தெரியாது. அதிகமாக கால் டேக்சி புக் செய்து இருக்கிறேன் என்பதால் என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய விஷங்களை , ஒரு கஸ்டமராக கற்றுகொண்டேன். ஓகே, இந்த வழக்கமான நடைமுறையை எப்படி உடைப்பது என யோசித்தபோதுதான், நாம் ஏன் சர்வீஸ் providers களை நேரிடையாக இதில் இணைய சொல்லக்கூடாது. ஒரு கஸ்டமர் தன்னுடைய விருப்பப்படி ஒரு வண்டியை ஏன் புக் செய்ய அனுமதிக்ககூடாது ஏன் தோன்றியது. அதனால்தான் தான் சர்வீஸ் providers களின் போன் நம்பர், அவர்களின் availability status, அவர்களின் சார்ஜ் என் அனைத்தையும் இங்கு லிஸ்ட் செய்ய சுதந்திரம் அளித்திருக்கிறேன். கஸ்டமர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்கள் போன் நம்பரை வைத்து அவர்களை Pricefinder.in இல்லமல் புக் செய்யலாம். விருப்பப்பட்டால் booking ஐ Pricefinder.in மூலமாக செய்யலாம். எங்கள் மூலம் புக் செய்யும்போது, நாங்கள் முன்பே சொல்லியதுபோல் நீங்கள் எந்தளவுக்கு எங்களுடன் வியாபாரம் செய்கிறீர்களோ அந்தளவுக்கு எங்களால் உங்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கமுடியும்.
கஸ்டமர்களின் சுதந்திரத்தை மதிக்கும் நாங்கள் வெண்டார்களின் சுதந்திரத்தையும் மதிக்கிறோம். அவர்கள் எதிலும் லாக் ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. வெண்டார்களுக்கு நாங்கள் சொல்லிகொள்வது, நீங்கள் உங்கள் availability status ஐ சரியாக பராமிக்கவேண்டும். ஏனெனில் அதுதான் சர்வீச் செக்டாரில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதில் இணைவதற்கு ஒரு பைசாசும் செலவு செய்யதேவையில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் உங்கள் profile ஐ Pricefinder.in யில் சரியாக பராமரியுங்கள் அதுதான் எங்களுக்கு முக்கியம்.
ஓகே, பிஸிகல் ஸ்டோர், சர்வீஸ் provider என இருவேறு துறை சார்ந்தும், அதில் எங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் சொல்லிவிட்டோம். இதில் இன்னும் ஓரிரு விஷயங்களையும் வெண்டார்களுக்கு சொன்னால் இந்த தளத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் எந்த வியாபாரத்திலும் கஸ்டமர்களுக்கும் வெண்டார்களுக்கும் ஒளிவு மறைவு இருக்ககூடாது என்று நினைக்கும் நான், எங்களுக்கு வெண்டார்களுக்கும் இடையில் என்ன ஒப்பந்தம் என்பதை இங்கு சொல்லிவிடுகிறேன். இதன்மூலம் அனைத்து விபரங்களும் அனைவருக்கும் காணக்கிடைக்கும். வெளிப்படை தன்மையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் வெண்டார்களுக்கு என நாம் சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. ஒரு கஸ்டமராக நீங்களும் தெரிந்துகொள்ளலாம். நாங்கள் வெண்டார்களுக்கு சொல்லவேண்டிய செய்திகளை சிறு சிறு பாயிண்டுகளாக தொகுத்து இருக்கிறோம் அந்தந்த தலைப்போடு. வாருங்கள் படித்துவிடுவோம்.
லோக்கல் பிக்கப் – இகாமர்ஸில் டெலிவரி அல்லது லோக்கல் பிக்கப் என் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. எங்கள் வெண்டார்கள் இந்த இரண்டையும் தங்கள் கஸ்டமர்களுக்காக உபயோகித்து கொள்ளலாம். லோக்கல் பிக்கப் என்பது, பெரிய க்யூவில் நின்று ஆர்டர் கொடுத்து பின்பு வாங்கி செல்ல நேரமில்லை என கருதும் கஸ்டமர்களுக்குகாக. கடைகாரர் ஒரு ஆர்டரை பெறுகிறார் என்றால் அதில் லோக்கல் பிக்கப் டைம் என்பது குறிப்பிடபட்டிருக்கும், அதன்மூலம் அந்த கடைகாரர் அந்த பொருட்களை பேக்கிங் செய்து பில்லை ரெடி செய்து, கஸ்டமர் வந்தால் பணம் மட்டும் வாங்கிகொண்டு, பொருட்களை கொடுப்பது. இதன்மூலம் தேவையில்லாத கியூ, நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. இது எந்த கடைக்கு எல்லாம் பொருந்தும்? மளிகை, உணவகங்கள், கறிக்கடை, ஸ்டீரிட் புட்ஸ், etc.
Price comparison: மார்கெட்டில் நீங்கள் கொடுக்கும் விலை குறைவாக இருக்கிறது ஆனால் கஸ்டமர்கள் வருவதில்லை என்று வருத்தமா, கவலையை விடுங்கள். நீங்கள் Price உடன் பொருட்களின் விலையை ஏற்றினால், அது மற்ற கடைகாரர்களின் விலையோடு கம்பேர் செய்யப்படும். அப்பொழுது உங்களுக்கு வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளது. அதேபோல, சில நேரங்களின் பண முடையாக இருக்கும் அந்த நேரங்களில் விலையை குறைத்து கொடுக்கும்போது உங்களுக்கு cash flow இருக்கும். பிறகு நீங்கள் பழைய விலைக்கே மாற்றிவிடலாம். ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இங்கே நீங்கள் ஏற்றும் விலைகள் வெளிப்படையாக அனைவரும் பார்பார்கள். அத்தோடு மட்டுமல்ல உங்கள் பொருட்களின் விலை அந்த பகுதியில் இருக்கும் மற்ற கடை பொருட்களின் விலையோடு கம்பேர் செய்து கஸ்டமர்களால் பார்க்கப்படும். இதற்கு நீங்கள் தயார் என்றால் தாராளமாக இதில் இணையலாம்.
ஒரு சிறு தொகை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதால் உங்கள் கடையின் மீது கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது என்பதை வெண்டார்கள் உணரவேண்டும். நீங்கள் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, பொருடகளை நல்லவிதமாக பேக்கிங் செய்வது, உடனடி டெலிவரி என மற்ற விஷயங்களை சிறப்பாக கொடுக்கும்போது சிறு விலை ஏற்றம் என்பது கஸ்டமர்களுக்கு பெரிய விஷயமாக இருக்காது. நீங்கள் விலை குறைவாக கொடுக்கிறேன் என்று அழுகி போன காய்கறிகளையும், அடுத்த வாரம் காலாவதி ஆகும் பொருட்களை கொடுத்தால் கஸ்டமர்கள் உங்கள் கடைகளை நிராகரித்து வேறு கடைகளுகு சென்றுவிடுவார்கள். அதனால் நியாயமான விலையை நிர்ணயம் செய்து , தரமாக பொருட்களை கஸ்டமர்களுக்கு கொடுங்கள் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, நம்பிக்கை, நேர்மை தான். சிறு விலை ஏற்றம் பெரிய விஷயம் இல்லை.
என்னிடம் நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், யாரும் தங்கள் பொருட்கள் மற்றும் சர்வீசின் விலையை பொதுவில் பகிர்வதில்லை அதனால் இந்த திட்டத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். இன்றைய முட்டை விலை, இன்றைய கோழியின் விலை என்று இப்பொழுது எல்லாம் யாரும் போர்டு வைப்பதில்லை என்பதை நானே கண்கூடாக பார்க்கிறேன். ஆனால், price finder என்ற தளத்தில் price comparison இல்லாமல் எப்படி? உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். உங்களால் புதுபுது கஸ்டமர்களை அடையாளம் காண முடியும் என்று நம்பிக்கை இருந்தால் இதில் சேருங்கள். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. விருப்பம் இருந்தால் இணையலாம். அதுவும் பைசா செலவு இல்லாமல். விருப்பம் இல்லை என்றால் விலகிகொள்ளலாம். எந்த கேள்வியும் கேட்கபடாது. ஏனெனில் வெண்டார்களின் முழு சுதந்திரத்தை Price finder மதிக்கிறது.
Offers: கடைகளை கடக்கும்போது நிறைய கடைகளில் ஆஃபர் போர்டுகள் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் சேர வேண்டிய கஸ்டமர்களுக்கு போய் சேருகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உங்கள் கடையை Pricefinder.in யில் ஒரு கஸ்டமர் பார்த்தார் என்றால் அவருக்கு உங்கள் கடையின் முழு Picture ம் கிடைத்துவிடும். உங்கள் கடை விபரங்கள், உங்கள் கடையின் பொருட்கள், உங்கள் கடையின் ஆஃபர்கள் என அத்தனைய விபரங்களையும் ஒரு சேர ஒரு கஸ்டமர் பார்க்கும்போதுதான் அங்கே ஒரு முழுமை இருக்கும். அதைதான் நாங்கள் செய்கிறோம். எந்த ஏரியாவில், எந்த கேட்டகரியில் என்ன ஆஃபர் போய் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். வெண்டார்கள் தங்கள் கடைகளின் ஆஃபர்களை இதில் ஏற்றுவதன்மூலம் அது கஸ்டமர்களுக்கு முழுமையாக போய் சேரும்.
டெலிவரி; மளிகை கடை முதற்கொண்டு, மருந்தகம் வரை அனைவரும் தங்கள் கஸ்டமர்களுக்கு டெலிவரியை அவர்களே கொடுக்கிறார்கள். சில கடைகாரர்கள் டெலிவரி செய்வதற்கு என்றே ஆட்களை அமர்த்தி இருக்கிறார்கள். டெலிவரியை பொருத்தவரை கடைகாரர்களே இதனை மேற்கொள்ளவேண்டும். Pricefinder.in டெலிவரியை மேற்கொள்ளாது. இது பெரும் பிரச்சனையாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில், ஒரு நாள் டெலிவரி என்று அறிவித்து உணவு இடைவேளை மற்றும் பிரேக் டைமில் இதனை கடைகாரர்கள் தாங்களே செய்யலாம். டெலிவரிக்கு பணம் வாங்கினால் கஸ்டமர்கள் வரமாட்டார்கள். அதனால்தான் டெலிவரியை பொருத்தவரை அவரவர்கள்தான் செய்யவேண்டும்.
பிஸிகல் மற்றும் சர்வீஸ் இண்டஸ்டரியை பொருத்தவரை அனைத்து விபரங்கையும் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். அடுத்தது Properties க்கு வருவோம்.
Property: Pricefinder என்பது பொதுவாக அனைத்துக்கும் பொருந்தும். மிகவேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறையில் நாம் கால் பதிக்காவிட்டால் எப்படி? அதுவும் ஹைப்பர்லோக்கல் மார்கெட்ப்ளேஸாக இருக்கும் நாம் ரியல் எஸ்டேட்டை தவிர்க்க முடியாது. இது மற்ற Property listing தளம் போல செயல்படும். இதில் Listing ஏற்றுவதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. உங்கள் போன் நம்பர் மற்றும் அனைத்து விபரங்களையும் நீங்கள் இதில் வெளிப்படையாக அறிவிக்கலாம். அதன் மூலம் கஸ்டமர்கள் உங்களை நேரடியாக அணுகுவார்கள். இதில் எந்த மீடியேட்டரும் நடுவில் இல்லை என்பதால் யாருக்கும் நீங்கள் எந்த சார்ஜூம் கொடுக்கவேண்டியதில்லை. அதேபோல, எங்கள் தளத்தில் property listing செய்வதற்கு அதன் உரிமையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. உரிமையாளர்கள் சார்பாக வேறு யாரும் பதிவேற்றம் செய்ய அனுமதி இல்லை. நாங்களே உரிமையாளருக்கும், கஸ்டமருக்கும் இடையில் இருந்து இதனை கமிஷன் அடிப்படையில் கொடுப்பதால், வேறு மீடியேட்டர்களுக்கு இதில் அனுமதி இல்லை. மன்னிக்கவும். எங்கள் மூலம் அதாவது, கஸ்டமர்கள் நேரடியாக எங்களை அணுகி, எங்களால் ஒரு property முடிகிறது என்றால் அதில் 1 – 2 பெர்சண்ட் கமிஷன் வசூலிக்கப்படும். எங்கள் கமிஷன் ரேட்களை இதில் பார்த்து கொள்ளுங்கள்.
Pricefinder.in ஆனது வெளிப்படை தன்மையின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள தளம். இதில் வெண்டார்களின் விபரங்களை மறைக்ககூடாது என்பது எங்களின் தலையாய நோக்கம். இதில் எந்தவித சமரசமும் கிடையாது.
Property listing ஐ ஏற்றியபிறகு அது நல்லபடியாக வேறு ஒருவர் மூலம் விற்றுவிட்டாலும், வெண்டார்களை நாங்கள் கேட்டுகொள்வது எல்லாம் நீங்கள் உங்கள் Listing யின் ஸ்டேடஸை மாற்றவேண்டும் அப்பொழுதுதான் எங்கள் கஸ்டமர்களுக்கு சரியான ஸ்டேடஸ் போய் சேரும். காலாவாதியான லிஸ்டிங்கை பல நாட்கள் வைத்திருப்பது, ஆக்டிவாக இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த தளம் சரியாக இருக்காது. வெண்டார்களின் சுதந்திரத்தை மதிக்கும் நாங்கள் எங்கள் கஸ்டமர்களையும் பார்க்கவேண்டும். அதனால்தான் அனைத்து வெண்டார்களுக்கும் இதன் மூலம் சொல்லிகொள்வது, உங்கள் ஸ்டேடஸை அவ்வபோது மாற்றுவதும், ஆக்டிவாக இருப்பதுமே உங்களுக்கு உங்கள் வியாபாரத்தின் மீது உள்ள கடமை உணர்ச்சியை காட்டும்.
இந்த Property செக்டாரில் ஒரு புதுமையை புகுத்தவேண்டும் என்று நினைத்துதான் இதில் இறங்கி இருக்கிறோம். அதாவது வீடு மற்றும் கடை வாடகை விடுபவர்களுக்கு இந்த ஜடியா. ஒரு வீடு அல்லது கடை வாடகை விடும்போது, அவர்கள் அங்கே Tolet என்று எழுதி அதில் போன் நம்பரையும் எழுதுவார்கள். தேவைப்படுவோர் அந்த நம்பரை கால் செய்து வாடகை அட்வான்ஸ் மற்ற பிற விபரங்களை கேட்டறிவார்கள். இது காலங்காலமாக இருந்துவரும் விஷயம். இதில் ஒரு சிறு மாறுதல் செய்திருக்கிறோம். அதாவது, Tolet மற்றம் மொபைல் நம்பருடன், Pricefinder.in யில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ள அந்த property யின் URL link QR code ஆக சேர்க்கப்படும். இதன்மூலம் தேவைப்படுவோர், அந்த QR code ஐ ஸ்கேன் செய்து Property யின் அத்தனை விபரங்களையும் பார்த்துவிடலாம். ஓனருக்கு போன் செய்து, ஒரு நாள் அப்பாண்யின்ட்மெண்ட் வாங்கி, கடையை திறந்து பார்ப்பதற்கு பதில் கடை புகைபடங்களை எளிதில் பார்த்துவிடலாம். பிடித்து இருந்தால், ரேட்ஸ் உங்களுக்கு சரியாக வரும் என நினைத்தால் நீங்கள் ஓனருக்கு போன் செய்து பேசலாம். இதன்மூலம் நிறைய நேரம் மிச்சமாகும் இருவருக்கும். அனைத்து வாடகை வீடுகள் மற்றும் கடை லிஸ்டிங்கில் கூகுள் மேப் லிங்க் சேர்ப்பது கட்டாயம் என்பதால் நீங்கள் தேடும் நேரம் மிச்சம். மற்ற Properties தளங்கள் இல்லாமல் எல்லா Filters ம் இலவசம். Premium features, free features என்ற பாகுபாடு Pricefinder.in யில் இல்லை. அதனால் உங்கள் Property தேடல் ஒரு தளத்தில் முடிவடைந்துவிடும்.
Featured Listing: எனக்கு இதில் அறவே நம்பிக்கை இல்லை. Filter மற்றும் Sorting order யில் புதிதாக வந்துள்ள கடைகள், ஆஃபர்ஸ் மற்றும் Properties இருக்கும். எந்தவிதத்திலும் Featured என்று அனைத்துக்கும் மேலாக காட்டி பணம் வசூலிக்ககூடாது என்பது எங்கள் நோக்கம்.
Verified : கூடுமானவரை பிஸினசோ, ஆஃபரோ, ரியல் எஸ்டேட்டோ உங்கள் லிஸ்டிங் மீது Verified என்று இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இந்த Verified என்பது நீங்கள் எங்களின் வெண்டார் என்பதை உறுதிபடுத்துவது அதாவது கடைகாரர் எங்கள் தளத்தில் Vendor ஆக இணைந்து உள்ளார் என்பதற்கான அடையாளம். அப்படி இல்லை என்றால் Claim என்று இருக்கும். அது கஸ்டமர்களுக்கு நம்பிக்கை தராது. Claim என்ற லிஸ்டிங்ஸ் நாங்கள் ஏற்றியது. உதராணத்திற்கு டாக்டர்கள், மெடிக்கல்ஸ், சூப்பர் மார்கெட் என்ற பல கேட்டகரிகளை மடிப்பாக்கம் மற்றும் சுற்றுபுற ஏரியாவில் ஏற்றிகொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் கஸ்டமர்களுக்கு போன் நம்பர் மற்றும் மற்ற விபரங்கள் சுலபமாக தேடுவதற்குகாக நாங்களே சேர்த்தது.
வெண்டார் விபரங்கள்; வெண்டார்களுக்கு இங்கு முழு சுதந்திரம் உண்டு, அதே நேரத்தில் எங்கள் ப்ளாட்பார்மில் சேருவதற்கு உங்களின் சில விபரங்களை நாங்கள் பெறவோம். இதுகூட எங்கள் கஸ்டமர்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்குதான்.
கஸ்டமர் விபரங்கள்; இது மார்கெட் ப்ளேஸ் என்பதால் நீங்கள் பரிவர்த்தனை செய்யும் கடைகாரர்களிடம் உங்களின் அந்த ஆர்டர் விபரங்கள் இருக்கும். இந்த நேரத்தில் எங்கள் கஸ்டமர்களுக்கு நாங்கள் சொல்லிகொள்வது, உங்களின் அவசர தேவைக்கு உங்கள் மேப் லொகேஷனை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஏனேனில் அது அவசர காலங்களில் உதவியாக இருக்ககூடும்.
Jobs: ஒரு குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து நாம் நமது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறோம் என்பதால் அந்தந்த ஏரியாவில் இருக்கும் கடைகள், கம்பெனிகளுக்கு தேவையான வேலை வாய்ப்பையும் இதில் இலவசமாக கொடுப்பதற்கு இதனை வைத்துள்ளோம். இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று Job Wanted மற்றொன்று Job Offer. Job Wanted என்றால் ஒரு வேலை தேடுபவராக நீங்கள் இருந்தால் உங்கள் விபரங்களை இங்கே பதிவிட்டால் அது வேலை வழங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும். அதன்மூலம் உங்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும். இங்கே நாங்கள் சொல்லிகொள்வது. வேலை தேடுபவர்கள் தங்கள் விபரங்களை கொடுக்கும்போது பெர்சனல் contact ஐ கொடுக்கும்போது அது அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். அதனால் இதனை கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் உங்களின் விருப்பம்.
வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் கடைகள், கம்பெனிகள் இங்கே இலவசமாக பதிவிடலாம். இந்த வேலை வாய்ப்புகள் அந்தந்த locality யில் இருப்பதால் உங்களுக்கு அதிகமான ரெஸ்பான்ஸ் கிடைக்க ஒரு வாய்ப்பு இது. அதுவும் பைசா செலவு இல்லாமல்.
News:
லோக்கல் மார்கெட்டை கவர் செய்கிறோம் என்று இறங்கியாகிவிட்டது. அந்தந்த பகுதி செய்திகள் இல்லாமல் எப்படி? இது வெறும் செய்தி மட்டும் அல்ல உங்கள் பகுதியில் நடக்கும் முக்கிய events, announcements, offers என அனைத்தும் அந்தந்த பகுதிவாரியாக பதிவிடப்படும். இதனை பதிவிடுவது பெரும்பாலும் அந்த பகுதியில் உள்ளவர்களே.
கஸ்டமர்களுக்கு ; இந்த தளத்தின் அனைத்து விபரங்களையும் இங்கே பதிவிட்டுள்ளேன். இந்த தளம் ஒரு ஹைப்பர்லோக்கல் மார்கெட் ப்ளேஸ் இதில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அவர்கள் பொருட்களை ஏற்றலாம் அதனை இங்கு விற்கலாம். Verified என்று நாங்கள் சொல்வது எங்கள் தளத்தில் அவர் தன்னுடைய கணக்கை ஆரம்பித்து உள்ளார் என்பதற்கான அடையாளம். இந்த தளத்தில் இன்றைய தேதியில் COD (Cash On Delivery) மட்டுமே உள்ளது. இதுவும் கஸ்டமர்களின் பாதுகாப்புகாகதான். உங்களுக்கு ஆர்டர் செய்ய அச்சமாக இருக்கிறது, நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது என்றால் நேரடியாக எங்கள் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். நாங்கள் உங்களுக்காக செய்து கொடுக்கிறோம். கூடுமானவரை நாங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறோம். இந்த தளம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று நினைக்கிறோம். உங்களுக்கு இதில் இணைய விருப்பம் இருந்தால் எங்களை pricefinder.in@gmail.com அல்லது Pricefinder.in/Contact-us மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
ஓகே, இறுதியாக இந்த நீண்ட கட்டுரையை இத்துடன் முடித்துகொள்ளலாம் என நினைக்கிறேன். கண்டுபிடிப்புகள் என்பது தேவையின் அடிப்படையில் வருபவை. இந்த தளத்தின் வருகை என்பது என்னுடையை தேவை பூர்த்தி ஆகாமல் இருந்ததால் வந்தது. மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் படித்து இருந்தால் உங்களுக்கு ஒரு கேள்வி அல்லது சந்தேகம் வரும். கஸ்டமர்களின் purchase history அடிப்படையில் எங்கள் கஸ்டமர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை Buy now pay later அடிப்படையில் கொடுக்க இருக்கிறோம் என்று சொல்லி இருப்பேன். இந்த ஆப்ஷன் ஆனது எங்களது own dark store களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது நாங்கள் சொந்தமாக உருவாக்கியுள்ள மளிகை, காய்கறி போன்ற கடைகளின் பேஜில் PriceFinder’s Store என்று லேபிள் இருக்கும் கடைகளில் வாங்கும் கஸ்டமர்களின் purchase history ஐ வைத்தே நாங்கள் Buy Now Pay Later ஆப்ஷனை வழங்க முடியும். அதேபோல் நாங்கள் லிஸ்ட் செய்துள்ள சர்வீஸ் மற்றும் இன்ன பிற சேவைகளை வாங்கும் கஸ்டமர்களுக்கே இது பொருந்தும். இந்த லிஸ்ட் செய்யப்பட்டுள்ள மற்ற கடைகளில் வாங்கும் கஸ்டமர்களுக்கு இது பொருந்தாது. வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தொடர்புகொள்ளவும், pricefinder.in@gmail.com