இந்த pricefinder.in தளத்தின் பின்னால் இருப்பது, நான்தான், Mohamed Kamil T. ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு இந்த தளத்தின் டெக்னிகல் விஷயங்களிலிருந்து, டேட்டா என்ட்ரிவரை நானேதான் பார்க்கிறேன்.
அடிப்படையில் நான் வெப்டெவப்மெண்ட் பிஸினஸ் செய்பவன் அதனால் எங்கே எப்படி போனாலும் இந்த வெப்சைட் தவிர்த்து என்னால் நினைக்கமுடியவில்லை என்பது உண்மை. இந்த டுமைன் பதிவு செய்து கிட்டதட்ட 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எங்களுடைய pricefinder handle ஐ facebook யிலோ அல்லது X யிலோ செக் பார்த்தால் எத்தனை வருடங்களாக இதனை நான் மெயின்டெயின் செய்து கொண்டு வருகிறேன் என்று தெரியும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. ஒரு வியாபாரம் அல்லது ஒரு தளம் இயங்குகிறது என்றால், அதன் நம்பிக்கை அதனை இயக்குபவர்கள் எவ்வளவு ஆர்வமாக இதில் இருக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. எனக்கு என்னவோ அதில் மிகுதியான ஆர்வம். உண்மை சொல்லவேண்டும் என்றால் இந்த தளத்தின் மூலம் இதுவரை ஒரு பைசா லாபம் வந்தது கிடையாது ஆனால் பலர் பயன் அடைந்திருக்கிறார்கள்.
Pricefinder.in ஐ பொருத்தவரை இதனை ஒரு side project ஆக ஒதுக்கி தள்ளமுடியாது. ஏனெனில் 7 வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த ஒரு கான்செப்ட் இன்று மெருகேறி அன்றாட பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு நல்ல தளமாக உருவாகி இருக்கிறது. அதனால், இதனை முழுமையாக நிர்வகிக்க முடிவு செய்து, அதன் முதல்படியாக, கால் செண்டர் மற்றும் வெண்டார்களை இதில் இணைப்பது என்பதை தீர்மானித்திருக்கிறேன்.
எந்த ஆர்டரும், எந்த போஸ்டும் என்னை தவிர்த்து சென்றுவிடாது என்பதால், கஸ்டமர்களின் ஆர்டர்கள் சரியாக வெண்டார்களை போய் சேரும். அதற்கான ஏற்பாட்டை நான் முழுமையாக செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கிறது.
சென்னை மடிப்பாக்கதில் வசிப்பதால், தற்போதைக்கு மடிப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இதனை கொண்டு சேர்ப்பதில் முனைப்பாக இருக்கிறேன். பின்னர் இது மற்ற பகுதிகளுக்கு விரிவு செய்யப்படும்.